சனி, 30 ஏப்ரல், 2011

திசை மாறிய ஓட்டு! யாருக்கு வேட்டு!

என்னங்க சொல்றிங்க!
ஆமாங்க...

ஏப்ரல் 13 - ம் நடந்த ஓட்டு பதிவு நடை பெற்றது.... கணிப்புகளும் பல நடந்தன,மாறி மாறி இவர் வெற்றி பெறுவார், அவர் வெற்றி பெறுவார் என கூறினர்.. 

ஆனால் உண்மையில் என்ன ஆயிற்று... இரு பெரும் கட்சிகளின் எதிர்ப்பு ஓட்டுகளை அள்ளி கொண்டன சிறு, பெரு கட்சிகள்!...

குறிப்பாக, சில ஜாதி கட்சிகளும், சில மதவாத கட்சிகளும் ஓட்டை அள்ளி சென்றுள்ளது இம்முறை.....
சில வி வி ஐ பி, தொகுதிகளும் ... இம்முறை கலக்கத்தில் உள்ளன...

தென் தமிழகத்தை பொறுத்தவரை.. 
நாகர்கோவில்- பிஜேபி பெருவாரியன ஓட்டுகளை பிரித்துள்ளது, இத்தொகுதியின் வெற்றி வித்தியாசம் சில நுறு ஓட்டுகள் தான்...

அதே போல் : 
 கடையநல்லூர், இசுலாமிய கட்சியான  SDPI   ... ஓட்டுகளை  பிரித்துள்ளது..இந்த ஓட்டு பீட்டர் அல்போன்ஸ் பெரிய பாதிப்பை உண்டாகியுள்ளது .... இதே போல் ராமநாதபுரம்,போன்ற பகுதிகளில் ஓட்டுகள் சிறு கட்சிகள் வென்றுள்ளன!...

அதே போல, மோதிரம் சின்னமும்  சில வாகுகளை பெற்றுள்ளன...
இதனால் சில இடங்களில் வெற்றி வித்தியாசம் சில வாக்குகலே!...
அதே போல் தமிழக முழுவதும் சிறு கட்சிகள் கணிசமான ஓட்டுகளை பெற்றுள்ளன!...
இளைஞர்கள்  ஓட்டு எந்த கட்சிகளக்கும் பெரு வாரியாக கிடைக்கவில்லை!

இதனால் இரு பெரு கட்சிகளும் கலக்கத்தில் உள்ளன !....

சனி, 23 ஏப்ரல், 2011

ஆப்பு வைக்குமா சி.பி.ஐ!... கலக்கத்தில் கனி! தயாளு!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சிபிஐ வரும் திங்கள்கிழமை தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரின் பெயர்களும் இடம் பெறும் என்று தெரிகிறது.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு இது பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.பி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதியதவி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டாலும், அந்த நிதியுதவியை டிபி ரியாலிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகியுள்ளது.

குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கித் தந்தததற்கு லஞ்சமாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக சிபிஐ கருதுகிறது.

இதையடுத்து கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் குமார் ரெட்டியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. கலைஞர் டிவி அலுவலகத்திலும் சோதனை நடத்திய சிபிஐ, அதன் பங்குதாரர்கள் என்ற வகையில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடமும் விசாரணை நடத்தியது.

இந் நிலையில் சிபிஐ திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாள், கனிமொழி எம்.பி. ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த 2ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் 80,000 பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது நினைவிருக்கலாம். அதில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா, நீரா ராடியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அதிகாரிகள், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாஹித் உஸ்மான் பல்வா, இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் நிறுவன இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரிகள் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.

இந் நிலையில், வரும் திங்கள்கிழமை துணை குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இதில், தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்படும் என்று தெரிகிறது

திங்கள், 18 ஏப்ரல், 2011

அடி வாங்கியே சன்!......

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க...

எந்திரன் இமாலய வசூலுக்கு  பின் வெளியான , சன் பிக்ச்சர்ஸ்- ன்  படங்கள் அந்த அளவுக்கு ஓடவில்லை! 

இந்த வருசம் வெளியான சன் பிக்ச்சர்ஸ் படங்கள் இரண்டுமே தோல்வி தான்..

இரண்டுமே தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் தான் என்பது  குறிப்பிடத்தக்கது .... 

முதலில் வெளியான "ஆடுகளம்" எதிர்பார்த்த அளவுக்கு கல்லாவும், தியேட்டரும் நிரம்பவில்லை!... பண மற்றும் படை பலத்தால் நுறு நாள் ஒட்டுகிறது சன்!...

அடுத்து வெளியான மாப்பிள்ளை! சொல்லவே வேணாம், மக்களையும் தியேட்டரையும் தாண்டிதான்  ஓடுகிறது...

அந்த அளவுக்கு மொரட்டு மொக்கை  பாஸ்!... விவேக் இல்லேன்னா படம் ரொம்ப வீசீருக்கும்!...

அடுத்த அடுத்த  படங்கள் தோல்வியால்  சன் பிக்ச்சர்ஸ்! சற்று சொர்வடைந்துள்ளது...

தனுஷின் "வேங்கை " படத்தை வாங்கும் முயற்சியை சன் கைவிட்டுள்ளது!....

இருக்காத பின்னே!...

யானைக்கும் அடி சருக்கத்தான்  செய்யும்! 

சனி, 16 ஏப்ரல், 2011

கலக்கத்தில்! கழக புள்ளிகள்!....

என்னங்க சொல்றிங்க.
ஆமாங்க,இந்த வருசம் தேர்தல்- முடிவு - ல, பல அமைச்சர்களின் "தல" உருலபோகுது!...
சரியான போட்டி!.. பணத்துக்கு பணம், படைக்கு படை என்று சில தொகுதிகளில் சில பெரும் புள்ளிகள் மோதினர்... 

ஆதலால்,
 இந்த தேர்தல்- ல, இரு கழகங்களின் புள்ளிகள் ஆடி போய் இருகின்றனர்,

யாரு யாருன்னு பார்போம் :

பொன்முடி / சி.வி. சண்முகம் 
வீர பாண்டி ஆறுமுகம் / அவரின்  உறவினர்
 ஸ்டாலின் / துரைசாமி 
பெரியகருப்பன் / ராஜ கண்ணப்பன்

அமைச்சர்கள் :
> சாமிநாதன் , பன்னீர் செல்வம் , தமிழரசி... இவுங்களும் ஆடி போய் தன 
முன்னால் அமைச்சர்கள் :
 > வளர்மதி அப்பரம் கருப்பையா!
இருக்காங்க !


அப்படியா !..   ஆமாங்கோ 


ஸ்டாலின்! வெற்றியா ? தோல்வியா ?......

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,.....


கொளத்தூரில் துணை முதல்வர் ஸ்டாலின் ஜெயிப்பாரா? இந்தக் கேள்விதான் இன்றைக்கு மீடியா மற்றும் மக்கள் பரபரப்பாகப் பேசும் டாபிக்காக உள்ளது.


காரணம் இந்தத் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் சைதை துரைசாமி செய்திருக்கும் 'வேலைகள்' அப்படி!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கையோடு, அத்தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுகிறார் என்றது வெளியில் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். அ.தி.மு.க., தரப்பில் அத்தொகுதியை யாருக்கு கொடுப்பது என்பது முடிவாகாமல் இருந்தது. இறுதியாக, அத்தொகுதியை தனது பட்டியலில் சேர்த்த அ.தி.மு.க., ஸ்டாலினை எதிர்த்து சைதை துரைசாமியை அறிவித்தது.

உண்மையில் சைதை துரைசாமி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தொகுதியை ஜெயலலிதா தரவில்லை. பழைய ஜானகி அணியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பளித்த மாதிரியும் இருக்கும், தேர்தலில் கவிழ்த்த மாதிரியும் இருக்கும் என்ற ஒரு கல் இரு மாங்காய் கணக்கில் அவருக்குத் தரப்பட்டதுதான் கொளத்தூர். இல்லாவிட்டால் அவருக்கு சைதாப் பேட்டை தொகுதியையே கொடுத்திருப்பாரே ஜெயலலிதா!ஆனால், சைதை துரைசாமி மீதுள்ள இமேஜ், அவரது கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்கள் செய்த 'கிரவுண்ட ஒர்க்' எல்லாமாகச் சேர்ந்து, ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில் சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் சைதை துரைசாமி. எம்ஜிஆரால் பல வசதிகளைப் பெற்றவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதாவால் பழிவாங்கப்பட்டவர். ஆனாலும் கட்சியின் விசுவாசியாகவே தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் அரசியலே வேண்டாம் என பட்டும் படாமலும் இருக்க ஆரம்பித்தார்.

அப்போதுதான் தமிழக மாணவர்களின் ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ் உயர் கல்விக்கான வழிகாட்டும் கல்வியாளராக பொறுப்பேற்றார். இதற்காக மனித நேய மையத்தை நடத்திவருகிறார். எந்த மாணவனிடம் ஒரு பைசா கூட பெற்றுக் கொள்ளாமல், ஆனால் தன் சொந்தப் பணத்தை செலவழித்து மனித நேய மையத்தை அவர் நடத்தி வருகிறார். இதில் படித்த பலர் ஐஏஎஸ், குரூப் ஒன் தேர்வுகளில் வென்று பதவிகளில் உள்ளனர்.

"தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக தன்னை தேர்ந்தெடுத்தால் ஐ.ஏ.எஸ்., அகடமி உருவாக்கி தொகுதி மாணவ, மாணவியரின் முன்னேற்றத்திற்கு உழைப்பேன்' என்பதுதான் இவர் அளித்த ஹைடோக் உறுதிமொழி. அவருக்கு ஆதரவாக, மனிதநேய அறக்கட்டளை மாணவர் மன்றத்தினர், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதும் மாணவர்கள் பிரசாரம் மேற்கொண்டது, ஒட்டுமொத்த பெற்றோரையும் யோசிக்க வைத்தது என்றால் மிகையல்ல.

வாக்குப் பதிவு நாளன்று பிற்பகலுக்குப் பிறகுதான், நடுத்தர மற்றும் வசதியான படித்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அணி அணியாக ஓட்டுச் சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். அவர்களிடம் ஏற்கெனவே வீடு வீடாகப் போய் சைதை துரைசாமியும் அவரது மாணவர்களும் வாக்கு கேட்டு வந்திருந்தனர். ஜெயித்தால், கொளத்தூரில் கல்வி மையங்கள் உறுதி என கற்பூரமடித்து சத்தியம் செய்யாத குறையாக கூறிவிட்டு வந்துள்ளார் துரைசாமி.


 ஸ்டாலினும் அவருக்கு சளைக்காமல், அரசு இதுவரை செய்த சாதனைகளைக் கூறினார்.

முக்கியமாக இந்த அரசு மீது வைக்கப்பட்ட பெரிய குற்றச்சாட்டான மின்வெட்டை, சரிசெய்ய 5 புதிய மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதையும், அடுத்த ஆண்டே அவை செயல்பாட்டுக்கு வரவிருப்பதையும் சுட்டிக் காட்டினார், விவரங்களுடன்.

ஸ்டாலின் மனைவி துர்காவும் நடுத்தர வர்க்கத்துப் பெண்களை கூட்டி, அரசின் சாதனைகள், இனி செய்யப் போகும் விஷயங்கள் குறித்து பொறுமையாக விளக்கினார். இந்தத் தொகுதியில் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை என்று எதுவுமே இல்லை. ஆனால் அதிமுகவுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ்.

இதுதான் திமுகவினரை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது. "இந்தத் தொகுதியில் ஸ்டாலின் ஜெயிக்கிறார் என்றால், வித்தியாசம் சில நூறு ஓட்டுகளில்தான் இருக்கும். துரைசாமி ஜெயித்தாலும் இதே நிலைதான்," என்கிறார்கள் தேர்தல் ஏஜென்டுகளாகப் பணியாற்றிய சில திமுகவினரே!

தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 924 ஓட்டுகளில், 1 லட்சத்து 41 ஆயிரத்து 906 ஓட்டுகள் (68.25) பதிவாகியுள்ளன. இது வழக்கத்தை விட 18-20 சதவீதம் அதிகம்.

"இந்த 20 சதவீதத்தினர்தான் முடிவையும் நிர்ணயிக்கப் போகிறவர்கள். இந்தப் புதியவர்களில் பலர் பழைய அதிமுக ஆட்சியைப் பற்றி பத்திரிகைகளில் கூட பெரிதாக படித்தறியாதவர்கள். 2 ஜி முறைகேடுகள் பற்றி முழுமையாகத் தெரியாமலே, தீர்ப்பெழுதும் மனோபாவம் கொண்ட உயர்நடுத்தர வர்க்கத்தினர். இவர்களுக்கு இலவச செருப்பு ஊழல், சுடுகாட்டு ஊழல் உள்ளிட்ட 16 வித விதமான ஜெ காலத்து ஊழல்கள் பற்றி தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. அதுதான் திமுகவினரைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது!", என்கிறார் கொளத்தூரில் தேர்தல் கண்ப்புக்காக சென்று வந்த ஒரு மூத்த பத்திரிகையாளர்.

இதையல்லாம் தாண்டி முக ஸ்டாலின் ஜெயித்தால், அது அடுத்த முதல்வர் என்ற அந்தஸ்துக்கு அவர் செல்ல மக்கள் தந்த அங்கீகாரமாகத் திகழும்!!

 என்னங்க இந்த முறை ஜெவிச்சுருவிங்கள்ள!....
நன்றி : தட்ஸ் தமிழ்!


திங்கள், 11 ஏப்ரல், 2011

ஜூ. விகடன் கணிப்பு : அதிமுக கூட்டணி 141 ! திமுக கூட்டணி 92 !


ஜூனியர் விகடன் தேர்தல் முடிவுகள்!
 அதிமுக கூட்டணி 141 இடங்களிலும் திமுக கூட்டணி 92 இடங்களிலும் முன்னணியில் இருப்பதாக ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது.இந்த இதழ கருத்து கணிப்பு என்று ஏதும் நடத்தவில்லை. ஆனால், தனது நிருபர் குழுவின் கணிப்பை வைத்து இந்த முடிவை வெளியிட்டுள்ளது.
அதிமுக கூட்டணி 141:

இதன்படி அதிமுக கூட்டணியில் அதிமுக 105 இடங்களிலும், தேமுதிக 17 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 இடங்களிலும், மனித நேய மக்கள் கட்சி 3 இடங்களிலும், கொங்கு இளைஞர் பேரவை 1 இடத்திலும் என மொத்தம் 141 இடங்களில் முன்னணியில் உள்ளதாகவும்,

இந்தக் கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், பார்வர்ட் பிளாக் ஆகியவை போட்டியிடும் 7 இடங்களிலும் தோல்வி அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி 92:

திமுக கூட்டணியில் திமுக 67 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களி்லும், பாமக 7 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களிலும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 1 இடத்திலும் என மொத்தம் 92 இடங்களில் முன்னணியி்ல் உள்ளதாகவும்,

இந்தக் கூட்டணியில் உள்ள இந்திய தேசிய முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னணிக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடும் 5 இடங்களிலும் தோற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை இரு கூட்டணிகளும் பிடிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில், (141+92=233) இன்னும் ஒரு தொகுதி குறித்து அதில் விவரம் இல்லை.

நன்றி : தட்ஸ் தமிழ் !

பேஸ் புக்! நண்பனா! எதிரியா!.. ஒரு பார்வை

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க!...
உலகத்தில் முன்றாவது மக்கள் தொகை கொண்ட  நாடு பேஸ்புக் தான்! ஏற குறையே 65 கோடிகள் கொண்ட  ஒரே இணையதளம் பேஸ்புக் தான்! இன்று கூக்லேயே சீண்டி பார்க்கும் நிறுவனம் இது தான்!...

வருவோம் விசயத்துக்கு!...

மொபைல் போன் இல்லாதவன் கூட பேஸ்புக் அக்கௌன்ட் வச்சுருக்கான் பா, அந்த அளவுக்கு அதிவேக வளர்ச்சி! இந்தியாவின் பெரு நகரங்களில் தன்னுடைய காளை பதித்துவிட்டது பேஸ்புக்!...

நண்பன் தான்! சொல்றாங்க பலபேரு! உலகத்துல எந்த முலைலே இருந்தாலும் நம்மை இணைக்கிற வலிமை உள்ளது அதனிடம்..
உறவுகள் விட்டு போகாமல் இருக்க பேஸ்புக் உதவுகிறது, பள்ளி, கல்லூரி நண்பர்களை இணைக்கவும், வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும்  , தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கும் ஒரு இணைப்பு பலமாக இருக்கிறது!....
இணையத்தில் படைப்புகளை வெளிக்கொணரவும் உதவியாய் இருக்கிறது !..


என் வாழ்க்கை- ஐ பிரித்த எதிரி பேஸ்புக் என்று சில ஆண்களும், பெண்களும் கூறியுள்ளனர்! ஆமாங்க சிலர் தாம்பத்திய உறவுகளிலே ஆப்பு  வைத்திருக்கிறது... அமெரிக்காவில் சிலர் விவாகரத்து பெறுவதற்கு காரணம் பேஸ்புக் தானாம் ! பேஸ்புக்- ஐ ஒரு முறை உபயோகித்தால் மீண்டும் உபயோகிக்க வைக்கிறது  பேஸ்பூக்கின் வசீகரம்! அதனால் சில கணவன் மனைவி -களுக்கு பேஸ்புக் எதிரியாகவே உள்ளது !


அது மட்டும் இல்லிங்கோ! பேஸ்புக் சிறுவர்களையும் இளைஞர்களையும் அதிமாக கவர்ந்துள்ளது!  அதனால் படிப்பு ஆர்வம் குறைந்து வருவதாக பெற்றோர்கள் கூறிகின்றனர்!

பெண்கள் சிலர், பேஸ்புக்கில் உறுபினர்களாக உள்ளனர், அவர்கள் தன்களுடையே புகைப்படத்தை அதில் வெளியிடுகிறார்கள், சில வலை பயங்கரவாதிகள் அந்த புகைப்படங்களை, மார்பிங் செய்து ஆபாச புகைப்படமாக இணையத்தில் உலவ விடுகின்றனர்!... பொதுவாக பேஸ்புக்கில் புகைப்படங்களை பெண்கள் தவிர்ப்பது நல்லது!...

எது எப்படியோ!...
வளர்ச்சியை முறையாக பயன்படுத்தினால் நல்லது !
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான்!...
 

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

சீரிய சீமான்! பயந்த காங்கிரஸ்!.......


அலறிய காங்கிரஸ் :சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரத்தை எதிர்கொள்ளப் பயந்த காங்கிரஸ்வேட்பாளர் ஜோதிமணி, "அண்ணே தயவு செய்து என்னுடைய தொகுதிக்கு மட்டும் பிரச்சாரத்துக்கு வந்துடாதீங்க" என்று வேண்டி கடிதம் எழுதியுள்ளார்


நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரத்தில் குதித்துள்ளார் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான்.

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளில் மட்டும் அவர் அக்கட்சியைத் தோற்கடிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் வைத்து வருகிறார். அவர் செல்லுமிடங்களிலெல்லாம் பெண்களும் ஆண்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வருகிறார்கள்.

அவரது பிரச்சாரத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல ஊர்களில் சீமான் அடுத்து எந்த இடத்தில் பேசப்போகிறார் என்று கேட்டு, அவர் செல்லும் முன்பே போய் மக்கள் காத்திருக்கின்றனர்.

"ஈழத் தமிழரின் உயிரைக் குடித்த காங்கிரஸை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவதே, நமது தமிழ் சொந்தங்களுக்கு இந்தத் தேர்தலில் நாம் தரும் ஆறுதல். அடுத்த தலைமுறைத் தமிழனுக்கு காங்கிரஸ் கட்சி என்றால் என்னவென்றே தெரியாத நிலை ஏற்பட வேண்டும்" என்று அவர் பேசுவதை மிகுந்த உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் மக்கள்.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில், எதிரணி வேட்பாளர் யாராக இருந்தாலும் கட்சி பார்க்காமல் அவர்களுக்கு வாக்களிக்குமாறு சீமான் கேட்டுக் கொள்கிறார்.

அவரது பிரச்சாரத்துக்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து மிரண்டுபோய்க் கிடக்கிறார்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள்.

சமீபத்தில் கரூர் தொகுதியில் அவர் பிரச்சாரத்துக்கு செல்லத் திட்டமிட்டிருந்தார். அப்போது, அவருக்கு கரூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஜோதிமணி ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

"அண்ணே, என்னோட தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்ய வந்துடாதீங்க" என்று அதில் கேட்டுக் கொண்டிருந்தாராம்.

ஆனால் சீமான் தனது திட்டத்தை மாற்றவில்லை. திட்டமிட்டபடி கரூருக்குச் சென்றார். அவர் பேச்சைக்கேட்க எக்கச்சக்க கூட்டம் .

கூட்டத்தில் பேசிய அவர், "காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தங்கை ஜோதிமணி என்னை பிரச்சாரத்துக்கு வரவேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கொண்டிருந்தார். என்ன செய்வது... என்னால் அப்படி இருக்க முடியாது தங்கையே. 

உன்னுடைய, என்னுடைய தமிழ் உறவுகளை படுகொலை செய்த மகா பாதகர்கள் காங்கிரஸ்காரர்கள். அந்தக் கட்சியில் இருப்பது உன்னுடைய தவறு. இந்த நிமிடம் அந்தக் கட்சியை விட்டு நீ விலகி வந்தாலும், உன்னை நான் வெற்றிபெறச் செய்வேன்.

காங்கிரஸ் என்ற கட்சிதான் தமிழர்களின் முதல் எதிரி. இதனை ஜோதிமணி போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்," என்று அனல் பறக்க பேசிமுடித்தார்.

நன்றி: தட்ஸ் தமிழ் 

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

அவசரம் அவசரமாக, படத்தை வாங்கும் கலைஞரின் நிதிகள்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
தேர்தல் வரபோகுதுல! அதனால என்ன!... 
கலைஞரின் வழிவந்த நிதிகள் தற்பொழுது சினிமா துறையில் ஈடுபட்டு வருகின்றன . இதனால் சிறு மற்றும் பெரு படங்களை வாங்கியும் எடுத்தும் வருகின்றன.

தேர்தல் வர்ரர்தால , அடுத்து ஆட்சி மாற்றம் வந்தாலும் நம்ம சினிமா பொழப்பு ஓடனும், அதனால இப்பவே பல  படத்தே வாங்கும் முயற்சியில் இருக்காங்க...

அதுல முதலிடம் பெறுவது சன் அதிபதி கலாநிதி!...

சன் பிக்சர் வாங்கிய படங்கள் :
 > எங்கேயும் காதல்  > அவன் இவன்  > ags  நிறுவனம்  தயாரிக்கும் படங்கள்!
> பில்லா- 2  பேச்சு வார்த்தை  > முன்னணி நிறுவனங்களுடன் மறைமுக பேச்சு வார்த்தை!....

அடுத்த இடத்தில் உதய நிதி!

> ஏழாம் அறிவு  > கோ  > ஒரு கல்  ஒரு கண்ணாடி >மற்றும் முன்னணி நடிகர்களின் கால்ஷீட்!

அடுத்த இடத்தில் தயாநிதி !

> " மங்காத்தா " > வானம்  > வேட்டை >ஆதிபகவன் > மற்றும் சில முன்னணி நடிகர்கலின் கால்ஷீட்!.....


இந்த விசயத்தில் எப்டி உசாரா வேலை பாக்குறாங்க !!!...

எது எப்படியோ பொழப்பு நடந்தா சரி! 

நக்கீரனின் இரண்டாம் கட்ட தேர்தல் முடிவுகள் வெளியீடு!

நக்கீரன் கல ஆய்வு!சென்னை: நக்கீரன் இதழ் நடத்தியுள்ள 2ம் கட்ட கருத்துக் கணிப்பின்படி 117 தொகுதிகளில், திமுக கூட்டணி 69 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 48 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.


தமிழ்நாட்டின் சட்டமன்ற, மக்களவைத் தேர்தல் முடிவுகளை மிகச் சரியாக வெளியிட்டு வரும் இதழ் நக்கீரன்.

நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மார்ச் 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் நக்கீரன் முதல் கட்ட கருத்துக் கணிப்பு நடத்தியது.

அப்போது அதிமுக கூட்டணியில் மதிமுக இருந்தது. திமுக-அதிமுகவின் இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகள் வெளியாகவில்லை. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேர் வீதம் 234 தொகுதிகளில் 1,170 பேர் களமிறங்கி இந்த மெகா சர்வேயை நடத்தினர்.

ஒரு தொகுதிக்கு 400 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் ஆண், பெண்களிடம் சரிபாதியாக, படித்தவர்கள், பாமரர், கிராமத்தினர், நகர்ப்புறத்தினர், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர், சொந்தத் தொழில் செய்வோர், மாணவர்கள் , வீட்டுவேலை செய்வோர், இல்லத்தரசிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வியபாரம் செய்வோர், சொந்த விவசாயம் செய்வோர், விவசாயக் கூலிகள், கூலி வேலை செய்வோர், உயர் நிலை பணியாளர்கள், வேலையில்லாதோர் என அனைத்துத் தரப்பினரிடமும் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

தொகுதிக்கு 400 பேரை ஆண்கள், பெண்கள் சரிபாதி அளவிலும், வயதளவில் 18-25, 25-40, 40-55, 55க்கு மேற்பட்டோர் என்று பிரித்தும் தேர்வு செய்து கருத்துக் கணிப்பை நக்கீரன் நடத்தியது.

அதிலும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மத வழி சிறுபான்மையினர் என அந்ததந்தப் பகுதியில் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதாச்சாரப்படி வாக்காளர்களை அடையாளம் கண்டு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் 16 கேள்விகள் அடங்கிய படிவத்தில், வாக்காளர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் நக்கீரன் சர்வே டீம் 93,600 பேரிடம் கருத்துக் கணிப்பை நடத்தியது.

அந்தக் கருத்துக் கணிப்பின் படி திமுக கூட்டணி 146 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளதும், 8 தொகுதிகளில் நிலைமையை கணிக்க முடியாத அளவுக்கு இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளதும் தெரியவந்தது.

அதே நேரத்தில் பெரும்பாலான தொகுதிகளில் இரு கட்சிகளும் ஒன்று அல்லது இரண்டு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் ஒருவரைவிட ஒருவர் முன்னணியில் இருந்ததும் தெரியவந்தது.

இந் நிலையில் அதிமுக கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறியது. மேலும் திமுக, அதிமுக ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு தங்களது இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன. இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கின.

நக்கீரன் 2வது கட்ட கருத்துக் கணிப்பு:

இந் நிலையில் நக்கீரன் 234 தொகுதிகளிலும் தனது 2வது கட்ட கருத்துக் கணிப்பை நடத்தியது.

234ல் பாதி தொகுதிகளான, 117 தொகுதிகளின் முடிவை இப்போது நக்கீரன் வெளியிட்டுள்ளது.

முடிவுகள் விவரம்:

 

இதன் படி திமுக கூட்டணி 69 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 48 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

திமுக கூட்டணியில் திமுக 45 இடங்களிலும், காங்கிரஸ்  11 இடங்களிலும், பாமக 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1 இடத்திலும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் 1 இடத்திலும் வெற்றிப் பாதையில் சென்று கொண்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் அதிமுக 38 இடங்களி்லும், தேமுதிக 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களி்லும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், மனித நேய மக்கள் கட்சி 1 இடத்திலும், கொங்கு இளைஞர் பேரவை 1 இடத்திலும் முன்னணியில் உள்ளன.

மேலும் 117 தொகுதிகளின் முடிவுகள் அடுத்த இதழில் வெளியிடப்படும் என்று நக்கீரன் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் எந்த கூட்டணிக்கும் ஆதரவான அலையும் இல்லை, எதிரான சுனாமியும் இல்லை என்றும் இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளதாக நக்கீரன் கூறியுள்ளது.


நன்றி : தட்ஸ் தமிழ் மற்றும் நக்கீரன் குழு!

வியாழன், 7 ஏப்ரல், 2011

நடிகர்களுக்கு மட்டும் ஓட்டு போடாதிங்க!

என்னங்க சொல்றிங்க ,
ஆமாங்க,
நடிக்ரவன்லாம் நாடாள ஆசை பட்டா!..


சினிமா-வுல நல்லவனாகவும், நிகழ் வாழ்கையில் போலியாகவும் சுயநலமாகவும் இருக்கின்றனர் சில விசமிகள்!...


தன்னை கேப்டன் என்று சொல்லி கொள்ளும் நடிகர், வேட்பாளரை அடிக்கிறார்... தண்ணி அடிக்கவில்லை என்றால் பேச்சு வராது என்கிறார்!...

இன்னொருவர் ( கருப்பு கண்ணாடி பொட்டிருப்பார்) சாதியின் பெயரால் கட்சியை நடத்தி வருகிறார்!  இவருக்கு எந்த தொகுதி இருகின்றது எந்த தொகுதி இல்லை என்று கூட தெரியவில்லை.. அடிப்படை அரசியல் அறிவு இல்லாதவர்களுக்கு ஏன் அரசியல்!..இன்னொருவர் சாதியின் பின்னணியில் கட்சி ஆரம்பித்தார்!.. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இரு பெரு கழகங்களிலும் இருந்துரிக்கிறார்... அனால் கடந்த தேர்தலில் நிண்ட இடத்தில எல்லாம் டேபாசிட் இழந்துள்ளார்!...மக்களே ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள்! இவர்கள் அனைவரும் சேவை செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வரவில்லை, தங்களுடைய பங்காளி சண்டயை மேருகுட்டத்தான்...

விலைமதிப்புள்ள உங்கள் ஓட்டை! ( பெண்களை ) 
 விலை மதுவாக்கி பாக்கிறவனுக்கு போடுவிங்களா!...

பெண்களின் வயிற்றில் பம்பரம் விட்டவன் எல்லாம்! 
பெண் கொடுமையை பற்றி பேசுறான்!

உங்கள் ஓட்டை யாருக்கு வேனால் போடுங்கள் ஆனால், இந்த நடிகர்களுக்கு (கூத்தாடிகள்)  மட்டும் போடதிர்கள்!....
யோசிங்க! யோசிங்க !

புதன், 6 ஏப்ரல், 2011

கன்னியாகுமரியில் காசை இறைக்கும் கட்சிகள்! பிஜேபி முதலிடம் !

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் காசை இறைக்கின்றன, அதிலும் தேசிய கட்சியான பிஜேபி கன்னியாகுமரியில் கொஞ்சம் வாக்கு வங்கியை வைத்துள்ளது ...


இதை எப்டியாவது தக்கவைத்து கொள்வதற்காக! வாக்களர்களுக்கு பணத்தை இறைக்கிறது! ஏற குறையே பத்து கோடி வரை செலவு செய்ய தயாராக இருக்கிறதாம்!
இத்தொகை திமுக மற்றும் அதிமுக செலவு செய்யும் தொகையை விட அதிகம் ! ( ஒரு தொகுதிக்கு )

பிஜேபி - ஐ ஒரு போதும் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் என்று தெரியவில்லை அவர்களுக்கு!
ஆனால் அங்கு கிறிஸ்தவர்கள் அதிகம், இதனால் வெற்றி என்பது கொஞ்சம் கடினம்...

பொறுத்திருந்து பாப்போம்!

அழாதே அழகிரி: கலைஞர்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
மதுரை முதல்வர், மதுரை மன்னர் , அஞ்சாநெஞ்சன், இடைதேர்தல் நாயகன் ... என்று பல புனை பெயர்களும் மற்றும் பரவலாக..ரவுடி மற்றும் கோவக்காரன் அனைத்துக்கும் சொந்தக்காரர். 
மத்திய அமைச்சரும் முதல்வரின் மகனும்மான அழகிரி....

மதுரையில் இவரை விட யாரும் பேமஸ் கிடையாது, 
தேர்தலை  முன்னிட்டு வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக அழகிரி மீது வழக்கு தொடுத்துள்ளது தேர்தல் ஆணையம்... அழகிரி இதனால் மிகுந்த கோவம் அடைந்துள்ளார்...
இதற்க்கு காரணமான அந்த கலெக்டர் ( சகாயம் ) எஸ்.பி யும் .. ரெண்டு -ல, ஒன்னு பாத்துறேன் கிளம்பிய அழகிரிக்கு சென்னை கால் வந்தது..


அந்த காலில், மவனே அவசர படாத தேர்தல் முடியட்டும் அவங்களை பாத்துகிடலாம், இப்ப சும்மா இரு!.. என்று அன்பு கட்டளை வர அழகிரியும் தன் வேலையே பாக்க போய்விட்டார்...

தேர்தலில் திமுக வென்றால்! அந்த எஸ். பி யும் கலெக்டர் - ம்       காலி தான்!
அதிமுக வென்றால் அந்த கலெக்டர் தலைமை செயலாளர்- கூட வரலாமாம்!

பொறுத்திருந்து பார்போம்! 
என்ன நடக்குது என்று !

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

எதியுரப்பாவின் ஏமாற்று வேலை!


மீண்டும் சர்ச்சையில் எதியுரப்பா!


பெங்களூர்: உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு எல்லா மாநிலங்களும் பரிசுகளை அறிவித்தது போல கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும் பரிசை அறிவித்தார். ஆனால் அது சட்டவிரோத அறிவிப்பாக மாறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணிக்கு பல்வேறு மாநில அரசுகளும் பலவிதமான பரிசுகளை அறிவித்துள்ளன. அதேபோல கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும், இந்திய வீரர்களுக்கு பெங்களூருக்கு அருகே பெங்களூர் வளர்ச்சி ஆணையத்திற்குச் சொந்தமான 4000 சதுர அடி நிலத்தை வழங்குவதாக அறிவித்தார்.

ஆனால் இதை அவரால் வழங்க முடியாது என்பது சட்ட வல்லுநர்களின் கருத்தாகும். காரணம், முதலில் இந்த அறிவிப்பையே அவரால் வழங்க முடியாது என்பதால். அதற்கான அதிகாரம் எதியூரப்பாவிடம் இல்லை என்பதால், இந்த நில ஒதுக்கீட்டை அவரால் செய்ய முடியாது என்பது சட்ட வல்லுநர்களின் கருத்தாகும்.

பெங்களூர் வளர்ச்சி ஆணையம் ஒரு சுயேச்சையான, தனி அதிகாரங்கள் கொண்ட அமைப்பு. இந்த அமைப்புக்குச் சொந்தமான நிலத்தையோ பிற இடங்களையோ தனி நபர்களுக்கோ அல்லது வேறு யாருக்குமோ ஒதுக்குமாறு கர்நாடக அரசு உத்தரவிட முடியாது. இதை கர்நாடக உயர்நீதிமன்றம் தெளிவாக ஏற்கனவே கூறியுள்ளது.

முன்னாள் அமைச்சர் குமார் பங்காரப்பாவுக்கு, பிடிஏ நிலம் ஒதுக்கப்பட்ட வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் பிறப்பித்த உத்தரவில், மாநில அரசு அல்லது கர்நாடகமுதல்வர் ஆகியோருக்கு, பிடிஏ நிலத்தை யாருக்கும் ஒதுக்கி உத்தரவிடும் அதிகாரம் இல்லை என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது எதியூரப்பா அறிவித்துள்ள அறிவிப்பும் சட்டவிரோத அறிவிப்பாக கருதப்படுகிறது. அவரால் பிடிஏ நிலத்தை ஒதுக்கித் தர முடியாது என்ற நிலையில் எப்படி அவர் வாக்குறுதி அளித்தார் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

மேலும் பிடிஏ நிலத்தை ஒதுக்கீடு செய்வதில் ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளைப் பார்த்தால் இந்திய அணிக்கு ஒரு துண்டு நிலம் கூட ஒதுக்க முடியாது.

ஏற்கனவே தனது குடும்பத்தினருக்கு பிடிஏ நிலங்களை சகட்டு மேனிக்கு வளைத்துப் போட்டு ஒதுக்கிக் கொடுத்ததால்தான் சர்ச்சையில் சிக்கினார் எதியூரப்பா. விதிமுறைகள் முழுக்க தெரிந்திருந்தும் கூட, இப்போது எல்லோரும் பரிசு தருகிறார்களே என்பதற்காக தன் பங்குக்கு பிடிஏ நிலத்தை ஒதுக்கித் தருவதாக அறிவித்து விட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் எதியூரப்பா.

எதியூரப்பாவின் அறிவிப்புக்கு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் நக்கலடிக்க ஆரம்பித்துள்ளனர். தன் மீதான குற்றச்சாட்டுக்கள், தவறுகளை மறைக்க இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் எதியூரப்பா. ஆனால் இதன் மூலம் மாநில அரசின் பெயரை மீண்டும் கெடுத்து தேசியஅளவில் அவமானத்தைக் கொண்டு வந்து விட்டார் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.

பிடிஏ ஆணையர் பரத் லால் மீனாவும் கூட எதியூரப்பாவின் அறிவிப்பு குறித்து ஆச்சரியம் வெளியிட்டுள்ளார். நில ஒதுக்கீடு செய்யக் கோரி அரசு எங்களுக்கு உத்தரவிட முடியாது. எனவே முதல்வர் எந்த அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக அரசிடமிருந்து எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்றார்.

எதியூரப்பாவை சர்ச்சைகள் விடாது போல!

நன்றி: தட்ஸ் தமிழ்

ஒரே மேடையில் குடிமகணும்! குடிமகளும்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க!...

ஒரே மேடைல குத்தாட்டம்!... ப்ளாக்கும்! வொய்ட்டும்!கோவை: கூட்டணி அமைத்தாலும் இதுவரை ஒரே மேடையில் ஏறி பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தேமுதிக தலைவர் விஜய்காந்தும் நாளை கோவையில் ஒரே இடத்தில் கூட்டாக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.


அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது தொகுதிப் பங்கீடு, இடங்கள் தேர்வு ஆகியவை தொடர்பாக ஜெயலலிதாவும் விஜய்காந்தும் நேரில் சந்தித்துப் பேசவே இல்லை. இரு கட்சிகளின் தேர்தல் குழுவினர் தான் பேசி 41 தொகுதிகள் என்று முடிவு செய்தனர்.

இதையடுத்து ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் வந்து 20 நிமிடங்கள் மட்டுமே சந்தித்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு உடனே வெளியேறிவிட்டார் விஜயகாந்த் .
இந் நிலையில் இடையே ஏற்பட்ட கலாட்டாவில் இடதுசாரிகளை சேர்த்துக் கொண்டு மூன்றாவது அணி அமைக்கப் போவதாக ஜெயலலிதாவை விஜய்காந்த் மிரட்டினார்.

இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் தனது பிரச்சாரத் திட்டத்தை அறிவித்துவிட்டு பயணத்தையும் ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா. மேடையில் தனக்கு சமமாக விஜய்காந்துக்கு இடம் தர ஜெயலலிதா விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

அதே போல மரியாதை தரத் தெரியாத ஜெயலலிதாவுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்ய விஜய்காந்தும் விரும்பவில்லை.

இந் நிலையில் பிரச்சாரத்தின்போது அதிமுக கொடிகளைப் பிடிக்கக் கூடாது என்று அதிமுக தொண்டர்களை திட்டி, அந்தக் கட்சியினரின் விமர்சனத்துக்கும் ஆளானார் விஜய்காந்த்.

இதற்கிடையே ஜெயலலிதாவும், விஜய்காந்தும், இடதுசாரித் தலைவர்களும் ஒரே மேடையில் ஏறி பிரச்சாரம் செய்ய முடியுமா என திமுக தரப்பு கேள்வி எழுப்பி வருவதோடு, ஜெயலலிதாவுக்கும் விஜய்காந்துக்கும் பிரச்சனைகள் நிலவுவதை ஹை-லைட் செய்து வருகிறது.

இந் நிலையில் ஜெயலலிதாவை சமீபத்தில் ஓடிப் போய் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், விஜய்காந்தும் நீங்களும் நாங்களும் சேர்ந்த ஒரு கூட்டம் நடத்துவதே மக்களிடம் நல்ல பெயர் வாங்க உதவும் என்று கூற, எனக்கு டூர் இருக்கே, நேரம் இல்லையே என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார் என்கிறார்கள்.

ஒற்றுமையில்லாத இந்தத் தலைவர்களின் செயல்பாடுகள் மக்களிடத்திலும் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்ற அச்சம் அந்த அதிபுத்திசாலி பத்திரிக்கையாளருக்கும் ஏற்பட்டுள்ளது. அவரது கடுமையான முயற்சியாலும் இடதுசாரி தேசியத் தலைவர்கள் சிலரது தலையீட்டினாலும், வற்புறுத்தலாலும் விஜய்காந்துடன் ஜெயலலிதா ஒரே மேடையில் தோன்ற இப்போது ஒப்புக் கொண்டுள்ளார்.

இதன்படி கோவையில் நாளை நடக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதிமுக தலைமைக் கழகம் இதை அறிவித்துள்ளது.

கோவை சிதம்பரம்  பூங்காவில் நாளை மாலை நடக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் , விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் பரதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கு பெறுகின்றனர்.

விஜயகாந்த் பிரச்சார பயண பட்டியலின் படி நாளை தஞ்சாவூரில் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால் ஜெயலலிதாவின் இந்த திடீர் முடிவால் விஜயகாந்த் தஞ்சாவூர் பிரச்சாரத்தை தள்ளிவைத்துவிட்டு நாளை கோவை செல்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் ஜெயலலிதா ஒரே மேடை ஏறி, அதில் வைகோ பெயரை ஜெயலலிதா கூறியதும் மக்கள் கூட்டம் ஆராவாரம் செய்ய, ஜெயலலிதாவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது நினைவுகூறத்தக்கது.

கூட்டத்தில் அதிகமான மதிமுக கொடிகள் இருந்ததற்காக அதிமுக நி்ர்வாகிகளைக் கூப்பிட்டு ஜெயலலிதா கடிந்து கொண்டதாக செய்திகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது...

பாப்போம்!...

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

விஜயகாந்த் மீண்டும் உலறல்!

கேப்டன் பேச்சு! விடிஞ்சா போச்சு!...

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க!...


திண்டுக்கல் மாவட்டம்  ஆத்தூர் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்,  தனது கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக தர்மத்துப்பட்டியில் வாக்கு சேகரித்தார். 

பிரச்சாரத்தின் போது விஜயகாந்த்,     ‘’நானாவது எந்த பதவியும் வேண்டாம்னு சொல்லிவிட்டு வெய்யிலில் சுத்துறேன்.     அவுங்க வர்றாங்களா.   4 , 5 மணிக்கு மேல வந்து டேய் கருப்பா,    டேய் மாடசாமி என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிச்சாதான் சரிப்பட்டு வரும்’’ என்று பேசினார்.

விஜயகாந்தின் இந்த பேச்சால் அவரது தொண்டர்களும், மக்களும் குழப்பத்திலும் எரிச்சலும் ஆகியுள்ளனர்....
கேப்டன் பேசி வருவதை பாத்தா! தேர்தல்- கணிப்பயே மாத்திடுவார் போல தெரிகிறது.....