வியாழன், 28 ஜூலை, 2011

சரவெடி சவுக்கின் சரிவும் சாதனையும்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

 சவுக்கு-னு பேர கேட்டாலே சும்மா அதிருதுல, அந்த அளவுக்கு ஆடி போனவுங்க நம்ம முன்னால் உளவுத்துறை டிஜிபி மற்றும் திமுக குடும்ப உறுபினர்கள்!..

ஏங்க,

 சவுக்கு, என்று சாதாரண " blog"  எழுத ஆரம்பித்தார்  சங்கர்!.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டவும், அரசின் அலச்சிய போக்கை சுட்டிக்காட்டி கொண்டு இருந்தார்...

இது அன்றேயே, திமுக ஆட்சிக்கு பெரிய பின்னடைவே தந்தது, இதனால் அன்றேயே, டிஜிபி ஜாபர் சேட் தூண்டுதல் பெயரில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்... 

அவர் " blogspot" ல  எழுதி வந்ததால் அவருடைய கணக்கு முடக்கப்பட்டது... இருப்பினும்  அவருக்கான வாசகர்கள் அதிகம் இருந்தனர்!...     

இந்த சவுக்கு யார் தெரியுமா?

                          ஜெயலிதாவின் தோழி சசிகலாவின், உறவினர் தான் இந்த சவுக்கு!.. அதனால் தான் அரசியல் வட்டார செய்திகள் சவுக்கு -க்கு  கிடைக்குமா!....

பின்னர், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வந்த சவுக்கு மீண்டும் தனது பணியை தொடங்கினார்...அவருடைய, செய்திகள் ஓவ்வொன்றும் நச்சுனு இருந்ததால், மேலும் அதிக வாசகர்களை தன் வசபடுத்தினார்  சவுக்கு சங்கர் !...

பெரிய பத்திரிக்கையாளர்களும், சவுக்கை புகழ்ந்ததால் சவுக்கு வெளித்தெரிய ஆரம்பித்தது, 

" wikileaks " உலகத்தையே கலக்கியே நேரத்தில், இந்த சவுக்கு தமிழ்நாட்டை கலக்கியது!.. சொல்ல போனால்  சவுக்கை தமிழ்நாட்டின் " wikileaks" என்றே கூறலாம்...
தினமும் குறைந்தது 25000 வாசகர்கள், சவுக்கை வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்..

அனால், சவுக்கு திமுகவின் ஆட்சியின் குறைபாடுகளை  மட்டுமே சுட்டிக்காட்டியது, ஆட்சி மாற்றத்திற்கு  பிறகு இப்ப உள்ளவுங்கள பத்தி  அந்த அளவுக்கு வாயே திறக்கிறது இல்ல !...

புதன், 27 ஜூலை, 2011

திமுகாவை கலங்கடித்த கண்ணிகள்!...

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,


கடந்த வாரம் நடந்த பொதுக்குழு, உப்பு சப்புன்னு முடிஞ்ச்சு பா!...
மீடியாகளின் எதிர்பார்ப்பு புஷ்சானது...


ஸ்டாலின், அழகிரியின் தலைவர் யுத்தம், தள்ளி போட்ட கருணாநிதி, செயல் தலைவர் பதவி கேட்ட ஸ்டாலினுக்கு, அழகிரி முட்டு கட்டையாக இருந்தார்!...


நடந்தது பொதுக்குழு-வாக இல்லை, தனது மகளுக்கு ஜாமீன் வேண்டி நடைபெற்ற கூடமாகவே இருந்தது...


இதனால் கழக உ.பிகள் வெறுமெனே திரும்பி போனதுதான் மிச்சம்...


இது போக மறுமுனையில், திமுகவினரை குறி வைத்து தாக்கும் முயற்சியில்
நில அபகரிப்பு  வழக்கை துரிதபடுதினார், முதல்வர் ஜெ!...


இந்த வழக்கில் ஒட்டு மொத்த திமுகவையும் அழிக்க திட்டமிட்டுள்ளார் போல!...
குறிப்பாக, மதுரை , சேலம் , திருச்சி போன்ற பகுதிகளில் வழக்குகள் தீவிரபடுத்தபட்டுள்ளன...


மதுரை அண்ணனின், அல்ல கைகள் ஏற குறைய  கலி சாபிடுகிறார்கள், இதனால் அண்ணனின் மதுரை மவுசு மக்கி கிடக்கிறது..


அடுத்து சேலம், வீரபாண்டியார்!... அமைச்சராக இருக்கும் போதே பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நம்ம ஆளு சொல்லவா வேணும்...


அரசு கேபிள் டிவி  மூலம்,  சன் டிவி அடக்கும் முயற்சிகள் ஜருராக நடந்து கொண்டு இருக்கிறது !...
போதாதைக்கு சன் பிச்சர்ஸ் வழக்கும் அரசுக்கு ஊக்கம் தான்!...


ஒரு கண்ணியால் திமுக ஆட்சி போனது !


இன்னொரு கண்ணியால் திமுகாவே இல்லாமல் போய்விடும்போல!


மொத்தத்தில் திமுகவை ஆட்டி படைப்பது கண்ணிகள் தாணு சொல்லுங்க...


இதனால் திமுக வலுவிழந்து நிற்கிறது!

திங்கள், 18 ஜூலை, 2011

ஜெ வாங்கிய முதல் அடி!.. வலிக்களையே...

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

இன்று மாலை, உயர்நீதி மன்ற தீர்ப்பு தமிழக அரசை "டர் ஆகி" இருக்கிறது...


நீதி பதிகள்: இக்பால், சிவம் அடங்கிய பெஞ்சு பர பரப்பு தீர்ப்பு...


தீர்ப்பின் விவரம்:நடப்பு ஆண்டிலும் தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டமே தொடர வேண்டும்.
> 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடைமுறைப்படுத்த வேண்டும்.

>சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாக அரசு கருதினால் குழு அமைத்து 3 மாதங்களுக்குள் அதைக் களைய நடவடிக்கை எடுக்கலாம்.

>சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒத்திவைக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படுகிறது.

>தமிழகத்தில் பழையப் பாடத் திட்டத்தை செய்படுத்த தடை விதிக்கப்படுகிறது.


இதனால் ஜெ-விற்க்கு முதல் அடி.. (இடி)

இப்புடி தீர்ப்பு கொடுத்தாலும்,

                            அதை தாங்கமுடியாத ஜெ, வழக்கை இழு தடிக்க ஜெ உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளார்...

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என்று தெரிவித்தார்.

எது எப்புடியோ!

இந்த வருசம் " ஸ்கூல்" நடந்தா  சேரி!...

வெள்ளி, 15 ஜூலை, 2011

ஓடிய கலாநிதி ஒளி மங்கிய சன்!

என்னங்க சொல்றிங்க 
ஆமாங்க,

பழிவாங்கும் படலம் தொடங்கிடுத்து....

நித்து வின் சித்து விளையாட்டுகளை, அம்பல படுதியதால்... மதிப்பு இழந்த 
நித்து, போட்ட வழக்கில் கலாநிதி கோட்டில் ஆஜராக சம்மன் அனுப்பியது நீதி மன்றம்.....


இதற்க்கு பயந்த "கலா" , எங்கே கலி சாப்பிடும் நிலை வந்துவிடுமோ என்று விமானத்தில் சுச்சுலாந்துக்கு பறந்து விட்டார்... இந்த நிகழ்வு ஜெ-க்கு மகிழ்ச்சியே தருதோ இல்லே யோ கண்டிப்பா தினமலருக்கும் , குமுதத்துக்கும் அளவில்லா மகிழ்ச்சியே....

சன் நிறுவன தலைவரும், மேலாளரும் இல்லாததால் சன் குழுமம் போகும் பாதை தெரியாமல் பரிதவிக்கிரது...

இதனால், குலை நடுங்கிய சன் தரப்பு தனக்கு சொந்தமான பத்திரிக்கையில் , முதல் மற்றும் கடைசி பக்கதில் முழு நீள அளவில் ஜெ- சொத்து குவிப்பு பற்றி  விமர்சித்தும்....

இடை இடையே, சன் டிவியை அழிக்க பாக்குராங்கனு முருக்கு விக்கிரவன் முதல் வாட்சுமென் வரை பேட்டி எடுத்ததாக சொல்லி தன்ன தானே ஆறுதல் படுத்திக்கிச்சு சன் தரப்பு....


என்ன செய்ய, 

ஊ ரு வைத்தெரிச்சல்
சும்மா விடுமா... செவ்வாய், 5 ஜூலை, 2011

சக்ஸ்சேனா கைது -சரியும் சன் பிச்சர்ஸ்...

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

 ஆமா ரெண்டு நாலா ஆச்சு, வழக்கு போட்டவனுக்கு கூட அவ்ளோ சந்தோசம் இருக்குமோ இல்லையோ, ஆனா தினமலர் மற்றும் சில தயாரிப்பாளர்களுக்கு அளவில் அடங்காத சந்தோசம் போங்க....


அந்த அளவுக்கு வெடி வெடித்து கொண்டாடினர்....
ரூ.1.25 கோடி மோசடி மற்றும் கொலை முயற்சி புகாரின் பேரில், சன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா திடீரென நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.

சேலத்தைச் சேர்ந்தவர் டி.எஸ்.செல்வராஜ். சினிமா பட வினியோகஸ்தரான இவர் கந்தன் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இவர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், "நான் சினிமா வினியோகஸ்தர் தொழில் செய்கிறேன். "சன்பிக்சர்ஸ்'' பட நிறுவனத்தினர் தயாரித்து வெளியிட்டுள்ள "தீராத விளையாட்டுப்பிள்ளை'' படத்தின் சேலம் பகுதி வினியோக உரிமையை வாங்கும்படி, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா என்னை வற்புறுத்தினார். அதன்பேரில், ரூ.1.25 கோடி கடன் வாங்கி கொடுத்து அந்த படத்தின் வினியோக உரிமையை வாங்கினேன்.

ஆனால் அந்த படத்தை சக்சேனாவே சேலம் பகுதியில் வெளியிட்டுவிட்டார். நான் கொடுத்த ரூ.1.25 கோடி பணத்தையும் திருப்பி தரவில்லை. அந்த படத்திற்கு வசூலான 83 லட்சத்து 53 ஆயிரத்து 374 ரூபாயை தரும்படி கேட்டேன். ஆனால் சக்சேனா தராமல் இழுத்தடித்தார்.

கடந்த ஜனவரி மாதம் அதுபற்றி கேட்டபோது என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து பணத்தை வசூலித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

இந்த புகார் மனு மீது சென்னை கே.கே.நகர் போலீசார் கடந்த 1-ந் தேதி அன்று கொலை மிரட்டல் மற்றும் மோசடி உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்தார்கள்.

சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா மீது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சக்சேனா நேற்று இரவு 7 மணி அளவில் ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் வைத்து அவரை கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை அசோக் நகர் உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார் என்று போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

மோசடி மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சக்சேனா மீது ஏற்கெனவே சில புகார்கள் உள்ளதாகவும், அவையும் இந்த வழக்குடன் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறதுஇம்புட்டு விஷயம் ப்பு.....


சக்ஸ்சேனா- வின் கைதால் சன் பிச்சர்ஸ் மதிப்பு சரிவை நோக்கியுள்ளது ...
விரைவில் உங்களை சந்திக்கிறேன்...

 டவுசர்பாண்டி  001....
( நானும் டிடெக்டிவ் ஆபிசர் )...

ஞாயிறு, 3 ஜூலை, 2011

கொச்சி சிறுமியை போல், தமிழக சிறுமியையும் விபச்சாரத்தில் தள்ளிய பெண்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

இப்ப தான் கொச்சி சிறுமி வழக்கு விஸ்பரூபம் எடுத்து வருகிறது, அது அடங்கு ரதுக்கு உள்ள  தமிழக சிறுமியையும் பாலியல் வன்கொடுமைக்கு ஈடுபடுத்தியதாக வழக்கு பதிவு செய்ய பட்டுள்ள விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!...


இந்த கொடுமை எங்க தெரியுமா நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ரெட்டியார் புரத்தை சேர்ந்த அந்த பெண்ணை பாலியல் வன் கொடுமைக்கு தள்ளியதாக பெண் கைது செய்யப்பட்டுள்ளார் ....பெயர் மாற்றப்பட்டுள்ளது:

தகவல்கள் அனைத்தும் ஒன் இந்தியா தளத்தில் பெறப்பட்டது...

பாளையங்கோட்டை, ரெட்டியார்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி ஜீவா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாயை இழந்தவர். தந்தை நோயாளி. அண்ணன் சிறையில் உள்ளார். தம்பி 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஒன்பதாம் வகுப்பு வரை படித்த ஜீவா வீட்டின் அருகில் உள்ள ஜெபகூடத்துக்கு சென்றார். அப்போது அங்கு பிரசாரத்துக்கு வந்த மேரி என்பவர் அவரது வீட்டு கஷ்டங்களை கேட்டறிந்தார். தான் உதவி செய்வதாக கூறி செல்போன் எண்ணை கொடுத்துச் சென்றார். சில நாட்களுக்கு பிறகு அவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்றார்.

அப்போதுதான் அழைத்து சென்ற பெண்ணின் பெயர் மேரி அல்ல, துரைச்சி என்பதும், அவர் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் என்பதும் சிறுமிக்கு தெரிய வந்தது.

ஒரு வாரம் விருந்தும், ஜெபமுமாக கழித்த துரைச்சி, சிறுமியை தூத்துக்குடியில் உள்ள ஒரு மருந்து குடோனுக்கு அழைத்து சென்றார். அங்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து 4 பேருக்கு இரையாக்கினார். பின்னர் பாளைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தினார். சிறுமியுடன் சுத்தமல்லியை சேர்ந்த காயத்ரி என்பவரையும் அனுப்பி பணம் சம்பாதித்தார்.

வாடகை வீட்டில் இவ்வாறு சட்டவிரோதமாக செயல்படுவது வீட்டு உரிமையாளருக்கு தெரிந்து விட்டதால் உடனே வீட்டை மாற்றினார். கடந்த 30 நாட்களுக்குள் 3 வீடுகளுக்கு மாறி விபசார தொழில் நடத்தினார்.

இரண்டாவது வீ்ட்டில் இருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு விஷயம் தெரிந்து விட அவருக்கும் சிறுமியை இரையாக்கியுள்ளார். இவ்வாறு 50க்கும் மேற்பட்டவர்கள் தன்னை கெடுத்ததாக சிறுமி கூறினார்.

வாடிக்கையாளர்களிடம் தலா ரூ.3000 பெற்று அதில் 1000 ரூபாயை கமிஷனாக எடுத்து கொண்டதாக தெரிவித்தார். அதிகமாக தொல்லை ஆரம்பித்ததால் அங்கிருந்து சிறுமி தப்பி வந்துள்ளார்.

இதுகுறித்து அவரது உறவினர் கணேசன் கூறுகையில், சிறுமி காணாமல் போனதை மானத்துக்கு அஞ்சி வெளியில் சொல்லவில்லை. ஆனால் அவள் பலராலும் சீர்குலைக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் துணை கமிஷனர் அலுவலகத்து முறையிட சென்றேன். ஆனால் போலீசார் உள்ளே விடவில்லை. இவளை அழைத்து சென்றவர் இதேபோல் பல சிறுமிகளின் வாழ்வை குலைத்துள்ளார். போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கேரளாவைப் போல நெல்லையில் நடந்துள்ள இந்த பாலியல் குற்றம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.....பாத்திங்களா!...

அப்பாவி சிறுமி ஐம்பது பேருக்கு இரை யா?

குடும்ப வறுமை, அடிமைத்தனம் இவைதான் காரணம்...


அரசு இலவச பொருட்களை தருவதை விட, 
கல்லூரி வரை கல்வியை இலவசமாகினால் , இது போன்ற கொடுமைகள் குறையும்...


24 மணி நேர மதுக்கடையை திறப்பதை விட,


ஊருக்கு ஊரு அரசு கல்லூரிகளை நிறுவி, கல்வி கொடுத்தாலே இது போன்ற தவறுகள் குறையும்....

திறக்க திறக்க தங்கம் திக்குமுக்கு ஆடும் ஆய்வாளர்கள்...

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

கடந்த சில  நாட்களாக  தங்க விலை ஏற்றம் இறக்கமாக இருக்கு , அதே வச்சு இதன் மதிப்ப பாத்தா ஏறக்குறைய 1.5 லட்சம்  கோடியே தாண்டும் மாமுல...

டேய் என்ன சொல்ற,
உங்களுக்கு விஷயம் தெரியுமா, சொன்னாத்தான் தான  தெரியும்....

கேரளாவுள்ள பத்மநாத சுவாமி கோவில்ல மூடி வச்சுருந்த அறைகளை திறந்து பாத்தப்ப குவியல் குவியலாக தங்க வைர நகைக்கலாம் பா!....

ஒரு கிலோவுல தங்க மாலையாம், தங்க கட்டியாம் , வைர நகைகலாம் போங்க அவ்ளோ இருந்துச்சாம்......
அதோட சந்தை மதிப்பு தான் 1.5 லட்சம் கோடிகளாம்...

அப்புடியாட, ஆமாம்பா ...

இது நாலா கோவில சுத்தி பலத்த பாதுகாப்பு போட்டுயிருக்கான்கலாம்...

இது தான் இப்ப  இந்தியாவின் பணக்கார கோவிலாம்,அப்புடினா திருப்பதி கோவிலோட பெரிய ஆளுன்னு சொல்ற,
ஆமாம்பா...
இன்னொரு விஷயம் சொல்றேன்,

நம்ம தலை முடி சாமியார் இருந்தார்ல, ஆமா இப்பகூட செத்து போயடார்ல ம்ம்ம்....
அவரோட அறைய தொறந்து பார்த்தப்ப தங்க கட்டியும், கத்தை கத்தை இந்தியா வெளிநாட்டு நோட்டுகள் இருந்துச்சாம் பா!..

அந்த சாமியாரோட சொத்து மதிப்பு ஏறக் குறைய 50000 கோடிய தாண்டுமா பா!...
வாய பொலந்த படி சென்றார் அந்த ஆளு!

சனி, 2 ஜூலை, 2011

ஈழ பெண்ணா உடனே தூக்கு!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

பெரும் சண்டைக்கு பிறகு ஈழ மக்கள் சொந்த நாட்டிலேயும், பிற நாடுகளிலும் அகதிகளாக்கப்பட்டனர், அது மட்டுமில்லை உடல் மற்றும் மன அளவிலும் பாதிப்புக்குள்ளாகினர்...


இருக்க வீடு இன்றி, பசிக்க சோறின்றி, உடுத்த உடையின்றி அல்லல் பட்டனர்,


தற்பொழுது அதைவிட மிகபெரும் கொடுமை....


தலைதூக்கியுள்ளது பாலியல் வன்கொடுமை, வறுமை வாட்டி எடுக்கும் ஈழத்தில், வறுமையில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்...

குறிப்பாக  ஈழ பருவ பெண்களை குடும்ப வறுமை காட்டி கட்டாய விபச்சாரதிற்கு துண்ட படுகின்றனர்...சில பெண்களை தாய்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது ....

அமரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஈழ பெண்கள் நாடு கடத்த படுகின்றனர்...

இதில் தமிழ் நயவஞ்சகர்களும், சிங்கள வெறியர்களும் கூட்டாக சேர்ந்து இச்செயலை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது...