திங்கள், 12 செப்டம்பர், 2011

மீண்டும் படங்களை அள்ளிகுவிக்கும் சன் பிக்சரஸ்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அடங்கி போன  சன் பிக்சரஸ், மீண்டும் தலை தூக்கி "தல" படத்தை ரிலிஸ் செய்து தனது இரண்டாம் இன்னிங்க்சை ஆரம்பித்துள்ளது....

மங்காத்தா  படத்திற்கு போட்ட பணத்தை 8 நாளில் அள்ளியது சன்,  இது  புத்துணர்ச்சியை தர... அடுத்தடுத்து பெரிய படங்களை வாங்கி குவித்து வருகிறது....

சூர்யாவின் " ஏழாம் அறிவு ",
 விஜயின் "நண்பன்",

 விஷாலின் "வெடி".... 


அடுத்து சில  முன்னணி நடிகர்களின் படத்தை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது சன் தரப்பு.....


ஆனால் விஜயின் "நண்பன்" படத்தை சன் டிவி க்கு கொடுத்ததில் விஜய்க்கு துளி கூட விருப்பம் இல்லையாம்,

என்ன செய்ய!


வெள்ளி, 2 செப்டம்பர், 2011

மந்திரகாரன் - மங்காத்தா!... முதல் நாளில் 16 கோடி தமிழ்நாட்டில்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

  இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் அஜித்தின் மங்காத்தா! பல தடைகளை தாண்டி ஒரு வழியாக வெளியானது.... வெளியிட்ட அனைத்து இடங்களிலும் முதல் இரண்டு நாளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி கொண்டு இருக்கிறது....

  பல விமர்சனங்களையும் , மங்காத்தா தகர்த்து எரிந்துள்ளது என்று தான் சொல்லவே வேண்டும்.....



 அஜித் ரசிகர்களுக்கு படம் தாறு மாறு!
 விஜய் ரசிகர்களுக்கு எதோ இருக்கு பார்க்கலாம்!
மக்களுக்கு சுமார்!..

 விநியோகஸ்தர்களுக்கு கொண்டாட்டம்....

 ஏனா? முதல் நாளில் தமிழக வசூல் எவ்ளோ தெரியுமா 16c!....

 சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவுல மட்டும் 6c!... 

  ஏற குறையே, எந்திரனுக்கு நிகரான வசூல் தமிழ்நாட்டுல!...

   பில்லாவுக்கு பிறகு "தல" தந்த 'பொழுதுபோக்கு வியாபார' படம் தான் மங்காத்தா!....

  முதல் வார வசூல் 50c நெருங்கும்னு சொல்றாங்க பா!

  உண்மைல "தல" !கிங் ஆப் ஓபனிங்! தான்...

IP