சனி, 12 மார்ச், 2011

சீண்டும் (சினம் கொள்ளும்) சீனா!! சிக்குமா இந்தியா!!!

சீன ஆயுதங்கள், இந்தியாவை நோக்கி வைக்கப்பட்டுள்ளன....                                  என்னங்க சொல்றிங்க, ஆமாங்க ... 


வருவோம் நம் கதைக்கு:

                                      இந்தியாவும், சீனாவும் உலக வியாபாரச்சந்தை,  என்று அனைவரும் அறிந்ததே, இவர்களுக்கு ஒரு வித்தியாசம் என்னவென்றால்,          சீனாவில் சீன பொருட்கள் தான் அதிக அளவில் விற்கனும்,  இந்தியாவில் இந்திய பொருட்களைவிட, அயல்நாட்டு பொருட்களை தான் விற்க முடியும்...

அயல்நாட்டு கம்பெனிகள், இந்தியா மற்றும் சீனாவில் தான் தொழிற்சாலைகள் அமைக்க விரும்புகின்றன.
ஆனால் சீனாவில், ஏக பட்ட கண்டிசன்!
இந்தியாவில் ஏகப்பட்ட சலுகைகள்! 
ஆதலால், அயல்நாட்டு  கம்பெனிகள் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க இனக்கம் காட்டுகின்றன...

இது மட்டுமா, இந்தியர்கள் அந்நிய மோகம் உடையவர்கள், இது அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் உள்ளது...

இந்தியா, தகவல் தொழில்நுட்பத்தில் சீனாவுடன் போட்டி போடுகிறது...
இதனால் சீனாவுக்கு, இந்தியா பெரும் போட்டியாக உள்ளது..
தொழில்போட்டி காரணமாக வரும் பின்னடைவை சமாளிக்க, சீனா இந்தியாவை எதிரியாகவே பார்த்துவருகிறது...

போட்டியை சமாளிக்க சீனா, இந்தியாவுக்கு அச்சுருத்தலை ஏற்படுத்தி வருகிறது.. 
சீனா, பாக்கிஸ்தானுக்கு ஆறு போர்க்கப்பலை விற்பதற்கு முடிவு செய்துள்ளது.

நம்முடைய அண்டை நாடுகளான இலங்கையையும் பாக்கிஸ்தானையும், தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது சீனா!..
இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுக்கு உதவுவது போல், சீன ராணுவம் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றன 

போர் செய்வதென்றால் (முன்பு) கிழக்கு பக்கம் மட்டுமே தாக்க முடியும். 
தற்பொழுது நடைபெற்றால் நான்முனை தாக்குதலையும் சீனா மேற்கொள்ளும்... இந்தியா சமாளிக்க முடியமால் சின்னா பின்னமாகத்தன் ஆக வேண்டும்.....

கீழ்க்கண்ட வழிகளில் (பகுதியில்) சீனா, இந்தியாவை தாக்க முடியும்!

வடக்கில் - பஞ்சாப் மற்றும் காஷ்மீர் எல்லை பகுதிகள்,
கிழக்கில் - அருணாச்சல பிரதேசம் மற்றும் தீபதிந்திய எல்லை பகுதிகள்,
மேற்கில் -  குஜராத்தை ஒட்டிய கடல் பகுதி,
தெற்கில் - தமிழக கடற்ப்பகுதிதான்!!!

1 கருத்து:

IP