வெள்ளி, 14 ஏப்ரல், 2017

டெல்லியில் தமிழக விவசாயிகள் சேலை கட்டி நூதனப் போராட்டம்!

டெல்லி ஜன்தன் மந்தரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராடிவரும் தமிழக விவசாயிகள் 32-வது நாளான இன்று பெண்களைப் போல வேடமிட்டு நூதன முறையில் போராடி வருகின்றனர். அவர்கள் “கோரிக்கைகளைக் கொண்டு வரும் விவசாயிகளை பிரதமர் கண்டுகொள்வதில்லை,21+ சேலை கட்டிவரும் பெண்களை மட்டும் சந்தித்து அவர்களிடம் குறைகேட்கிறார்” எனக்கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஞாயிறு, 24 மார்ச், 2013

படங்களை வாரி குவிக்கும் தொலைக்காட்சிகள் !

என்னங்க சொல்றிங்க ,

அந்த ஆட்சில தான் ரெண்டு டிவிய  தவிர வேறயாரும்   தொலைக்காட்சி உரிமையே வாங்க முடியாது,

ஆட்சி மாறினப்ப சும்மா இருந்தவுங்கலாம், இப்ப சுறு சுறுப்பா படத்தை வாங்க ஆரம்பிச்சுட்டாங்க....


இப்பயும் சூரிய தொலைக்காட்சியின் ஆதிக்கம் இருந்தாலும், சற்று  அடக்கியே வாசிக்குது, ( எனா ஆட்சி அவுங்கட்ட இல்ல பாரு )

நட்சத்திர தொலைக்காட்சி சில சிறு குறு பெரு  படங்களையும், சர்ச்சைக்குறியே படங்களை வாரி குவிக்குது... ( காற்று உள்ள போதே தூற்றிகொள் )

ஆட்சி ல உள்ளவுங்க டிவி யோ, எல்லாத்தையும் அள்ளும்னு  பாத்தோம்  அமதியவே இருக்காங்க ( புலி பதுங்குவது பாயா தானோ )

அவர் பேருல உள்ள டிவி அட நீ வேற சும்மா இருப்பா, ( கம்பெனியே  அபராதத்தில தான் ஓடுது )


சன் டிவி கைபற்றி இருக்கும் படங்கள்(2013) :


 
> பரதேசி
> கண்ணா லட்டு தின்ன ஆசையா
>  அலெக்ஸ் பாண்டியன்
>ஒன்பதுல குரு
> ஆதி பகவன்
> தலைவா
>சிங்கம் 2
>தீயா வேலை செய்யனும் குமாரு
>உதயம் NH 45
> சென்னையில் ஒரு நாள்
>சேட்டை
>குட்டிபுலி
>பிரியாணி
> வனயுத்தம் .....

விஜய் டிவி கைபற்றி இருக்கும் படங்கள்(2013) :


> விஸ்வரூபம்
>கடல்
>மத கஜ  ராஜ
>தில்லு முல்லு
>வத்திகுச்சி ....


ஜீ டிவி கைபற்றி இருக்கும் படங்கள்(2013) :


> அமைதி படை 2
> 555
> ஹரிதாஸ்
>சூது கவ்வும் ....

 அது மட்டும் இல்லாம இந்த வருஷம் 100 கோடிக்கு மேல தமிழ் படத்துல முதலீடு  செய்ய போரரங்கலாம்.....

  

புதன், 15 ஆகஸ்ட், 2012

இலவச மொபைல் ரீ - சார்ஜ் !

என்னங்க சொல்றிங்க ,
           
                                                             
                    இலவச மொபைல் ரீ - சார்ஜ் !  உங்களுடைய விவரங்களை பதிவு செய்து,  பின்னர் எளிதாக  மொபைல் ரீ - சார்ஜ்  செய்து கொள்ளலாம்...

அந்த  வலை தளத்துக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் :

                click here!



சனி, 21 ஜனவரி, 2012

கமல், விஜய் , சூர்யா வை பின்னுக்கு தள்ளியே அஜித்! இரண்டாவது இடத்தையும் பிடித்தார்

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

கோடம்பாக்கம் முழுவதும் இதே பேச்சு, பில்லா-2 - ன் வெளிநாட்டு உரிமை 5 .30  கோடிக்கு விற்பனை!  வாயை பொளந்த கோலிவுட் கோமாளிகள்,



இது வரைக்கும், கமலின் மன்மதன் அம்பு, விஜயின் நண்பன் , சூர்யாவின் 7 - ம் அறிவு ஐந்து கோடிக்கு விற்பனையானது ...



சமிபத்தில் அஜித் நடித்து வெளியான " மங்காத்தா" படம் வெளிநாட்டு உரிமை 3.75 கோடிக்கு விற்பனையாகி, 9 கோடி வரை வசூலை அள்ளியது குறிப்பிடதக்கது... 

இதுநாள் வரைக்கும் ரஜினி படம் தான் முதலில் ஐந்து கோடியை தாண்டி விற்பனையாகியுள்ளது, எந்திரன் படம் 15  கோடிக்கு விற்பனையானது 
குறிப்பிட தக்கது ....



அஜித் இரண்டாவது இடத்தை பிடித்து, மற்ற மூவரையும் பின்னுக்கு தள்ளியுள்ளார்...

அதே போல உள்நாட்டு உரிமைக்கான போட்டிகள் அதிகரித்துள்ளன, 

தொலைக்காட்சி உரிமையை வாங்குவதற்கு மும்முனை போட்டி நடந்து வருகிறது..


ஞாயிறு, 15 ஜனவரி, 2012

புதிய தலைமுறையின் ஏமாற்று வேலை அம்பலம்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,


என்னடா இவன் இப்புடி சொல்றான்னு நினைக்காதிங்க, 


புதிய தலைமுறைன்னு ஒரு டிவி இருக்குன்னு தெரியும்ல, அது யாரோடதுன்னு தெரியுமா....






SRM  குழுமத்தின் தலைவரான பாரிவேந்தர் என்று அழைக்கப்படும் பச்சைமுத்து, 






ஊழல் எதிரானவர்கள் என்று தன்னை ஓங்கி ஒலித்து கொண்டிருக்கும் அந்த டிவி தான்...


இள வட்டங்களை, இழுத்து போட்டு டிவி நடத்தி கொண்டிருக்கும் அந்த டிவி....


இந்திய பிரபலமான " ஆங்கில செய்தி சேனல்-  ndtv   " அப்பிடியே காப்பி செய்து, தமிழ்ல ஒளிபரப்பி கொண்டிருக்கிறது,


அந்த டிவி நிறுவனர் பச்சைமுத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் வருடத்திற்க்கு 300  கோடிகளுக்கு மேல் நன்கொடையாக பெறப்படுகிரதாம், 


இதை பற்றி மேலும் அறியே: கீழ கிளிக் செய்யவும்: http://jmdtamil.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF   


பாருங்க ஊருக்கெல்லாம் உபதேசம் செய்றாங்க, இவிங்க செய்றத பாருங்க.....

சனி, 14 ஜனவரி, 2012

நாசுக்கா நண்பனை நசுக்கியே சன்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,


"நண்பன்" இந்தி ( 3 இடியேட்ஸ்) ரீ மேக், எல்லாத்துக்கும் தெரிந்ததே, அது இல்ல நம்ம மேட்டர்!... 






கடந்த வார வரைக்கும் நண்பன் படத்தை சன் பிக்ச்சர்ஸ் தான் வெளியிடுவதா இருந்துச்சு, திடிர்னு படத்தை தயாரிச்ச ஜெமினி பிலிமே வெளியிட்டது....


நண்பர் விசய், ஆளும் தரப்புக்கு விசுவாசமாக இருப்பது எதிர் ( திமுக ) தரப்புக்கு புகைச்சலாகவே இருந்து வந்தது... 
இதுனால நம்ம எதிரியே நாமே வளத்து உட்றது நல்லது இல்லே -னு 
சூரிய தரப்பு கடுமையானா அட்வைஸ் சொல்லி இருக்காங்க!






இதுனால "டிவி " தரப்பு படத்தை பப்ளிஷ் பண்றதை குறைசிடுச்சு !


படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது ....


இன்னொரு செய்தியும் சொல்றேன், காவலன் படத்தை பொங்கல் அன்று ஒளி பரப்ப இருந்தது டிவி தரப்பு , இதையும் மாற்றி வேறு நாளைக்கு படத்தை ஒளி பரப்ப இருக்கிறது.....   

வியாழன், 6 அக்டோபர், 2011

வெடி வெடிக்கவில்லை, சன்னுக்கு தொடர்ந்து நெருக்கடி தரும் அரசு கேபிள்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

ஆட்சி மாற்றத்திற்கு  பிறகு அடக்கி வாசித்த சன் பிக்சர்ஸ், மீண்டும் "தல"-யின் மங்காத்தா வை  வெளியிட்டு தனது  இரண்டாம் இன்னிங்க்சை ஆரம்பித்து
 கல்லாவையும் கட்டியது...

பின்னர் விஷால் நடிப்பில் "வெடி" யை வெளியிட்டது... வெடி வந்த வேகத்தில் வெடிக்காமல் புஸ்  ஆனது, படம் தியேட்டரை விட்டு ஓட ஆரம்பித்துவிட்டது...



இதனால் சன் தரப்பு கொஞ்சம் சொகமாகியுள்ளது,

இது போததைக்கு  அரசும், அரசு கேபிளை செயல்படுத்துவதை தீவிரமாக இறங்கியுள்ளது, கட்டணச் சேனலான சன் மிகவும் நெருக்கடிக்கு  தள்ளப்பட்டுள்ளது  

மக்களின் ஆதரவு சன் குழும சேனல்களுக்கு இருந்தாலும், அரசு கேபிள்களில் சன் சேனல்கள் வருவது  இல்லை...

ஏன் சன் சேனல்கள் அரசு கேபிள்களில் தெரிவதில்லை?

சன் குழும அங்கமான "சன் டைரக்ட்" நம்பி இருப்பதே சன் குழுமச் சேனல்களை,

இந்த சேனல்களை அரசு கேபிளுக்கு கொடுத்துவிட்டால், சன் டைரக்ட் -ஐ இழுத்து மூட தான் செய்யனும்...

இதனால் தான் சன் குழுமச்சேனல்கள் அரசு கேபிள்களில் தெரிவது இல்லை...

சன் குழுமச் சேனல்களின் இணைப்பு குறைவதாக இருப்பதால்  சந்தை மதிப்பு மற்றும்  விளம்பர கட்டணமும் குறையே தொடங்கியுள்ளது.


IP