வியாழன், 30 ஜூன், 2011

கொள்ளை அடிக்கும் கொள்ளைகார பல்கலைகழகம்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

வலைபக்கங்களில் வந்து பாக்கும் போது, சட்டு என்று பட்ட இந்த செய்தி, என்ன செய்வது உடனே பகிர்ந்துவிட்டேன்!...அந்த கொள்ளை கார பல்கலைகழகம் இவுங்க தான்!
"நாடு நலம் பெற, கையூட்டுகளை களைய;
ஊழலை ஒழித்து, நாட்டில் முதலீட்டுகளை பெருக்க..."

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவனர் திரு. பச்சைமுத்து தொடங்கிய இந்திய ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதி தான் நீங்கள் மேலே படித்தது.

"தேசத்தின் திருப்புமுனை...மாற்றத்தின் ஏவுகணை" என்று தன்னை வர்ணித்துக் கொள்ளும் கட்சி நடத்தும் பல்கலைக்கழகத்தின் அழகென்ன? தேர்தல் அறிக்கையில் கண்ட கனவுகள், குறைந்தபட்சம் இவர்களின் பல்கலைக்கழகத்திலேனும் நிறைவேறியதா? பார்க்கலாம் வாருங்கள்.....

சமீப வருடங்களில் எஸ்.ஆர்.எம் தனது தரத்தை உயர்த்திக் கொண்டதில் அதில் படிக்க விரும்பும் மாணவர்கள் இடையே போட்டா போட்டி... யார் அதிக நன்கொடை (?) தருவதென்று ! விலைவாசியைப் போல் இந்த நன்கொடைகளும் கட்டுப்பாடுகளின்றி ஏறிக் கொண்டே போகிறது. இன்றைய சூழலில் அங்கு விற்கப்படும் சில பொறியியல் பிரிவுகளின் விலைப்பட்டியல் இதோ -

கம்யூட்டர் சயின்ஸ் - 2 முதல் 3 லட்சம்
தகவல் தொழில் நுட்பம் - 2 முதல் 3 லட்சம்
மெக்கானிக்கல் - 6 முதல் 7 லட்சம்
எலக்டிரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் - 6 முதல் 7 லட்சம்


மேற்சொன்ன அன்பளிப்பு (?) இங்கு பல வகைகளில் வசூலிக்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வரும் வரை, தனியார் கல்லூரிகளில் தம் பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்களும், மாணவர்களும் காத்திருப்பதில்லை. அதை எஸ்.ஆர்.எம் போன்ற கல்லூரிகளும் விரும்புவதில்லை. பரிட்சை முடிந்த கையுடன் கல்லூரி நிர்வாகிக்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் பேரம் தொடங்கிவிடுகிறது. பேரம் படிந்ததென்றால், ஒரு துண்டுச் சீட்டில் நீங்கள் விரும்பும் பாடப்பிரிவு எழுதித் தரப்படும். இதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியான உடன், நீங்கள் தேர்ச்சி அடைந்திருந்தால் உங்கள் சேர்க்கை உறுதி செய்யப்படும். தேர்வு முடிவுகள் வெளியான உடன் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வழக்கம் போல் நீங்கள் தரும் கையூட்டைப் பொறுத்து விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். கையூட்டிற்கான வாய்வழி ஒப்பந்தம் சுமுகமாய் முடிந்ததென்றால், பல்கலைக்கழகத்தின் காண்டீன் மற்றும் கார் பார்க்கிங் இணைந்திருக்கும் பகுதிக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு மாருதி சுவிப்ட் (Switft) போன்ற ஏதாவது ஒரு காரில் (ஜன்னல்கள் முழுதாய் மறைக்கப்பட்ட என்று சொல்லத் தேவையில்லை) உங்களின் பணம் வசூலிக்கப்படும். இந்தக் காருக்குள் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தவறியும் உங்கள் பணம் கண்காணிப்புக் கேமராக்கள் நிறைந்த நிர்வாக வளாகத்தினுள் வசூலிக்கப்பட மாட்டாது. ஒருவேளை நாளை வருமான வரித்துறையினரின் சோதனை வந்துவிட்டால்...? இந்த ஆதாரங்களை காட்டி நாங்கள் பணமே வாங்கவில்லை என்று சத்தியம் செய்யலாம் இல்லையா?

இந்த பேரங்களை முடித்துத் தருவதெற்கென்றே பல இடைத்தரகர்கள் உண்டு. எஸ்.ஆர். எம் - ல் சேவை செய்யும் பணியாளர்களும் இதில் அடக்கம். இன்னும் சிலரோ குறிப்பிட்ட சில கல்லூரிகளுக்கென தனி ஏஜெண்டுகளாக இருப்பர். அந்தந்த கல்லூரிகளில் மொத்தமாய் இவர்கள் சில சீட்டுகளை குத்தகை எடுத்திருப்பர். அந்த சீட்டுகளுக்கு அவர்கள் சொல்வது தான் விலை. ரூ. 25,000 முதல் கிடைக்கும் கமிஷனுக்காக அங்கு படிக்கும் சில மாணவர்களே இடைத்தரகர்களாய் மாறுவது தான் கொடுமையின் உச்சம்.

பொறியியல் படிப்பிற்கு ஆண்டிற்கு ரூ.2 லட்சம் கட்டணமாய் வசூலிக்கும் பணத்திற்கு ரசீது வழங்கும் எஸ்.ஆர்.எம். இந்த வசூல் வேட்டையை மட்டும் மறந்தும் கணக்கில் காட்டுவதே இல்லை. ஏன்? கொள்ளையடித்த பணத்திற்கு வரி கட்ட வேண்டுமென்பதலா? அல்லது நீங்கள் லஞ்சம் தர வேண்டும் என்பதலா?

கொள்ளைப்புரத்தில் மாணவர்களிடம் வசூலிக்கும் பணம் கையூட்டு அல்லாமல் வேறென்ன? ரகசியமாய் பண வேட்டை நடத்தும் உங்களுக்கு "நாடு நலம் பெற, கையூட்டுகளை களைய..." என்று தேர்தல் அறிக்கையில் சொல்ல என்ன அருகதை இருக்கிறது? நீங்கள் கொள்ளையடித்த பணத்தை அரசியல்வாதிகள் பங்கு போடக் கூடாதென்று தானே நீங்கள் அரசியல் கட்சியே ஆரம்பித்தீர்கள். இந்த வேஷம் எதற்காக? உங்கள் அரசியல் பாதுகாப்பிற்காக மக்களை ஏன் முட்டாளாக்க நினைக்கிறீர்கள்?

கல்வியை யாரும் சேவையாய் செய்ய வேண்டாம். பலர் மாற்றியபடி கல்வி வணிக மயமாகவே இருக்கட்டும். மேலை நாடுகளில் கல்வி பல பல்கலைக்கழங்களில் வணிக மயமாக்கப்பட்டாலும் அவை முறை தவறி செயல்பட்டதில்லை. அவர்கள் அதிக கட்டணம் வசூலித்தாலும், லஞ்சமாய் நன்கொடைகள் கேட்பதில்லை. படிக்கும் போதே மாணவர்களுக்கு கல்லூரிகளில் பகுதி நேர வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். இது நம் நாட்டிலும் வந்தால் மாணவர்கள் இடைத்தரகர்களாகும் கேவலமும், நெறி தவறும் அவலும் தடுக்கப்படலாம்.

எந்தக் கல்லூரி பணம் வாங்கவில்லை என்ற வாதம் ஏற்புடையதல்ல....எல்லா கல்லூரியும் வாங்குகிறதென்றால் எல்லோர் மீதும் நடவடிக்கைத் தேவை. இதற்கு சாட்சியங்கள் வேண்டும் என்றால் மாணவ சமுதாயமே நிற்கிறது மௌன சாட்சியாய்.

அதிகாரபூர்வமாய் நாம் புகார் தர வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்க வேண்டாம். முந்தைய ஆட்சியில் கொள்ளையடித்தவர்களை, கொட்டமடித்தவர்களை புகார்கள் ஏதுமின்றி அரசே முன்வந்து நடவடிக்கை எடுப்பது போல், கல்வித்துறையிலும் நடக்க வேண்டும். ஊருக்கே தெரிந்த உண்மை அரசிற்கு தெரியாதா என்ன? மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பாரா?


நன்றி: சிவாஜி டிவி இணையத்தளம்
    

புதன், 29 ஜூன், 2011

ப்ளாக் பப்ளிசிட்டி பண்றது எப்புடி? டிப்ஸ்! கண்ணா டிப்ஸ்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,


ப்ளாக் எழுதுனா போதுமா, அதே எப்புடி மத்தவுங்கள பாக்க வைக்கிறது... என்ன செய்யலாம் உங்களை மாதிரி தான் நானும் யோசிச்சேன், 

நான் ப்ளாக் எழுத தொடக்கி ஆறு மாசம் ஆகுது. 

நான் வந்த அனுபவத்தை வச்சு சொல்றேன்....      "TIPS"

> முதல்ல கவனிக்க வேண்டியது என்னானா, நம்ம எழுதுற பதிவின் தலைப்பு, கொஞ்சம் கவரும் விதத்தில் இருக்கணும் நீங்க எழுதுற விஷயம் என்னவா இருந்தாலும் பரவா இல்லை, தலைப்பு வித்தியாசமாகவும் கவரக்குடிய தாக இருந்தால் போதும் வாசகர்கள் வந்துட்டு போவார்கள்....

( சன் பிக்ச்செர்ஸ் எடுத்த படம்லாம் சரி இருக்காது, ஆனா " trailer " பட்டய கிளப்பும்- ல, அந்த மாதிரி சொல்றேன்  )  

> பதிவு எழுதும்போது தலைப்பை ஒரு வண்ணத்திலும், விஷயத்தை  மற்ற்றொரு வண்ணத்தில் எழுதுவது நல்லது...
> எழுத்துகளை தடித்த எழுத்துக்களில் எழுதுவது சிறந்தது.

>கண்டிப்பா பதிவில் அதற்க்கு தேவையான படம் இருக்க வேண்டும், அப்ப
தான் நல்ல இருக்கும்.
> வல வலன்னு இல்லாம, சும்மா நறுக்குன்னு இருந்தாலே போதும், 
( விஷயத்தை மட்டும் சொன்னா போதும் )

> நம்ம வலைபக்கத்தை பாக்கும் போது சிக்கிரம் வர்ற மாதிரி வச்சுகிரனும், ப்ரீயா  கிடைக்குதுன்னு சொல்லி எல்லா " gadget & widget " add பண்ணா ஓவரா " load" ஆகும் அதுனால வர்ற வாசகர்கள் எரிச்சல் அடைவார்கள்...
( " over loading "  உடம்புக்கு ஆகாது )

> தேவையான " gadget & widget " மட்டும் வைங்க, தேவை இல்லாததை
" remove " பண்ணிருங்க....

> சிலர் ப்ளாக் எழுதுறேன் சொல்லிட்டு " copy, paste " பண்ணுவாங்க, copy paste பண்ணும் போது எல்லாத்தையும் பண்ணாதிங்க, முக்கியமானதை மட்டும் பண்ணுங்க...
( தப்பு செஞ்சா தெரியாம செய்யனும் )

> " comment " கொடுக்குறத ப்ரீ பண்ணுங்க, அதாவது உங்களுக்கே தெரியும் வேணாம்...

> இது ரகசிய டிப்ஸ் என்னன்னா, நம்ம ப்ளாக் யாரும் பாக்கலைன்னு கவலைபடாதிங்க, சில பிளாக்கர்கள் நல்ல எழுதுவாங்க அவுங்க ப்ளாக்ல போயி ஒரு வித்தியாசமான( avoid adult content ) " comment " போடுங்க உடனே யார்ரா இவனு பாபங்க எப்புடி...

> பதிவை பிரபலபடுத்த   பதிவு இடுகைகளை  சில " BLOG AGGREGATOR "   
தளங்களில் பதிவு செய்யலாம்...

அவற்றில் சில

> தமிழ்மணம், இன்ட்லி, திரட்டி, தமிழ் 10  மற்றும் சில  போன்ற தளங்கள் வலைப்பதிவை ஊர் அறியே செய்யும்... 

இப்புடி செய்ங்க,
உங்க பதிவை யாரு பாக்குறா இல்லையோ நான் பாக்குறேன்....

செவ்வாய், 28 ஜூன், 2011

சிக்கிய ஸ்ரேயா சீரிய சித்தப்புகள்!

என்னங்க  சொல்றிங்க,
ஆமாங்க,

கடந்த வார பிரபலம் நடிகை " ஸ் ரேயா " ஆமாங்க இணையத்தில் இவுங்க இல்லாத செய்தியே இல்ல, அந்த அளவுக்கு போட்டு தாக்கியிருக்காங்க....சமிபத்திய நிகழ்வுகளில், புகைப்பட காரருடன் மோதல்.... 

"மேல எடு கீழ எடுக்காதே" அப்புடி இப்புடி சொன்னங்க... " ஸ் ரேயா " ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றபோது அவரை தாறு மாறாக படம் பிடித்த புகைப்பட கலைஞரை மிரட்டினார் என்றும் கூறப்பட்டது.....

அவர் உடைய தரப்பிலோ எனக்கு போட்டோ-னா அலர்ஜி சொன்னாங்க....

அடுத்த மேட்டர்:

பின்னர் 25 வயதுக்குட்பட்டோர் குடிக்க ஆதரவு கொடுத்ததற்காக சமூக அமைப்புகளிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது... இப்படி எல்லாமே வில்லங்க விவகாரங்கள்.

இப்ப சூட்டிங் ஸ்பாட்டில்:
                  ரசிகர்கள் தள்ள கிள்ள, ஸ்ரேயா ரொம்ப சிரம பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது....

படப்பிடிப்பு குழுவினரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ரசிகர்கள் முண்டியடித்து போய் ஸ்ரேயாவை சுற்றி வளைத்தனர். சிலர் கைகளை பிடித்து இழுத்தனர். சிலர் இடுப்பில், கழுத்தில் என வாய்ப்பு கிடைத்த இடங்களில் தொட்டனராம். சில குறும்புக்கார இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிடுவதுபோல ஸ்ரேயா மீது விழுந்து கிள்ளினார்களாம்.


இப்புடி அப்புடின்னு ஒரே "ஸ்ரேயாயனம்" தான் இணையத்தில் போங்க  !...


நம்ம கொஞ்சம் தோண்டி பாத்ததுல ஸ்ரேயாவுக்கு தமிழ்ல ஒரே ஒரு படம் தான் இருக்கு, அது நாலா அவுங்க சுய பப்ளிசிட்டி -க்காக   இவுங்க பன்னிருக்கலாம்னு சொல்றாங்கப்பா!....

 

திங்கள், 27 ஜூன், 2011

அம்பானிக்கு ஒரு நியாயம்! மத்தவனுக்கு ஒரு நியாயமா?

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

நீங்கெல்லாம் கேள்வி பட்டிருப்பிங்க, உலகிலேய மிகப்பெரிய சொகுசு வீடு இந்தியாவுல மும்பைல "முகேஷ் அம்பானி" கட்டியிருக்கார் அதோட மதிப்பு  4500 கோடி.... அது மட்டும் இல்ல அதுல ஆடம்பர வசதிகள் அதிகமா இருக்கு!...அது இல்ல நம்ம மேட்டர்!

 அந்த இடம் அவருக்கு சொந்தமான இடம் இல்லையாம், இசுலாமிய வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடமாம், அதை அவர் திருட்டு-தனமாக  அபகரித்து வீடு கட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது...

இதை காவல்துறை வழக்கு பதிவு செய்தது, ஆனால் உடனே கிடப்பில் போட்டுவிட்டது...

இது என்னங்க நியாயம்!...

அம்மாநில முதலமைச்சர் எனக்கு தெரியாது என்று கூறுகிறார்.....

அது மட்டுமா: 

                        அவர்தான் இந்தியாவின் பெட்ரோல் சுத்திகரிப்பு தொழில் செய்யும் ஜாம்பவான்!.. இந்தியாவுக்கு பெட்ரோல் வந்தால் உரிய   வரி கட்டி இறக்க வேண்டும், தற்பொழுது அதிலும் ஊழல்! ஏறகுறையே "1 லட்சம்" கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளார்.....
இப்படி அடுக்கனகான புகாருக்கு சொந்தகாரர் " இந்தியாவின் உச்ச கோடிஸ்வரர் முகேஷ் அம்பானி தான்!...
ஒரு நாளைக்கு அப்புடி இப்புடி கூச்சல் போட்டனர் ( ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சியினர் )  அவ்ளோதான்! அதுக்கு அப்புறம் பேட்சயே  காணாம்...

பாருங்க மக்களே:
           நுறு. இரனுறு லஞ்சம்  வாங்குற சாதான பியுனுக்கு என்னகதி! ஆனா கோடி கோடி யாக அடிக்கும் இவனுக்கு என்ன மரியாதை....

மக்களே இந்திய ஜனநாயகம் நாடுன்னு சொல்றாங்களே, பாத்திங்களா அவனுக்கு ஒரு நியாயம், இவனுக்கு ஒரு நியாயம் தான்.... 

பேசமா இந்தியாவுல இந்த மாதிரி  பிரச்சனைகளை சரி கேட்ட கொஞ்ச காலத்துக்கு ராணுவ ஆட்சியே  கொண்டு வரலாம் பா!

ஞாயிறு, 26 ஜூன், 2011

தலை சிறந்த தமிழ் தளங்கள்!...

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க...

நம்ம ப்ளாக் மட்டும் படிச்சா போதுமா, சில நல்ல ப்ளாக்குகள் இருக்குங்க பலருக்கு தெரிஞ்சுருக்கலாம், சிலருக்கு தெரியமா இருக்காலாம்...அதுல என்னோட தரவரிசை:

முதல் இடத்தில இருப்பது " நம்ம வினவு தளம் " தமிழனுக்கு மற்றும் ஏழைகளுக்கு ஆதரவாகவும் , அந்நிய, பார்பன, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக துணிச்சலாக எழுத கூடிய தளம் தான் நம்ம வினவு தளம்.

மற்ற தளங்கள் :                                                          www.uyirmai.com

தமிழ் நாட்டின் " wikileaks "  என்று அழைக்கப்பட்ட தளம் தான் இது, திமுக ஆட்சி முடிவுக்கு வருவதற்கு இதுவும் ஒரு காரணம் , சசிகலாவின் உறவினர் என்றாலும் திமுக ஆட்சியின் அடக்கு முறைகளை சுட்டி காட்டியது இந்த தளம்...

இந்த தளத்தின் தாகத்தில தான் நானே "ப்ளாக்" எழுதணும் ஒரு யோசனை தோனுச்சு.. நீங்களும் பாக்கணுமா!..

                                                   www.savukku.net

மற்றபடி பலரும் எழுதுறாங்க, இருந்தாலும் எனக்கு பிடிச்சவுங்க....

 பிளாக்கர் நண்பர்களான.. கவிதை வீதி சௌந்தர், பனித்துளி சங்கர், சிபி பக்கங்கள்...

அதிக ஹிட்டுகளை பெறக்கூடிய, மாத்தியோசி, அப்படி போடு போன்றவர்களும் நல்ல ஒரு பதிவுகளை தருகின்றன....


பலர் பெயர்களை குறிப்பிடவில்லை என்று கோபமுற வேண்டாம்...

தமிழில் செய்திகள் அறிய :
 > http://thatstamil.oneindia.in/
>http://www.nakkheeeran.com/

இரு தளங்களும் செய்திகள் பகிர்வதில் முன்னோடிகள்!

வெள்ளி, 24 ஜூன், 2011

காங்கிரஸ்யை கை நழுவுகிறார்- கருணாநிதி!.....

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,


டெல்லி போயிட்டு வந்த நம்ம " முன்னாள் முதல்வர் ", அதான் நம்ம கருணாநிதி, மகளை பாத்து நலம் விசாரிச்சுட்டு வந்தார், 

பின்னர் பேட்டி கொடுத்தார் என் மகளை கொசு கடிக்குது அப்புடி இப்புடி சொன்னாரே ஆமா!


டெல்லி போன நம்ம ஆள யாரும் கண்டுகிலயாம், அது நாலா நம்ம ஆளு ரொம்ப டென்சன் ஆயிட்டாராம், அதே போல திமுக அமைச்சர்களை யாரும் மதிக்க மாட்டிகிரான்கலாம்,


நம்ம ஆளு எவ்வொலோ சொல்லியும் மகளுக்கு ஜாமீன்!.. கிடைக்கலையாம் என்ன செய்ய! நம்ம செஞ்ச பாவம்....


தயாநிதி மற்றும் அழகிரி பற்றி முக்கியமான கோப்புகளை ஜெ! பிரதமரிடம் கொடுத்துள்ளார்....


அழகிரி மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து, ஒரு தீவை வாங்கியதர்க்கான முக்கிய ஆதாரத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது...


திமுக வெளியில் வந்தால், உங்களுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவு தர தயார் என்று ஜெ! உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...

உடனே திமுக அமைச்சர்களை பதவி நீக்க  வேண்டும் என்று பிரதமரிடம் ஜெ கோரிக்கை வைத்துள்ளார்...

விரைவில் ஜெவும்  சோனியாவும் சந்திக்க உள்ளனர்!...


இதனால் நம்ம ஆளு, காங்கிரஸ்-யை கைவிட முடிவெடுத்துள்ளார் , இதற்க்கு அழகிரி மற்றும் தயாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்... ராசாத்தியோ கூட்டணியை முறிக்க வேண்டும் என்று முரண்டு பிடிக்கிறார்!...

இருக்காதே பின்னே பெத்தவளுக்கு தான் தெரியும் பிள்ளை பாசம்!....


இதனால் முன்றாவது அணியில் செரபோறார் நம்ம ஆளு! இல்லேன்னா நான்காவது அணி ஆரமிப்பார்....


கூட்டணி மாற்றம் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது பின்னதகவோ இருக்கலாம்...
வியாழன், 23 ஜூன், 2011

பின் வாங்கிய " BBC & CNN " தொலைகாட்சிகள் !

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

உலக அளவில் பேசப்படக்கூடிய இரு ஆங்கில தொலைகாட்சிகள் " BBC & CNN",  உலக நிகழ்சிகளை முதன்மை படுத்தவும்,  நிகழ்வுகளை நேரலையில் படுத்தி    மக்கள் காண விரும்பும் தொலைக்ட்சிகள் இவைகள்..
தற்பொழுது இந்த தொலைகாட்சிகளின் பார்வையாளர்கள் குறையே தொடங்கியுள்ளனர்,

ஏனென்றால் இலங்கை, எகிப்து, சிரியா விவரங்களை இந்த தொலைகாட்சிகள் இருட்டடிப்பு செய்தன, இதனை சாதகமாக பயன்படுத்தி புதிய இரு ஆங்கில தொலைகாட்சிகள் அதிக பார்வையாளர்களை தன் வசம் இழுத்துள்ளன...

அந்த  தொலைகாட்சிகள்  " AL-JAZEERA & CHANNEL4 " தான்!...

aljazeera தொலைகாட்சி இசுலாமிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளை மைய படுத்திய ஒளிபரப்பி வந்தது, தற்பொழுது அணைத்து நாடுகளின் பிரச்சனைகளையும் முன்நிறுத்தி செய்திகளை ஒளிபரப்பி வருகிறது...

விரைவில் aljazeera- வின் இந்திய கிளை உதயமாக உள்ளது!....உலக அளவில் அதிகம் பேர் பார்க்க கூடிய ஆங்கில தொலைகட்சியாக " aljazeeraa" வளர்த்துள்ளது...

அதே போல மற்ற்றொரு தொலைகட்சியான " channel 4 " ஈழ கொடுமைகளை உலகுக்கு வெளிச்சமிட்டது, இதனால் புதிய பார்வையாளர்களை தன் வசம் இழுத்துள்ளது " channel 4 " தொலைகாட்சி...

இதனால் " bbc & cnn " தொலைகாட்சிகள் பார்வையாளர்களை இழுப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது...

அவ கர்ப்பமானால் உங்களுக்கு என்னடா?...

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

கடந்த இரண்டு நாலா பாக்குறேன், இணையத்திலும்,தொலைகாட்சியிலும், பத்திரிக்கையிலும் இதான் முக்கிய செய்தி...

என்னனா ஐஸ்வர்யா ராய், கர்ப்பமாக இருக்கிறாராம்..., இது தான் முக்கிய செய்தி பாரு!..இது அனைத்து பெண்களும் அடையும் ஒரு உன்னத நிலை, அதுக்கு இப்புடியா, எதோ " BREAKING NEWS " மாதிரி அப்புடி ஒளிபரப்புறாங்க,


ஏன் இப்புடி இருக்கிங்க திருந்துங்க பா!


புதன், 22 ஜூன், 2011

என்கவுண்டர் லிஸ்ட் தாயார் - உத்தரவுக்காக காத்திருக்கும் காக்கிகள் !

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,   

பொதுவா ஜெ! களம்  இறங்கிட்டா, ரௌடிகள் என்கவுண்டர் கண்டிப்பா இருக்கும், வெங்கடசே பண்ணையாரே போட்டதே ஜெ தான்....

அது போல இப்ப ஒரு லிஸ்ட் தாயராகி மேலிடத்துக்கு அனுப்பபட்டுள்ளது, பெரிய மற்றும் சின்ன மேடம் உத்தரவுக்காக காத்திருக்கும் காக்கிகள்....இதுல முதல் பத்து  பேரில், மதுரையே சேர்ந்த 4 பேர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள், இந்த 4  பேரும் அண்ணனின் அடிவிழுதுகள் என்பது குறிப்பிடதக்கது!...


இதற்கான முதற்கட்ட வேலையில் ஆரம்பித்துள்ளது அரசு, சில சிறப்பு அதிகாரர்களை மதுரைக்கு இடமாற்றம் செய்யவும், பலரை மதுரையை - விட்டு அனுப்பவும் உத்தரவு...

இதனால், அடிவிழுதுகள் கலங்கி நிக்கின்றன!...

இருக்காதே பின்னே, 

அண்ணனே ஆடி போய் இருக்கிறார்!
எப்படி விழுதுகளை காப்பாற்றுவார் !


செவ்வாய், 21 ஜூன், 2011

படத்தை வாங்க முடியாமல் கதறும் கலைஞரின் நிதிகள்!.....

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

கடந்த 3  ஆண்டுகளில் வெளியான படங்களில், கருணாநிதியின் பேரன்கள் வெளியிட்ட படத்தை தவிர மற்ற படங்கள் வெளிவந்த தடமே இல்லை அந்த அளவுக்கு இருட்டடிப்பு, ஆட்சியில் இருந்தால் மிரட்டல் என பல இன்னலுக்கு ஆளானார்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ...

ஜெ அரியணையில், ஏறியதிலிருந்து கலைஞரின் நிதிகள், படத்தை வாங்க முடியாமலும், விற்க முடியாமலும் திணறுகின்றன....


சன் எடுக்க நினைத்த படங்கள், கை நழுவி போனது... தற்பொழுது சன் வசம் படம் ஏதும் இல்லை....


அவன் இவன் மற்றும் வேங்கை படங்களை சன் பிக்சர்ஸ் கைவிட்டுள்ளது,


சன் -கே இந்த கதினா, உதயநிதி, தயாநிதிக்கு? உதயநிதி பெரும் பொருட்செலவில் எடுத்த படம் " ஏழாம் அறிவு" பட பிடிப்பு முடிந்த நிலையில், படத்தை வெளியிட முடியவில்லை...

தயாநிதியோ கொஞ்சம் தேம்பா இருக்காரு, காரணம் அவர் பெரும் பொருட் செலவில் எடுத்த படம் அஜித்தின் " மங்காத்தா ", அஜித் ரசிகர் பட்டாளம் ஏராளம், மற்றும் ஜெ-வின் விருப்ப புத்தகத்தில் அஜித்தின் பெயர் இருப்பதால், இந்த படத்துக்கு ஜெ இடையுறு தரமாட்டார் என்பது தயாநிதியின் நம்பிக்கை....


மற்ற நடிகர்கள், தயாநிதியிடம் கொடுத்த கால்சீட்டை திரும்ப பெற்றுள்ளனர்...


கருணாநிதியின் பேரனான அருள்நிதி நடித்த உதயன் படத்தை வாங்க யாரும் முன் வரவில்லை.....


இதனால் கலைஞரின் பேர நிதிகள் படத்தை வாங்க , விற்க முடியாமல் திணறுகின்றன!....
இருக்காத பின்னே,
 
                " செய்த பாவங்கள்"
                தன்வினை தன்னை சுடும்!
திங்கள், 20 ஜூன், 2011

ரங்கசாமி, ஜெகன்மோகன் காங்கிரஸில் மீண்டும் இணைகிறார்கள்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனியாக கட்சி ஆரம்பித்த புதுவை முதல்வர் ரங்கசாமி, ஆந்திராவை சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி  ஆகியோர் விரைவில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இனைய உள்ளனர்....

இது சம்மந்தமாக, சோனியா காந்தி பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டுள்ளார், புதுவைக்கு மத்திய அமைச்சர் நாராயண சாமி மற்றும் புதுவை காங்கிரஸ் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர், இதனை தொடர்ந்து புதுவை காங்கிரஸ் கட்சி தலைவராக முதல்வர் ரங்கசாமி விரைவில்  தேர்ந்தடுக்க படுவார் ...இன்னும் சட்டசபையில், பெரும்பான்மையை நிறுபிக்காத போதிலும், அவர் முதல்வராக தொடர்கிறார்... ரங்கசாமி!..

ஆந்திராவில், மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி தலைமையில் ஒரு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்....

மீண்டும் இணையும் பட்சத்தில், ஆந்திர முதல்வர் பதவி அல்லது வேறு சில பதவிகள் அளிக்க காங்கிரஸ் ஒத்து கொண்டுள்ளது...

இதனை தொடர்ந்து ஜெகன் மோகன், காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இனைய உள்ளார்!....அதே போல தமிழகத்தில், காங்கிரஸ் கூட்டணி மாற்றத்தை விரும்புவதாக சில முக்கிய புள்ளிகள் தெரிவித்துள்ளனர் ....


ஞாயிறு, 19 ஜூன், 2011

ஈழ இனப்படுகொலை விவகாரத்தில் - ராஜபக்சே , கருணாவின் பெயர் சேர்ப்பு!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

ஈழ இனப்படுகொலை விவகாரத்தில் ராஜபக்சே வின் பெயர் மற்றும் அவருடைய சகோதரர் பெயர் மற்றும் பொன்சேகா பெயர் சேர்க்க பட்டு இருந்தது, 

இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி ராஜபக்சேவின் ஆதரவு ஆளான, துரோகி கருணாவின் பெயரும் சேர்க்க பட்டுள்ளதாக தெரிவித்தனர்....

அல்- ஜசீரா தொலைகாட்சிக்கு சிறப்பு பெட்டி அளித்த, அமெரிக்க நீதிபதி டொனால்டு இதனை தெரிவித்தார்....

கருணா, ஈழ படுகொலைக்கு முக்கிய மூளையாகவும் செயல்பட்டார் என்று நீதிபதி  டோனல்ட் தெரிவித்தார், டக்லஸ் தேவானந்தா பெயரும் இடம் பெற்றுள்ளது....

அதேபோல, இலங்கை மீது பொருளாதார தடை விதிப்பது பற்றி ஆலோசித்து வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது...

பொன்சேகாவின் தூக்கு தண்டனை தள்ளிபோடும் இலங்கை  அரசு?

 காரணம் என்னவென்றால், இலங்கை ராஜபக்சே தான் குற்றவாளி என்பது ஊர் அறிந்த உண்மை, இதிலிருந்து தப்பிக்க, அவர் பழி-யை பொன்சேகாவின் மீது போட்டு தப்பித்து கொள்ள நினைக்கிறார் ராஜபக்சே!...

ஹன்சிகவால்- விஜயின் வேலாயுதத்துக்கு சிக்கல்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

விஜய் நடித்து கொண்டிருக்கிற படம் வேலாயுதம், இந்த படத்தில் இவருக்கு ஜெனிலீயா, ஹன்சிகா இரு ஜோடிகள், படம் ஆகஸ்டில் வெளியாகிறது, அடுத்த மாதம் படத்தின் இசை வெளியீடு...
  
இது இல்ல நம்ம மேட்டர்:

                                         ஹன்சிகா தமிழ் நடித்த அனைத்து படங்களும் தியேட்டரை தாண்டி, பிளாப் , புஷ், அந்த அளவுக்கு தோல்வியை தழுவியது.. கோலிவுட்டில் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு விட்டார்,ஆதலால் விநியோகஸ்தர்கள், இந்த படத்தை எடுக்க அட்சபடுகின்றனர்,  இதனால் வேலாயுதத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது...

சனி, 18 ஜூன், 2011

ஜெ ஆட்சி எப்புடி?- லயோலா கருத்து கணிப்பு முழு விவரம்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

லயோலா கல்லூரி ஆனா வுனா னா, கருத்து கணிப்பு எடுப்பாங்க,  அதுவும் பல நேரத்தில் சரியா தான் இருக்கும் ... இப்ப எடுத்த கருத்து கணிப்பு என்னனா,

> ஜெ வின் ஆட்சி எப்புடி ?
> திமுக தோற்க காரணம்?
> புதிய அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது?


இதனை கல்லூரியின் பேராசிரியர் ராசநாயகம் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்,

* ஜெ வின் ஆட்சி எப்டி கேட்டதுக்கு நல்லா இருக்கு என்று 59% கூறியுள்ளனர்......

மக்கள் வரவேற்ற அரசின் திட்டங்கள்:
> இலவச அரிசி,
>திருமண உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கம்,
>முதியோர் உதவி தொகை உயர்த்தியது, 
>மாணவர்களுக்கு இலவச லேப்டாப்,
>கேபிள் அரசுடமை ஆக்குவது ,
>இலங்கை மீது பொருளாதார தடை விதிப்பது, கச்சதீவை மீட்பது,
>சட்ட மேலவை கலைத்தது....

இந்த திட்டங்களுக்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.....

மக்கள் முறைத்த அரசின் செயல்பாடு :

> மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கைவிட்டது,
> வீடு கட்டும் திட்டத்தை கைவிட்டது,
> இலவச தொலைகாட்சி பெட்டியை  பயனாளிக்கு தராமல் இருப்பது....

இந்த அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் குறைவான அதரவு மட்டுமே கிடைத்தது.....

திமுக அணி தோற்க காரணம் :

> திமுக அணியில் இடம்பெற்று இருந்த காங்கிரஸ் கட்சியின் இரட்டை வேடம்,
> மின் வெட்டு ,
>விலைவாசி உயர்வு,
>அதிகரித்த கட்டபஞ்சாயத்து....

புதிய அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது:

> விலைவாசி உயர்வை குறைக்கவேண்டும்,
> மின் வெட்டை அடியோடு நீக்க வேண்டும்,
>சுத்தமான குடிநீர் வேண்டும்.....


 

ஆறு மணிநேரத்தில் இணையத்துக்கு வந்த அவன் இவன்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,


நேற்றைய தினம் பாலாவின்  இயக்கத்தில் வெளியான அவன் இவன்! ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியானது படமும் பரவா இல்லை தியேட்டர் லே யே பாக்கலாம்னு சொல்றாங்க....


ஆனா, படம் வெளியான ஆறு மணிநேரத்திலே படம் இணையத்துக்கு வந்தது, பிரபல இணையத்தில் வந்ததால் தாராள பதிவிறக்கம் தான் போங்க!....


நேற்றைய அதிக படியான தமிழ் பதிவிறக்கம் அவன் இவன் தான்! ....

வெள்ளி, 17 ஜூன், 2011

சமச்சீர் கல்வியும்- ஜெவின் மெத்தன போக்கும்!

என்னங்க சொல்றிங்க.
ஆமாங்க,

கடந்த ஆட்சியில் கடைசியாக கொண்டு வந்த திட்டம் சமச்சீர் கல்வி திட்டம்.. 

சமச்சீர் கல்வி னா  என்ன?
            அப்டினா, நம்ம தமிழ்நாட்டுல ஸ்டேட் போர்டு, மெட்ரிக், சிபிஎஸ்இ இப்புடி கல்வி பிரிவு இருக்கு இதேல்லாம் எடுத்துட்டு எல்லாத்துக்கும் ஒரே மாதிரியான கல்வி கொடுக்குறது தான் சமச்சீர் கல்வி.....

நல்ல விஷயம் தானே!.. இதே ஏம் பா? தடுக்குறாங்க....

இந்த திட்டம் வந்தா மெட்ரிக் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது... தற்பொழுது மெட்ரிக் பள்ளிகள் எங்க பள்ளியில் அந்த பயிற்சி சொல்லி தாறோம், இது சொல்லி தாறோம் காசு புடுங்க தான்  செய்றாங்க,

சில தனியார் பள்ளிகளின், முதலாளிகள் ஜெ-வை சந்தித்து சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்க சொல்லி இருக்காங்க, 

தமிழகத்தில் இன்னும் இரு வாரங்களுக்கு எந்த பள்ளியிலும், வகுப்பு நடைபெறாது என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது...

மாணவர்களுக்கு, பாடங்களை நடத்த முடியாமல் பள்ளிகள் திணறுகின்றன, இதனால் மாணவர்கள் பாதிப்பு அடைத்துள்ளனர்.....

இது இப்ப பத்தாம் வகுப்பு  பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, அவர்கள் இத படிக்கவ அத படிக்கவானு தெரியாம முளிகிறாங்க...

தமிழக அரசும் இந்த விசயத்தில், ரொம்ப மெத்தனமாகவும், அவர்கள் நியமித்த குழுவில் எல்லாம் அவுங்க ஆளுங்க தான், ஆதலால் இந்த ஆண்டு சமச்சீர் கல்வி வருவது  சந்தேகம் தான்!....

ஜெ! இவ்விசயத்தில் ஆமை வேகத்தில் இருப்பதாக செல்கிறார்.....

மாணவர்கள் நிலைமை அவ்ளோதான்! 


சில அரசு பள்ளிகளில் புத்தகம் இல்லாததால் விடுமுறை  விடுகின்றன,  ஆசிரியர் பள்ளிக்கு வந்து போரணி தான்  பேசுறாங்க!..

ஈடு கொடுக்க முடியாது!- உதிர்ந்தவை

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

அவள் சுமந்த பத்து மாதமும்!

உன்னை வெளித்தள்ள அவள்
பெற்ற வலியும்!

நீ உலகத்தை பார்த்த பொழுது
அவள் அடைந்த இன்பம்!....

உன்னால் ஈடு கொடுக்க முடியாது இவ்வுலகில்!.....

வியாழன், 16 ஜூன், 2011

பரவும் விபச்சாரம்- பகீர் தகவல்கள்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

சில நயவஞ்சகர்கள், நம்முடைய சகோதர சகோதரிகள் வழி கேட்டிற்கு காரணமாக உள்ளனர், பொதுவாக கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கூட்டம் தற்பொழுது பள்ளி மாணவர்களை குறிவைத்துள்ளனர்...

இதற்காக தனி குழுவே சுத்தி கொண்டு இருக்கிறது, பள்ளிமானவர்களை குறிவைகிறது, ஆசை வார்த்தை கூறி அவர்களை வழிகேட்டுக்கு அழைத்து செல்கிறது...பொதுவாக நகர கல்லூரி-களில் படிக்கும் மாணவர்களுக்கு, போதை பழக்கத்துக்கு அடிமைக்குல்லாக்கி அவர்ர்களை சீர்அழிகின்றனர்...

சில ஏழை மாணவர்களுக்கு, கல்லூரி கட்டணத்துக்காக விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்...


தற்பொழுது ஒரு படி மேல் போய், இணையத்தில் பதிவு செய்து விபச்சாரம் செய்யும் நிலைமை வந்துவிட்டது....


மசாஜ் நிலையம் என்ற பெயரில், வெளிநாட்டு பெண்களுடன் உல்லாசம்...


தற்பொழுது சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் கொடி கட்டி பறக்குது இந்த இனைய விபச்சாரம்....


இதனை சிலர் இணையத்தில் விட்டு கோடியில் புரள்கின்றனர், இதற்க்கு சில அதிகாரிகள் துணை போகின்றனர்....
இறை வேதங்கள் விபச்சாரத்தை பற்றி கூறுவது:


இசுலாமிய மார்க்கம், உலக அழிவதற்கான முதல் அறிகுறி விபச்சாரம் பெருகும் என்று!...


கிருத்துவ வேதத்தில், ஒரு பெண்ணை மனதில் நினைத்தாலே விபச்சாரம் செய்வதற்கு சமம் என்று!..


அணைத்து மதங்களும், விபசாரத்திற்கு கடும் தண்டனைகள் மறுமையில் கிடைக்கும் என்று கூறுகிறது....


மாணவர்களே அன்பான வேண்டுகோள்:


                    இது கல்லூரி சேரும் காலம், பொதுவாக எல்லாரும் பெரியே கல்லூரி சேரனும், மாநகரங்களில் சேர்ந்து படிக்கணும் ஆவல் இருக்கும்...
நல்லது தான்....


அங்கு சேரும் பொழுது, சிலர் உங்களை வழிகெடுக்க நேரிடும்...


உங்கள் வாழ்வு 
உங்கள் கையில் 
என்று நினையுங்கள்... 


உங்களை நீங்களாகவே பாத்துகிட்டா தான்...


         

புதன், 15 ஜூன், 2011

தரம் கேட்ட தமிழனே.. இன்னும் திருந்தலையா!.....

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

அன்பானவர்களே, நீங்களே பாருங்கள், பெற்றடுத்த தாய், தந்தை இவர்களையெல்லாம் பார்க்காமல், இவனுக்கு ஒரு உதவியும் செய்யாத ஒருவனுக்கு போய் இவ்வளவு பண்ணனுமா? னு கேக்குறேன்,..

நல்லவனா இருந்த சேரி, ஏத்துக்கலாம் அதுவும் இவனுக்கா, யார் இந்த ரஜினி, நடத்துநரா இருந்து  இன்று தமிழக இளைஞர்களை முன்னேற்ற பாதையில் செல்ல தடையாய் இருக்கும் ஒருவன்....

தமிழ்நாட்டு மக்கள் காசால் உலக புகழ் அடைந்து, இன்று தமிழர்களை பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்களிடம் சுமுக உறவு!....

இவரின் சொத்து மதிப்பு 800 கோடிக்கு மேல்!

கர்நாடக- நமக்கு தண்ணி தர மறுக்குறான் அந்த மாநிலத்தில் 3 மேற்பட்ட தொழிற்சாலைகள், காவேரி தண்ணி பத்தி வாயே தொரக்குறது இல்ல, தன்னோட படம் ஒடம் னுனா உடனே கன்னடத்தில் பேட்டி!...

தமிழர்களை அழிக்கவே உருவாக்க பட்ட கட்சி சிவ சேனா, அக்கட்சி தலைவரிடம் நெருங்கியே உறவு,தமிழனை யாரெல்லாம் அழிக்க நினைகிறானோ அவனிடம் எல்லாம் சுமுக உறவு!..

தற்பொழுது அதிகமாக வழிபாட்டு தளங்களில் அடிப்பட்ட பெயர் ரஜினி! பெத்த தாய் முடியாம கிடக்கும் போது ஒன்னு பாக்குறது இல்ல!.. உன்னையே தெரியாத ஒருவனுக்கு நீ செய்றது நியாமா?..

யோசி டா என் தோழனே!....

எந்த ஒரு கூத்தாடியும் உன்னை காபத்துறது இல்ல, ஆனா இங்க கூத்தாடிகலேல்லாம் நாடு ஆல்றது இங்க தான்!...

எத்தனையோ குழந்தைகள் பாலில்லாமல் இருக்குது!
ஒரு பைசாவுக்கும் போகாத கட் -அவுட் பால் உத்துவது நியாமா!...

ஞாயிறு, 12 ஜூன், 2011

முதல்வரின் சின்னவீடு சினிமா நடிகை!...

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

கர்நாடக முன்னால் முதல்வர் குமாரசாமி, கன்னட நடிகை குட்டி ராதிகாவும் பற்றிய கிசு கிசு ஏற்கனவே பறந்தது...  இதனை இருவரும் மறுக்கவில்லை, 


திடீர் என்று குமாரசாமிக்கும், நடிகை ராதிகாவுக்கும் திருமணம் ஆகி 1 1/2 வயதில் குழந்தை  இருப்பதாகவும் தகவல் வெளியானது... இதற்கான ஆதாரமும் இணையத்தில் வெளியாகியுள்ளது..


எனவே அவர் ராதிகாவை திருமணம் செய்து கொண்டது ஏற்கனவே உருதியானது. குமாரசாமிக்கும், ராதிகாவுக்கும் 2004-ம் ஆண்டிலிருந்தே தொடர்பு இருந்துள்ளது. அப்போது குமாரசாமி எம்.எல்.ஏ.வாக இருந்தார். குமாரசாமி அரசியலுக்கு வருவதற்கு முன்பே சினிமா உலகுடன் தொடர்பு உண்டு.
அவரது சொந்த ஊரான ஹசனில் சொந்தமாக சினிமா தியேட்டர் வைத்துள்ளார். படங்களை வினியோகம் செய்ததுடன், ஒரு படத்தையும் அவர் தயாரித்து உள்ளார். அப்போது தான் ராதிகாவுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

குமாரசாமிக்கு ஏற்கனவே அனிதா என்ற மனைவி இருக்கிறார். ஆனால் குமாரசாமி ராதிகாவை திருமணம் செய்து கொண்டதற்கு அனிதா தரப்பிலோ? தந்தை தேவே கவுடா தரப்பிலோ பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியதாக தெரிய வில்லை.
குமாரசாமிக்கு நடிகை ராதிகா 2-வது மனைவி ஆகி இருப்பது போல, ராதிகாவுக்கு குமாரசாமி 2-வது கணவர் ஆவார். ராதிகா ஏற்கனவே ரத்தன்குமார் என்பவரை திருமணம் செய்திருந்தார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே இந்த திருமணம் நடந்தது.

2002-ம் ஆண்டு ரத்தன்குமார் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையின் பின்னனிகுறித்து காரணம் இதுவரை தெரியவில்லை. அதன் பிறகுதான் குமாரசாமிக்கும், ராதிகாவுக்கும் அதிக நெருக்கம் ஏற்பட்டது. ராதிகா 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் புகழின் உச்சகட்டத்தில் இருந்தபோது 2005-ம் ஆண்டு திடீரென சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
 
ராதிகா 1 1/2 வருடத்துக்கு முன்பு குழந்தை பெற்றபோது இந்த விஷயம் வெளியே கசிய ஆரம்பித்தது. அப்போது ராதிகாவிடம் உங்கள் கணவர் யார் என்று கேட்டதற்கு “ஒரு அரசியல் வாதி” என்று மட்டும் சொன்னார். பெயரை சொல்ல மறுத்துவிட்டார். இப்போது அது குமாரசாமி என்பது உறுதியாகி உள்ளது.


கர்நாடக அரசியலில் பரபரப்பு ஆகியுள்ளது ... 

வெள்ளி, 10 ஜூன், 2011

கலைஞர் டிவி மூடு விழா- செப்டம்பர் 14!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

கலைஞர் டிவி-யின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், தொடங்கியது முதல் இப்ப வரைக்கும் நடந்த மோசடிகள் எல்லாம் ஒரே நேரத்தில் வருவதால்  விரைவில் மூடுவிழாவை நடத்த ஏற்பாடுகள் இருந்தன,

ஆனால் இப்ப ஜெ! இந்த பிரச்சனையை எடுத்திருப்பதால், விரைவில் என்ற வார்த்தை, கடைசி நாள் செப்டம்பர் 14 என்று குறிக்க பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.....
கலைஞர் டிவி மீது நீதி மன்றம்  கேட்ட கேள்விகள் விவரம்:

அடிமாட்டு விலைக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான்-டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் நிறுவனம் கலைஞர் டி.விக்கு வழங்கிய ரூ.214 கோடி, லஞ்சமா அல்லது கடன் தொகையா என்பதற்கான உரிய ஆவணங்களை வழங்குமாறு சிபிஐ தனி நீதிமன்றத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தொகையை கடன் என்கிறது கலைஞர் டிவி நிறுவனம். அதை வட்டியோடு திருப்பித் தந்துவிட்டதாகவும் கூறுகிறது. ஆனால், இது 2ஜி லைசென்ஸ் பெற்றதற்காக ஸ்வான் டெலிகாம் வழங்கிய கலைஞர் டிவிக்கு தந்த லஞ்சம் என்கிறது சிபிஐ. 2ஜி விவகாரம் வெடித்தவுடன் இந்த லஞ்சத்தை கடன் போல காட்டி வட்டியோடு திருப்பித் தந்துள்ளனர் என்றும் சிபிஐ கூறியுள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, அந்தத் துறையின் உயர் அதிகாரிகள், கலைஞர் டி.வி.யின் பங்குதாரரும் தி.மு.க. எம்.பி.யுமான கனிமொழி, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கனிமொழிமற்றும் சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள், சி.பி.ஐ. தனி கோர்ட்டிலும் பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற சிலருடைய ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடாக பயனடைந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் உரிமையாளரான சாஹித் பல்வா, அவருடைய துணை நிறுவனங்களான குசேகான் புரூட்ஸ் மற்றும் சினியுக் பிலிம்ஸ் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி லஞ்சமாக வழங்கியதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் குசேகான் புரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களான ராஜீவ் அகர்வால், ஆஷிப் பல்வா ஆகியோருக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறி்ஞர், கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்ட அந்தப் பணம் சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக கடனாக வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரிகோக், கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பான அசல் ஆவணங்களை வழங்கும்படி உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. தனி நீதிமன்றம், உரிய ஆவணங்களை விசாரணை அதிகாரி மூலம் உயர் நீதிமன்றத்திடம் சமர்பிக்க வேண்டும் என்றும் பாரிகோக் உத்தரவிட்டார்.

பண பலத்துக்கு நீதி அடிபணியாது-சிபிஐ நீதிமன்ற நீதிபதி:

இந் நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு ஜூன் 11 முதல் ஜூலை 4 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 2ஜி விவகாரத்தில் சிறையில் உள்ள ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா உள்ளிட்டோர் நேற்று சிறப்பு மனு தாக்கல் செய்தனர்.

அதில், நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை தொடங்குவதால், இந்த விடுமுறை காலத்தில் தங்களது நிறுவனங்களின் நிர்வாகப் பணிகளை கவனிக்கும் வகையில் மும்பை செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு பணியில் உள்ளவர்களையும் தங்களுடன் அனுப்பி வைக்குமாறும், அதற்கான செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தனர்.

அவர்களது மனுவை நிராகரித்த நீதிபதி சைனி நீதி நிர்வாகத்தைப் பண பலத்தால் அடிபணிய வைக்க முடியாது என்றார்.

மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக அவர்களுக்கு தலா ரூ.15,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.....அது மட்டுமா:

................................................................. ......................... ...........................................

கூத்தாடி சண்டையிடும்... ராம்தேவ்! ஹசாரே!

என்னங்க,சொல்றிங்க,...
 ஆமாங்க,
ண்ணா ஹசாரேவின் பின் திரண்டுள்ள மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினருக்குப் போராட்டம் என்பதெல்லம் வெறும் நேரப்போக்கிற்காக மெழுகுவர்த்தியோடு நடத்தப்படும் பேஷன் பெரேடு தான் என்று முன்பு சொன்ன போது நம்பாதவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்?


ராம்லீலா மைதானத்தில் கருப்புப்பண விவகாரத்திற்காக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்த கார்பொரேட் பரதேசி ராம்தேவின் பக்தர்களை போலீசு அப்புறப்படுத்தியதைக் கண்டித்து அண்ணா ஹசாரே தலைமையிலான குழுவினர் நேற்று (6/6/2011) நடந்த ஜன்லோக்பால் முன்வரைவுக் கமிட்டிக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர். மேலும், இந்த முன்வரைவை ஒழுங்கு செய்வதற்காகக் கூடும் கமிட்டிக் கூட்டங்களை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் அப்படிச் செய்யாவிட்டால் எதிர்வரும் கூட்டங்களையும் கூட புறக்கணிப்போம் என்றும் அண்ணாவின் குழுவிலிருக்கும் சாந்தி பூஷன் அறிவித்துள்ளார்.
முதலில் ராம்தேவ் விவகாரம் கருப்புப் பணம் சம்பந்தப்பட்டது – இவர்கள் செல்வதோ ஊழல் எதிர்ப்புக்கான ஒரு சட்ட முன்வரைவை ஒழுங்கு செய்யும் கூட்டம். அதற்காக இதைப் புறக்கணிக்க வேண்டிய தேவை எங்கேயிருந்து எழுந்தது? நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒரு கோரிக்கையை முன்வைத்து அந்த அலோசனைக் கூட்டத்தை இவர்கள் தவிர்க்கிறார்கள் என்றால் அதன் மேல் இவர்களுக்கே இருக்கும் 

உண்மையான அக்கறை குறித்து மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மேலும், இவர்களின் புறக்கணிப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கபில் சிபல், அண்ணாவின் குழுவில் இருப்பவர்கள் தங்களை திருடர்கள் என்றும் பொய்யர்கள் என்றும் பொதுவெளியில் குற்றம் சாட்டுவதாகவும், இது போன்ற வரைமுறை மீறிய பேச்சுகள் குழுவின் நடவடிக்கைகள் சுமூகமாக நடக்க ஏதுவானதல்ல என்றும் தெரிவித்துள்ளார். மட்டுமல்லாமல், அண்ணாவின் குழுவினர் வராமல் போனாலும் கூட தாங்களே ஜூன் 30-க்குள் இந்த சட்ட முன்வரைவை இறுதி செய்து பாராளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம் என்றும் அறிவித்துள்ளார்.


இது போன்ற கூத்துகளுக்கு அடிப்படையாய் இருப்பது இவர்களுக்குள் நிலவும் ஜனநாயகமற்ற தன்மையும் என்.ஜி.ஓ அரசியலின் ஆன்மாவாக இருக்கும் துரோகத்தனமும் கைக்கூலித்தனமும் தான். அண்ணாவோடு மேடையிலிருந்த ராம்தேவ், தன்னையும் ஜன்லோக்பால் வரைவுக் கமிட்டியில் இணைத்துக் கொள்ளாததை அப்போதே எதிர்த்திருந்தார். மேலும் அவரே சாந்தி பூஷனை சேர்த்துக் கொண்டதைப் பற்றி வெளிப்படையாகவே விமர்சித்தார். அப்போது ஊடகங்களில் அண்ணாவுக்குக் கிடைத்திருந்த ஸ்டார் அந்தஸ்தையும் நடுத்தர வர்க்கத்து மக்களிடையே அவருக்கு ஊடகங்களால் ஏற்பட்டிருந்த நற்பெயரையும் கணக்கில் கொண்டு உடனேயே தனது விமரிசனத்தை வாபஸ் பெற்றிருந்தார்.


அப்போது ராம்தேவுக்கு உண்டான பொறாமையும் காய்ச்சலும் தான் அவரைத் தன்னிச்சையாக ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் அமரச் செய்தது. எங்கே இந்தப் பய குறுக்கே புகுந்து தான் ஐந்து நாட்கள் சோறு தண்ணியில்லாமல் டிராமா போட்டு சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயரை அபேஸ் பண்ணி விடுவானோ என்று அஞ்சியதாலேயே அண்ணா ஹசாரே ராம்தேவை ஆதரித்திருந்தார். இவர்களுக்கு யார் பெரியவர் என்கிற குத்துபிடி சண்டை எந்த ஒளிவு மறைவுமில்லாமல் ஊடக ஒளியில் கனஜோராக நடந்து வந்தது.
அரசை விமரிசிப்பதில் தான் பின்தங்கி விட்டால் எங்கே தனக்குப் பெயர் கிடைக்காமல் போய் விடுமோ என்று அஞ்சிய அர்விந்த் கேஜ்ரிவால், தொலைக்காட்சி சேனல்களில் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டிக் கொண்டிருந்தார். சாந்தி பூஷனும் தன் பங்குக்கு எந்தக் குறையும் வைக்காமல் இதே போன்ற நாடகத்தை தொலைக்காட்சி ஸ்டூடியோக்களில் நடத்திக் கொண்டிருக்க, இக்குழுவின் இன்னொரு உறுப்பினரான சந்தோஷ் ஹெக்டே ‘எனக்கு அழுவாச்சியா வருது.. விடுங்க நான் வூட்டுக்குப் போறேன்’ என்று போன மாதம் தனி டிராக்கில் இன்னொரு நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்.
இது தான் இவர்கள் மக்களுக்காக போராடிய லட்சணம். இதே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு குழுவாக இருந்திந்தால் அவர்களுக்கு மக்களிடம் பதில் சொல்ல வேண்டுமே என்கிற குறைந்தபட்ச பயமாவது இருந்திருக்கும். ஆனால், இவர்களோ தன்னிச்சையாக தங்களைத் தாங்களே சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளாக அறிவித்துக் கொண்டவர்கள். தங்களை நியமித்துக் கொண்டதிலோ, தமது குழுவிற்குள்ளோ மருந்துக்குக் கூட ஜனநாயகத்தை அனுமதிக்காதவர்கள். அண்ணா ஹசாரே தனது குழுவினரை நியமித்துக் கொண்டதும் ஒரு ஆண்டி மடத்தில் சீனியர் ஆண்டி தனக்கு ஜூனியர்களை நியமித்துக் கொள்வதற்கும் சாராம்சத்தில் வேறுபாடே இல்லை.


அடுத்து என்.ஜி.ஓ அரசியலுக்கென்றே இருக்கும் ஒரு குணாம்சமான மக்களை அரசியலற்ற மொக்கைகளாகவும், ஓட்டாண்டிகளாகவும் ஆக்கும் துரோகத்தனமும் இதில் துலக்கமாக வெளிப்படுகிறது. சமீப வருடங்களாக மக்களை அடுத்தத்த ஊழல் செய்திகள் ஒரு சுனாமி போல தொடர்ந்து தாக்கி வரும் சூழலில், அவற்றுக்கெல்லாம் ஊற்றுமூலமாய் இருக்கும் தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை நோக்கி மக்களின் ஆத்திரமும் கோபமும் திரும்பி விடாமல் போராட்டம் என்பதையே பிக்னிக் சென்று வருவது போன்ற ஒரு இன்பமான நிகழ்வாக மாற்றியமைத்துள்ளது, அண்ணாவின் பின்னேயிருந்து இவை மொத்தத்தையும் இயக்கும் என்.ஜி.ஓ கும்பல்.
இது மக்களின் ஆத்திரத்தையும் இயல்பாகவே மாற்றத்தை விரும்பும் அவர்களின் அபிலாஷைகளையும் அவர்கள் மொழியிலேயே பேசி கூட இருந்தே கருவறுக்கும் செயலாகும். இப்போது ஜன்லோக்பால் கமிட்டியினுள் அரசாங்க உறுப்பினர்களுக்கும் அண்ணாவின் குழுவினருக்கும் இடையே எழுந்திருக்கும் முரண்பாடுகளை ஏதோ மக்களுக்கே நடந்து விட்ட துரோகம் போலச் சித்தரித்து ஒட்டுமொத்தமாக இந்தச் சட்டம் ஏற்படாமலே போக வைக்கும் வேலையைத் தான் அவர்கள் கவனமாகச் செய்து வருகிறார்கள்.


ஊழலே சட்டபூர்வமாகிவிட்ட ஒரு சூழலில் ஜன்லோக்பால் சட்டம் மட்டுமே ஊழலை ஒழித்து விடக்கூடிய தீர்வு என்று யாராவது கருதமுடியுமா? ஊழல் என்பது மறுகாலனியாக்கத்தில் கருக்கொண்டிருக்கிறது – ஆனால் இவர்களோ வெறும் சீர்திருத்தச் சட்டங்கள் மூலம் மட்டுமே கடல் அலைகளைக் கைகளால் தடுத்து விட முடியும் என்று நம்மிடம் சொல்கிறார்கள். ஆனால், எதார்த்தத்தில் இவர்களின் ஆன்மாவாக இருக்கும் என்.ஜி.ஓ அரசியலோ அதைக் கூட உருப்படியாய் நிறைவேறாமல்  தடுக்கும் வேலையைச் செய்கிறது. அதைத் தான் இவர்களுக்குள் நடக்கும் குத்துபிடி சண்டைகளும் ஈகோ மோதல்களும் மெய்பித்துக் காட்டுகின்றது.


இவர்களுடைய ஓட்டாண்டித்தனங்களை முன்பே வினவில் அம்பலப்படுத்தி எழுதிய போது அறவுணர்ச்சி பொங்க கூத்தாடிய நண்பர்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? ஊழல் முறைகேடுகளை எதிர்க்கும் உங்களின் நியாயமான கோபத்தையும் உணர்ச்சியையும் இவர்களிடம் தானா நீங்கள் அடகுவைக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள்; உண்மையாகப் போராடும் உலகமும் போராட்டக் களங்களும் இவர்களுக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கிறது. சமூக முறைகேடுகள் குறித்து கோபமிருப்போர் அத்தகைய களங்களுக்குள் வரவேண்டும். மெழுகுவர்த்தி கோமாளிகளைப் புறக்கணிக்க வேண்டும்.

நன்றி : வினவு தளம்!....

சமுதாய குறைகளை, குரல் தூக்கி சொல்வது வினவு தளம்...

வியாழன், 9 ஜூன், 2011

ஈழ அழிவுக்கு காரணம் பிரபாகரன் தான்!- கர்ணா பகிரங்க பேட்டி!..

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

முன்னால் விடுதலை புலிகளின் கேப்டனும், தற்போதே ராஜபக்சே-வின் கை பாகையுமான, கர்ணா ( துரோகி )... விடுத்துள்ள நேர்காணல் சிறப்பு பகுதி....தலைப்ப பாத்தோனே பலருக்கும் பக் பக், கோவம்  வரும்!

ஈழ அழிவுக்கு விடுதலை புலிகளின் தலைவர் தான் காரணம் என்று கர்ணா குற்றம் சாட்டியுள்ளார்...

ஐநா மனித உரிமை மீறல் குற்றம், இலங்கையின் மீது எழுந்துள்ளது.. இதனை மறைக்கவும், திசை திருப்பவும்.. இலங்கையின் புதிய முயற்சி...

அதாவது, கர்ணா கூற்றின் படி:

விடுதலை புலிகள் பேரியிக்கத்தை தலைமை தாங்கியவர். பிரபாகரன்!.. அவர் முடிவுகளை தன்னிச்சையாகவும், சுய நலனுக்காகவும் தான்  எடுப்பார்.. தளபதி என்ற அடிபடையில் ஒரு வார்த்தை கூட கேட்க்க மாட்டார்.. அதே போல ஈழ  இஸ்லாமியர்கள்  தாக்குதலுக்கும் அவர் தான் காரணம் என்றும், ஐரோப்பியாவிலிருந்து வரும் பணத்தை மக்கள் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தவில்லை என்றும்... போதை பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்டதாகவும்  குற்றம் சாட்டியுள்ளார்...

இந்த காரணங்களால் தான் இயக்கத்தை விட்டு வெளியவந்ததாகவும் கூறியுள்ளார்... என்னோடு சில இயக்க நண்பர்களும் வந்தார்கள், எங்களை கொள்ள சதி நடந்ததால் நாங்கள் அரசுடன் சேர்ந்தோம் என்று கூறியுள்ளார்...


இந்த குற்றசாட்டு, இலங்கை மீது ஐநா உரிமை மீறல் பிரச்சனையை மழுங்கடிக்க செய்ய இது போன்ற செய்திகளை இலங்கை அரசு பரப்பி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன...


உரிமை மீறல் பிரச்சனையை சமாளிக்க, சீனா மற்றும் இந்தியாவின் உதவிகளை நாடியுள்ளதாக தெரிகிறது...


பத்திங்களா, எதையும் செய்ய இருக்கிறது இலங்கை அரசு!...

புதன், 8 ஜூன், 2011

அவன் இவனை அவிழ்த்துவிட்டு! வேங்கை விரட்டி பிடித்த சன்....

என்னங்க சொல்றிங்க.
ஆமாங்க..

சன் பிக்ச்சர் வெளியிட இருந்த அவன் இவன், தற்பொழுது அரசியல் சூழ்நிலைகளால் மீண்டும் தயரிப்பாளரிடமே கொடுத்து படத்தை வெளியிட சொல்லி இருக்கிறது...

படத்தின் சேட்டிலைட் உரிமையை மட்டும்  வாங்கி கொண்டது சன்!...

அரசியல் நெருக்கடியில் அகப்பட்ட சன் தற்பொழுது!... 
தனுஷின் வேங்கை விரட்டி வாங்கியதாக கூறபடுகிறது ( நம்ப தகுந்த வட்டாரங்கள் சொல்கிறது)...சன் பிக்சர்ஸ் கடைசியாக வெளியிட்ட தனுஷ் படம் மாப்பிள்ளை. பாக்ஸ் ஆபீஸில் படு தோல்வியைச் சந்தித்தது இந்தப் படம்.

ஆனால் இதற்கு முன் தனுஷ் நடிக்க, சன் பிக்ஸர்ஸ் வெளியிட்ட படிக்காதவன், ஆடுகளம் போன்ற படங்கள் நல்ல லாபம் பார்த்தன. அந்த நம்பிக்கையில், இப்போது வேங்கை படத்தை வாங்கி வெளியிடுகிறது சன்.

ஹரி இயக்கியுள்ள இந்த வேங்கையில், தனுஷுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்ஷன் - ரொமான்டிக் மசாலா இந்த வேங்கை.

தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீடு வரும் 10-ம் தேதி அதாவது நாளை மறுதினம் சென்னையில் நடக்கிறது....செவ்வாய், 7 ஜூன், 2011

கல்வி கொள்ளையர்களும்! கல்வி நிலையங்களும்!.. ஒரு அலசல்!.,..

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

இது கல்வியாளர்களின் வசூல் நேரம்!.. மார்க் வேணாம் பணம் தான் வேண்டும்...

மாணவர்கள் தங்களது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிகளை தேடி அலைகிறார்கள்... எல்லாரும் மருத்துவர் ஆகணும், பொறியாளர் ஆகணும், டீச்சர் ஆகணும், விஞ்சானி ஆகணும் பலருக்கும் பல கனவு!... ஆனால் காசு உள்ளவர்களுக்கு மட்டுமே கல்லூரி என்றாகிவிட்டது இப்போது...

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கு மோகம் அதிகரித்துல்லாதால் கல்வி நிலையங்களும் கட்டண கொள்ளையை அதிக படுத்தியுள்ளது!..

இலவச படிப்பு, உதவி தொகை என்று அறிவித்துவிட்டு!.. கண்ணுக்கு தெரியாமல் காசை அமுக்கும் காலம் இது....

வாங்க வருசையா பாப்போம்:

முதலில் மருத்துவ கல்லூரிகள் :

தமிழகத்தில் ஏற குறைய 28 கல்லூரிகள் உள்ளன, அதில் 18 அரசிடமும் மற்றவை தனியார் வசம் உள்ளன..

3 தனியார் மருத்துவ பல்கலைகழகங்கள் உள்ளன.... 
மூன்றுமே  சென்னையில் அருகாமையில் அமைந்துள்ளன, இந்த கல்லூரிகளில் படிப்பு கட்டணம் எவ்ளோ தெரியுமா...

வருட கல்விகட்டணம் 5 லட்சம், விடுதி, சாப்பாடு , தேர்வு கட்டணம் தனி.. அது மட்டுமா... நன்கொடை எவ்ளோ தெரியுமா 35-70 லட்சம் வரைக்கும்... வாய போலக்காதிங்க,

மற்ற தனியார் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் வருடத்திற்கு 3-4 லட்சம் , நன்கொடை 20-35 லட்சம் வரை... ஆள பொறுத்து!...

அரசு கல்லூரிகளில் 25000, உதவி தொகை வருவதால் கல்விக்கட்டணம் குறையும்...

பொறியியல் கல்லூரிகள்,:
தமிழகத்தை பொறுத்தவரை 400 மேற்ப்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன...  25 மேற்பட்ட பொறியியல் பல்கலைகழகங்கள் உள்ளன...


கல்லூரியின் தரத்திற்கு ஏற்றார் போல் நன்கொடை இருக்கும்...
50000-1200000 வரை நன்கொடைகளை வசுளிக்கின்றன... பொதுவாக சென்னை சுற்றியுள்ள பகுதுகளில் குறைந்தது லட்சம்....

இதே போல் ஆசிரியே கல்வி நிலையங்களும் லட்சம் லட்சமாக பணத்தை  கரகின்றனர்...

அனைத்து கல்லூரிகளும் நன்கொடையே ஒரு வழக்கமாக்கியுள்ளது.. 

காரணம்:

      நம்முடையே மோகமும்,
     கல்வி வியாபரமானதும்,
     அரசின் முறையற்ற தன்மையும் தான்!

திமுகவை திருப்பி போட்ட ஜெ! பேரலை....என்னங்க சொல்றிங்க,

ஆமாங்க...

என்னடா ஆட்சிக்கு வந்து 3  வாரம் ஆட்சே!.. ஒரு கைது இல்ல, அடிதடி இலைன்னு பாத்தேன்...

ஆட்டத்தை ஆரம்பித்த ஜெ!...உடனடி பதிலடி இல்லாமல்.. மெதுவாய் காய் நகர்த்தியே ஜெ!.. 
தற்பொழுது நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார் முதல்வர் ஜெ!...

கனிமொழியேவே, காபத்த முடியாத திமுகவுக்கு!.. 

இன்று அழகிரி கோட்டில் ஆஜராகி ஜாமீன்!... கைதாவது உறுதி!

தயாநிதி மாறனுக்கு நெருக்கடி முற்றி! கைதாகும் நிலைக்கு தள்ளபட்டுள்ளார்!..

சன் டிவி விவகாரம் அதுக்கு மேல!... கேபிள் ஆப்ரேட்டர் உண்ணாவிரத போராட்டம்!.. பங்குகள் விலை 30 % வீழ்ச்சி !....

சன் பிக்ச்சர்ஸ் மீது காவலன் தயாரிப்பாளர் வழக்கு போட்டுள்ளார்!..

கலைஞர் டிவி விவகாரமோ மூடு விழாவை நோக்கி பயணிக்கிறது!..

அதே போல திமுக முன்னால் அமைச்சர்கள் மீதும் தாக்குதல் ஆரம்பம் ஆகிறது!...

வீரபாண்டி மீது புகார் கூறப்பட்டுள்ளது!....

நேரு, தங்கவேலன், பெரியசாமி மீதும் வழக்கு பாயயுள்ளது!...

இதனால் ஒட்டு மொத்த  திமுகவும் ஒடுங்கி, பீதியில் உள்ளனர்...

இந்த பட்டியலில் சில நில தரகர்களும் சிக்குவார்கள் ...

மதுரையில் என்கௌண்டர் லிஸ்ட் தயாராகி மேல் இடத்துக்கு அனுப்பபட்டுள்ளது, உத்தரவுக்காக காத்திருக்கும் காவல்துறை!...

ஜெவும், தமிழகத்தில் சூரியன் உதிக்காது என்று சட்டசபையில் கூறியுள்ளார்!...

ஸ்டாலின் மீது மேம்பால வழக்கும் மற்றும் ஊரகவளர்ச்சி திட்டத்தில் நடந்த ஊழல் விரைவில் பாயும்!.. 

இப்பிடியே போன திமுக அவ்ளோதான்!...


இனிமே எல்லாம் ஜெ! ஜெ! தான்!...
     

திங்கள், 6 ஜூன், 2011

வேணாம் வலிக்குது குதிச்சுடுவேன்! வடிவேலு ஆவேசம்..

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

வாய வச்சுகிட்டு சும்மா இருக்கணும்! இல்லேன்னா இப்படித்தான்!...

மதுரையில் மல்லுகட்டி கொண்டிருந்த வடிவேலு மடக்கு-நு ஒரு அறிக்கை என்னனு தெரியுமா!...

எதோ தெரியுமா உலறிடேன் அதுக்கு ஏன் இந்த கொலை வெறி?... என்னை பகச்சிங்கன்னா நானும் அரசியல் குதிச்சு நாசமபோயடுவேன்!...

அப்புறம் எனக்கு தெரியாது!.. வருத்தப்பட்டு போரஜனமில்ல!...அறிக்கையின் விவரம் :


தேமுதிகவினர் தொடர்ந்து தனது வீடுகளுக்கு முன்பு நின்று கண்டபடி அசிங்கமாக பேசி வருவதால, இந்த நிலை தொடர்ந்தால் பேசாமல் திமுகவில் சேர்ந்து கட்சி ரீதியாக அவர்களை ஒரு கை பார்ப்பது என்ற முடிவுக்கு வைகைப் புயல் வடிவேலு வந்துள்ளதாக தெரிகிறது.

வாயால் கெடுவது என்பதற்கு வடிவேலுதான் சரியான உதாரணம். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தன் மீதும், தனது நடிப்பு மீதும் வைத்திருந்த, வைத்துள்ள நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ளாமல், அதைப் பற்றிக் கவலைப்படாமல் தேர்தல் பிரசாரத்தின்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சரமாரியாக வாய்க்கு வந்தபடி பேசி பிரசாரம் செய்து வீண் வம்பில் மாட்டிக் கொண்டு விட்டார்.

இப்போது தேர்தல் முடிவு பாதகமாக வந்து விட்டதால் என்ன செய்வது என்று புரியாமல் தற்போது வீட்டோடு முடங்கியுள்ளார்.

மறுபக்கம் தேமுதிகவினரோ பிரச்சினையை இத்துடன் முடிக்காமல் வளர்த்துக் கொண்டே போகின்றனராம். வடிவேலு வீட்டுக்கு முன்பு திடீர் திடீரென கூடுவது, இருக்கிற கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி ஏசுவது, தாறுமாறாக திட்டுவது என்று பொழுதைக் கழித்து வருகிறார்கள்.

வடிவேலுதான் நொந்து நூடூல்ஸாகிப் போய் விட்டாரே என்று விடாமல் தொடர்ந்து அவர்கள் அநாகரீகமாக நடந்து வருவதால் வடிவேலு கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

இதுகுறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்நது புலம்பியபடி வருகிறாராம் வடிவேலு. என்னைத்தான் வீட்டோடு முடக்கி விட்டார்களே, பிறகு எதற்கு தொடர்ந்து அசிங்கமாக பேசி வருகிறார்கள். இப்படியே இவர்கள் தொடர்ந்து வந்தால் நானும் பேசாமல் திமுகவில் சேர்ந்து கட்சி ரீதியாக இவர்களை ஒரு கை பார்க்க வேண்டியதுதான், வேறென்னத்த செய்ய என்று கூறுகிறாராம் வடிவேலு.


அடக்கி வாசிக்கணும்!
இல்லேன்னா ஆப்புதான்!...


ஞாயிறு, 5 ஜூன், 2011

கதறிய கருணாநிதி!.... திருவாரூரில் நடந்த திருப்பம்!....

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க..

நேற்றேயே தினம் நடைபெற்ற, திமுக நன்றி அறிவிப்பு  பொதுகூட்டத்தில் முன்னால் முதல்வர் கலைஞர் பேருரை நிகழ்த்தினார்...முதலில் மக்களுக்கு தன்னுடைய பழைய அரசியல் வெற்றிகளை சொல்லிவிட்டு, என்னை 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறசெய்த என் அன்பு உடன் பிறப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்!....

அடுத்து, ஆளுநர் உரையின் குறைகளை தனகுறியே பாணியில் சொன்னார் அரங்கம் அதிர்ந்த கரவோசம்- அக இருந்தது....

அது இல்ல நம்ம மேட்டர்... கீழ படிங்க...

கனிமொழி பற்றி கூறும் பொழுது!...

மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடி விடும்

இருந்தாலும் கனிமொழி சிறையிலே இப்பொழுது வாடிக்கொண்டிருக்கிறார். திகார் சிறைச்சாலை எப்படிப்பட்டது என்பதை சொல்கிறேன். ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில்.

அப்படிப்பட்ட இடத்தில்தான் இருக்கிறார் என் மகள் கனிமொழி. நானும் எனது மூத்த மகள் செல்வியும் ஆறுதல் கூறும்பொழுது, அக்கா நீங்கள் அப்பாவைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் வழக்கை சந்திக்கிறேன். இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன்.

இவையெல்லாம் எதிர்கொள்கின்ற சக்தியைத்தான் திராவிட முன்னேற்றக்கழகம் நமக்கு வழங்கியிருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள் என்று கனிமொழி என்ற பெண்மணி சொல்லுகின்ற அளவுக்கு நாம் சக்தியைப் பெற்றிருக்கின்றோம்.

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு சுறுங்கி 30 ஆயிரம் கோடி என்று வந்து இப்போது யார் குற்றவாளி என்று கேள்வி எழுந்து,யாரையாவது ஒருவரை குற்றவாளியாக அடையாளம் காட்டவேண்டும் என்று கனிமொழியை அடையாளம் காட்டியிருக்கிறது சிபிஐ.

கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம். கலைஞர் டிவியில் பங்குதாரராக இருக்க வேண்டும் என்று கனிமொழியை கேட்டேன். அதற்கு கனிமொழி வேண்டாம் என்று மறுத்தபோது, எதிர்காலத்தில் கனிமொழிக்கும் ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் என்பதற்காக பிடிவாதமாக பங்குதாரராக்கினேன்.

அதன் விளைவு, அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட கேடு, கனிமொழையையும் துன்புறுத்துகின்ற அளவிற்கு வந்திருக்கின்றது. இதை எண்ணிப்பார்த்து கனிமொழிக்கு வந்த ஆபத்தை தவிர்ப்பார்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.

கதறிய கருணாநிதி:

கருணாநிதி பேசும்போது, குறிப்பாக கனிமொழி குறித்துப் பேசும்போது அவ்வப்போது கண்கலங்கி சில விநாடிகள் தனது பேச்சை நிறுத்திக் கொண்டார். பின்னர் விம்மிய குரலில் அவர் தொடர்ந்து பேசினார். கனிமொழி அடைக்கப்பட்டுள்ள திஹார் சிறை குறித்து அவர் பேசும்போது அழுது விட்டார்.....கருணாநிதியின் பேச்சுகளில் இருந்து திமுக - காங்கிரஸ் முடியபோகிறது! என்று  தெரிகிறது....

சில திமுக-வினரும், இந்த திருவாரூர் கூட்டம் எங்களுக்கு திருப்பம் என்று கூறினார்கள்.....

டேய் நீ யாருன்னு எனக்கு தெரியும்!
நான் யார்னு உனக்கு தெரியும்!...

அப்ப எதுக்குடா பேசுற!...

உழல் பண்ணுவாங்களாம்!

உடன்தயாவும் இருப்பாங்கலாம்!..

மாட்டிகிட்டா அலுவுன்வான்கலாம்!..

என்ன கொடுமை சார் இது? 

விரைவில் வருகிறது கூட்டணி மாற்றம்!... மேலும் இது தொடர்பான தகவல்களுடன் உங்களை சந்திக்றேன்!...

இனைதிருங்கள் நம்மோடு!... நன்றி! நன்றி ! நன்றி!.....

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க.
நான் தான் இந்த ப்ளாக்   எழுதுருவன்!....

அன்புக்கு இனியவர்களே:

  நான் இந்த ப்ளாக்- ஒரு பொழுதுபோக்கு -க்காக தான் ஆரம்பித்தேன், அனால் எனக்கும் வாசர்கள் வந்தார்கள்... அது என்னை மேலும் எழுத வைக்க உதவியது...

நான் நினைத்தேன்.. இந்த வருட இறுதியில் தான் ௦௦௦௦10000  பார்வையாளர்கள் வருவார்கள் என்று!.. அது பொய்யாகி இன்றே நிறைவேறியது...

அதுவும் உங்களால் தான்!...

என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்!.....

நன்றி! நன்றி! நன்றி!....  


சனி, 4 ஜூன், 2011

பிரபாகரன் இறக்கவில்லை!... வெளிவர்ராத மரண முடிச்சுகள்!..

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க...


விடுதலை புலிகளின் தலைவரும், தமிழ் இளைஞர்களின் எழுச்சி நாயகனும் வேலு பிள்ளை பிரபாகரன்!.. இறந்தார் என்று செய்தியை பரப்பியது, இலங்கை ராணுவம்.....

அதை உறுதிபடுத்த வில்லை! இன்னும்!.. அப்ப எப்டி சொல்லலாம் என்று நினைக்கலாம்...

இதை பற்றி பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்...

இலங்கை வீழ்த்திவிட்டோம் என்றும்!...
தமிழ் அதரவு மக்கள் இன்னும் உயிருடன் கனடா-வில் வாழ்கிறார் என்றும்!..
சிலர் மௌனம் சாதிக்கின்றனர்!...

ஆனால் பிரபாகரனை, இலங்கை ராணுவம் சுட்டு வீழ்த்த வில்லை என்பது உண்மை...

அவருக்கு, சிறுநீரக கோளறு இருந்ததாகவும் கூறப்படுகிறது.. இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதாக கூறுகின்றனர்...

சிலர், போர் நடைபெற்ற காலத்தில் தலைவர் கனடாவிற்கு சென்று விட்டதாக கூறிகின்றனர்....

அதே போல, விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டது உண்மையே...

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், விரைவில் வெளிவருவார் என்றும் சிலர் நம்புகின்றனர்!...

தன்னுடைய பெயரை வைத்து, சில தமிழ் சுயநல அரசியல்வாதிகள் அரசியல் செய்வது பிடிக்கவில்லை என்று, பிரபாகரன் தன்னுடைய நெருக்கமானவர்களிடம் சொன்னதாக கூறப்படுகிறது!...

புலிகள் இயக்கத்தையும் மற்றும்  நம்முடைய உடன் பிறவா சகோதர சகோதரிகள் அழிவுக்கு காரணம், நம்முடைய எட்டப்ப குணம் கொண்ட தமிழனே!... 


> முக்கிய மாணவர்கள் :

> கருணா 
> கருணாநிதி 
> சுப்பரமணிய  சுவாமி 
> ஜெயலலிதா 
>காங்கிரஸ் கட்சியினர்....

இது தவிர இலங்கையில் வாழும், சில சுயநல தமிழர்களும் தான்
உண்ணாவிரத சாமியாரின் பின்னணி!....

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க...

டெல்லி உண்ணாவிரதம் அனைத்து தொலைகாட்சிகளும் நேரடி ஒளிபரப்பு மற்றும் பரபரப்பு....

நீங்களும் பாத்திரிபிங்க!.. யார் இந்த சாமியார்! பாபா ராம்தேவ் யோகா குரு! என்று அனைவாராலும் அழைக்கபடுபவர்.. இவர் வேலை யோக டீச்சர்!...

சமிபத்தில கூட. சில்பா ஷெட்டி வச்சு யோக சிடி வெளியிட்டார்.. நியாபகம் இருக்கா.. சில நாட்களுக்கு முன்பு அரசியலுக்கு வருவதாக அருவித்திருந்தார்...  

அதற்க்கு -காண தகுந்த நேரத்தை பாத்துகொண்டிருந்தார், 

திடிர்னு உழலுக்கும், கருப்பு பணத்துக்கும் எதிராக உண்ணாவிரதம் என்று அறிவித்தார் ...  


இந்த டூபாகூர் சாமியார்!...

> இவர் யோக முறையில் மனதை கட்டுபடுத்தி, இறைவனையும் காணலாம்..  என்றும் யோக மையத்தை உலகம் முழுவதும் வைத்திருப்பவர்...

>அதும் மட்டுமல்ல இவருக்கு 17500௦ கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது! (௦ இவர்லாம் கருப்பு பணத்தை பத்தி பேசுறாரு பார்ரா )...

> இந்த உண்ணாவிரத பந்தல் மற்றும் நிகழ்ச்சி-யின் செலவு எவ்வொலோ தெரியுமா 18    கோடி... ( பணம் எங்கே இருந்து வந்த்சுனு தெரில )

> தனி ஜெட் விமானம் வைத்திருக்கிறார்.. இந்த சாமியார்!...

> இந்த உண்ணாவிரதத்தின் பின்னணியில் சில மதவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.... 


மக்களே!.. ஒன்று நியாபகம் வைத்துகொள்ளுங்கள்!

 மதத்தின் பெயரால் மனிதனை ஏமாற்றுபவனுககு! 
 மரண தண்டனை விதித்தால் தான் நாடு உருப்படும்!

 ( எந்த மதமாக இருந்தாலும் ) 

வியாழன், 2 ஜூன், 2011

சீமானின் சித்து விளையாட்டில் சிக்கிய நடிகை!...

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

புரட்சிகர பேச்சாளர், இயக்குனர், நாம் தமிழர் அமைப்பின் ஒருகினைபாளர் என பல பன்முகத்தன்மை கொண்ட சீமான், தற்பொழுது நடிகை ஒருவரின் வன்கொடுமை புகாருக்கு ஆளாகியுள்ளார்.....

அந்த நடிகை, கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட விஜயலெட்சுமி.. தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்திருப்பவர்... தமிழில் ப்ரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர்...

நேற்றைய தினம், சென்னை போலீஸ் உயரதிகாரியிடம் புகார் மனுவை அளித்தார்.. அந்த மனுவில் சீமான் தன்னை பாலியல் வன் கொடுமை செய்தும் மற்றும் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது....

இதனை தொடர்ந்து 6  பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து, சீமான் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது ...

சீமான் தன்னுடைய சித்து விளையாட்டை சினிமா நடிகையிடம் காட்டிவிட்டர்போல!....


இதற்க்கு சீமான் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது!...

இருக்காத பின்னே, அந்த நடிகை கன்னடதுகாரி அவளை திருமணம் முடித்தாள்.. தன்னடைய தமிழ் இமேஜ் பாதிபடயும்னு நினைச்சிருப்பார் போல !...

சட்டம் தன் கடமையை செய்தால் போதும்!...

குற்றவாளிகள் தண்டிக்கபடவேண்டும்!
நிரபராதிகள் விடுவிக்க படவேண்டும் !.... 

உடையும் திமுக!... உருகும் உடன்பிறப்புகள்!..

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க...

முற்பகல் செய்யும் வினை, பிற்பகல் விளையும்னு சொல்வாங்க அதேபோல இப்ப நடந்திருக்கு.... திமுக கடந்த கால ஆட்சியில் செய்த உழல்கள், அடக்கு முறைகளுக்கு  பதில் சொல்ல வேண்டிய நிலையுள்ளது...

பொதுவாக ஆட்சி மாற்றம் நடைபெற்றால், பழிவாங்கும் படலம் தொடரும்... இந்த முறை அதற்க்கு வாய்ப்பு அதிகம் இருந்தாலும் ஜெ! மெதுவாகவே தான் காய் நகர்த்துகிறார்....


திமுகவில் குடும்ப ஆதிக்கமே என்பது அனைவரும் அறிந்ததே!.. அது இல்ல மேட்டர்... திமுகவில் நான்கு பெரிய கோஷ்டிகள் உள்ளன.
அவை :
1 . ஸ்டாலின் 
2 . கனிமொழி 
3 . தயாநிதி 
4 . அழகிரி 


மற்ற சில கோஷ்டிகள் இவர்களின் வழி தோன்றலே!...

ஸ்டாலின் - க்கு பொதுவாக அதரவு உள்ளது... அழகிரிக்கு மதுரை மற்றும் தேனியில் ஆதரவாளர்கள் உள்ளன.. கனிமொழிக்கு ராசாவின் உதவியால் 6 - 7  மாவட்ட செல்வாக்கு உள்ளது, தயாநிதிக்கு கொஞ்சம் அதரவு இருக்கு..

இந்த பட்டியலில், கணிமொழியும், தயாநிதியும் ஸ்பெக்ட்ரம் உழலில் தொடர்பு இருப்பதால் அவர்கள் சிறைக்கு செல்வது உறுதி!.. கனிமொழி சிறையில் இருப்பது குறிப்பிட தக்கது ...

தமிழக அரசு  பதவி ஏற்ற-வுடன், மதுரையில் கடந்த 5 ஆண்டுகளாக குற்றங்கள் - ன் வழக்குகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது, இதனால் அழகிரி பெருத்த இடயுருகளை சந்திக்க நேரிடும்...

திமுகவின் 3 தூண்கள்  சரிந்து கிடப்பதால்... உடன்பிறப்புகள் சோகத்தில் உள்ளனர் சில உடன்பிறப்புகள், மாற்று கட்சிகளுக்கு தாவும் நிலையில் உள்ளனர்...


சில மாவட்ட செயலாளர்களும், ஒன்றிய செயலாளர்களும்.. மாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது....


இதனால் திமுக உடையும் நிலைக்கு தள்ளப்படும்....


அழகிரி மீது நடவடிக்கை முடிந்த பிறகு, ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதி!...

நல்லது நடந்தா  சேரி!....