வியாழன், 28 ஜூலை, 2011

சரவெடி சவுக்கின் சரிவும் சாதனையும்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

 சவுக்கு-னு பேர கேட்டாலே சும்மா அதிருதுல, அந்த அளவுக்கு ஆடி போனவுங்க நம்ம முன்னால் உளவுத்துறை டிஜிபி மற்றும் திமுக குடும்ப உறுபினர்கள்!..

ஏங்க,

 சவுக்கு, என்று சாதாரண " blog"  எழுத ஆரம்பித்தார்  சங்கர்!.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டவும், அரசின் அலச்சிய போக்கை சுட்டிக்காட்டி கொண்டு இருந்தார்...

இது அன்றேயே, திமுக ஆட்சிக்கு பெரிய பின்னடைவே தந்தது, இதனால் அன்றேயே, டிஜிபி ஜாபர் சேட் தூண்டுதல் பெயரில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்... 

அவர் " blogspot" ல  எழுதி வந்ததால் அவருடைய கணக்கு முடக்கப்பட்டது... இருப்பினும்  அவருக்கான வாசகர்கள் அதிகம் இருந்தனர்!...     

இந்த சவுக்கு யார் தெரியுமா?

                          ஜெயலிதாவின் தோழி சசிகலாவின், உறவினர் தான் இந்த சவுக்கு!.. அதனால் தான் அரசியல் வட்டார செய்திகள் சவுக்கு -க்கு  கிடைக்குமா!....

பின்னர், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு வந்த சவுக்கு மீண்டும் தனது பணியை தொடங்கினார்...



அவருடைய, செய்திகள் ஓவ்வொன்றும் நச்சுனு இருந்ததால், மேலும் அதிக வாசகர்களை தன் வசபடுத்தினார்  சவுக்கு சங்கர் !...

பெரிய பத்திரிக்கையாளர்களும், சவுக்கை புகழ்ந்ததால் சவுக்கு வெளித்தெரிய ஆரம்பித்தது, 

" wikileaks " உலகத்தையே கலக்கியே நேரத்தில், இந்த சவுக்கு தமிழ்நாட்டை கலக்கியது!.. சொல்ல போனால்  சவுக்கை தமிழ்நாட்டின் " wikileaks" என்றே கூறலாம்...
தினமும் குறைந்தது 25000 வாசகர்கள், சவுக்கை வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்..

அனால், சவுக்கு திமுகவின் ஆட்சியின் குறைபாடுகளை  மட்டுமே சுட்டிக்காட்டியது, ஆட்சி மாற்றத்திற்கு  பிறகு இப்ப உள்ளவுங்கள பத்தி  அந்த அளவுக்கு வாயே திறக்கிறது இல்ல !...

1 கருத்து:

IP