ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

விஜயின் அரசியல் அதிரடி ஆரம்பம்... உள்ளாட்சி தேர்தலில் போட்டி !

கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது. அவரது தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
 


இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளது. இது தொடர்பாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியதாவது:
 

மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்தனர். சில அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். இதை விஜய் ஏற்றுக் கொண்டார். அ.தி.மு.க.வுடன் எங்களது சுமூகமான உறவு உள்ளது. எனவே உள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமாறு ரசிகர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அடிதட்டு மக்களும் சேவை செய்வதற்காக மக்கள் இய்ககம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. டெல்லியில் நடந்த அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்...

விஜயின் அரசியல் அதிரடி ஆரம்பம்!... 


வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

இந்தியாவுக்கு பேச யோக்கியம் இல்ல!..

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

  ஈழ பிரச்சனையா, பிற நாட்டில் குண்டுவெடிப்பா உடனே அறிக்கையை வெளியிடுவதில் இந்தியாவுக்கு பஞ்சம் இல்லை...

இவனே பின்னாடி கழுவலாயாம் , அடுத்தவன கழுவ சொல்றான்!...பாரு பா!

இந்தியா ஜனநாயக நாடு! தூ.. இனிமே அப்புடி சொல்லவே கூடாது...
ஜனநாயக பெயரையே கொச்சை படுத்தி வருகிறார்கள்...

 ஈழ-தில் என்ன நடக்கிறதோ அதே தான் காஷ்மீரத்திலும்   நடக்கிறது...
இவன்லாம் பேசுறான், அங்க வெளில தெரியுது, இங்க மூடி மறைக்க படுத்து அவ்ளோதான்,



 ராணுவ அடக்குமுறை, இந்திய வடகிழக்கு மாநிலங்களில் பெண்கள் கூண்டோடு கற்பழிப்பு....



மும்பை, குஜராத்-ல்  இசுலாமிய சிறுபான்மை தாக்குதல்...



   ஒரிசா, கர்நாடக -ல் கிருத்துவ சிறுபான்மை தாக்குதல்...



பீகாரில், சில மாநிலங்களில் தலித் மீது தாக்குதல்!...
இன்னும் தமிழ்நாட்டில் கூட ஜாதி பிரச்னை முடிவுக்கு வரவில்லை என்பதற்கு இரட்டை குவளை முறை உள்ளது என்பதே உதாரணம்!


 
 இந்திய நாட்டின் முன்னால் பிரதமர் ஒருவர், ஒரு மத மாநாட்டில் இந்தியாவில் பெருபான்மை-இன மக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என கூறினார்....

  இதனை உலக தொலைகாட்சிகள், வெளிச்ச மிட்டு காட்டியும் ஒரு   புரோச்சனம் இல்லை!...

   இதனால்  இந்தியாவுக்கு, ஜனநாயகம் பத்தி பேச யோக்கியம் இல்ல!



புதன், 24 ஆகஸ்ட், 2011

மங்கத்தா -வை வெளியிட போவது சன் பிக்ச்சர்ஸ்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,...

வழக்குகள், கைதுகள், தயாரிப்பாளர்களின் புகார்கள் என ஒரு பக்கம் சிக்கல்களைச் சந்தித்தாலும் மீண்டும் புதிய வேகத்தோடு திரைப்படத் துறையில் களமிறங்குகிறது சன் பிக்சர்ஸ்.

இந்த இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்த எடுப்பிலேயே மங்காத்தா என்ற பெரிய படத்தை வெளியிடுகிறது இந்த நிறுவனம்.


தயாநிதி அழகிரியின் தயாரிப்பான இந்தப் படம், சமீபத்தில் ஞானவேல் ராஜாவுக்கு விற்கப்பட்டது. உடனே அவர் படம் தொடர்பான விளம்பரங்களில் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி மற்றும் அவரது க்ளவுட் நைன் நிறுவன பெயரை முற்றாக நீக்கிவிட்டார். மேலும் ஜெயா டிவிக்கு படத்தின் ஒளிபரப்பு உரிமையைத் தர முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், படத்தை ஞானவேலிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார் தயாநிதி அழகிரி.

மங்காத்தாவின் தொலைக்காட்சி உரிமம் மட்டுமல்லாமல், நெகடிவ் உரிமையையும் சன் குழுமத்துக்கே அவர் கொடுத்துவிட்டார்.

வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி சன் பிக்சர்ஸ் பேனரில் மங்காத்தா வெளியாகிறது. எங்கேயும் காதலுக்குப் பிறகு, தான் வாங்கிய அவன் இவன் உள்ளிட்ட படங்களைக் கூட திரும்பக் கொடுத்து வந்த சன் பிக்சர்ஸ், இப்போது மீண்டும் அதிரடியாக மங்காத்தாவை வெளியிடுகிறது....

இத்தகவலை தயாநிதி அழகிரியும் உறுதிபடுத்தியுள்ளார்!

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

புதிய தமிழ் படங்களை உடனே P.C- யில் தரவிறக்க! டாப் 10 தளங்கள் :

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

  புதிய தமிழ்   படங்களை வெளிவந்தவுடன் உடனே, P.C-யில் தரவிறக்க டாப் 10 தளங்கள்:



முதல் இடத்தில், படம் வெளியான சில மணிநேரத்திலேயே pc -யில் தரவிறக்க முடியும்....

 இரண்டாம் இடத்தில், இத்தளத்தில் படத்தை பார்க்கவும் பதிவிறக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது...


 மூன்றாம் இடத்தில்....


  நான்காம் இடத்தில்... படத்தை பார்க்க மட்டும்


   ஐந்தாம் இடத்தில், சின்னத்திரை நிகழ்சிகளையும் தரவிறக்க முடியும்...


 ஆறாம் இடத்தில்...


 ஏழாம் இடத்தில்...



 எட்டாம் இடத்தில்...


 ஒன்பதாம் இடத்தில்...


 பத்தாம் இடத்தில்...

சனி, 20 ஆகஸ்ட், 2011

வேலாயுதம் பட பாடலை தரவிறக்க!...

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

 விஜய் நடித்த " வேலாயுதம்" படத்தின் பாடல் வருகிற 28-ம் தேதி மதுரையில் வெளியிடபடுகிறது...



    அதற்க்கு முன்பாக 26 -ம் தேதி மாலை அல்லது 27-ம் தேதி காலை கீழ் கண்ட இணையதளங்களில் வெளியாகவுள்ளது....





  இதே போன்று "மங்காத்தா" பட பாடல் ஒரு நாள் முன்னதாக வெளியில் வந்தது நியாபகம் இருக்குல!...

தல நிலைமை தான் தளபதிக்கு!...

 ஆனா தல ரசிகர்கள்  எல்லா சிடியும் வாங்கிடாங்க !

 தளபதி ரசிகர்கள்?

இஸ்ரேலுடன் போருக்கு தயார் ஹாமாஸ் அறிவிப்பு!

என்னங்க சொல்றிங்க,
 ஆமாங்க...






இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இதையடுத்து பாலஸ்தீனத்திலும் இஸ்ரேலிலும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

கடந்த வியாழக்கிழமை தெற்கு இஸ்ரேலில் நடந்த கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 8 பேர் பலியாயினர். காஸா பகுதியைச் சேர்ந்த பாபுலர் ரெசிஸ்டன்ஸ் கமிட்டி தான் கார் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து காஸா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் 12 முறை நடத்திய பயங்கர தாக்குதல்களில் 14 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்தது.

இந் நிலையில் இனியும் இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிப்பதில் அர்த்தமில்லை என்று ஹமாஸ் ராணுவப் பிரிவான இஸ் அல்-தின் அல் காசிம் பிரிகேட் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் விமானத் தாக்குதலையடுத்து அந் நாட்டின் மீது காஸா பகுதியிலிருந்து ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து ராக்கெட்களை வானிலேயே தடுத்து வெடிக்கச் செய்ய ராக்கெட் எதிர்ப்பு ஏவுகணைளை இஸ்ரேல் நிலை நிறுத்தியுள்ளது....



  போருக்கு தயாராக உள்ளதாக ஹாமாஸ் அறிவித்திருப்பதால் பதற்றம் நிலவுகிறது!


 போருக்கு வீரர்களை உற்சாகபடுத்தும் ஹாமாஸ் வீரர்:



வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

மங்காத்தா திரைவிமர்சனம்!...

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

 இன்னும் படமே வெளில வரல அதுக்குள்ள விமர்சனமா! இணையத்தில் வந்துவிட்டதோ என்ற அச்சம் எலலாம்...  இது படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை வைத்து படத்தின் விமர்சனம் சொல்லும் களம் இது....



"மங்காத்தா"- அஜித்தின் 50 வது படம், இதில் அர்ஜுன், திரிசா, வைபவ், லட்சுமிராய், அஞ்சலி,  பிரேம் நடித்துள்ளனர் ...

   படத்தில் ஒரு அஜித்-தான்... அதுவும் முழு நீல வில்லன்... அவர் பெயர் வினய்க்! அடிகடி சூதாட்ட கிளப்புக்கு செல்வது வழக்கம், அதிலிருந்து வைபவ் மற்றும் அவர்களின் நட்பு கிடைகிறது, அந்த கிளப்பில் கிரிக்கெட் சூதாட்ட பெட்டிங் நடைபெறுகிறது இதனை நடத்துவது மும்பை தாதா!ஒருவன் ...


    மொத்த பெட்டிங் பணத்தின் மதிப்பு சுமார் 500  கோடி! இதனை கடத்த முயல்கின்றனர் அஜித் தரப்பு, பணத்தை திருடி செல்லும்போது போலீசிடம் சிக்குகிறார் வைபவ்....

      இவரிடம் உண்மைகளை கறக்கிறார் போலீஸ் அர்ஜுன், அர்ஜுன் மற்றும் மும்பை தாதாவும் அஜித்தை தேடி பிடிக்க முயல்கிறது... படம் புயல் வேகம் பெறுகிறது ...

        திரிஷா அஜித்தை  காதலிக்கிறார், பின்னர் பிறிகிறார் , வலுகட்டாய திணிப்பு ... படத்தில் டம்மி வேடம் தான்... லட்சுமிராய் இரு சீன்களில் வந்து போகிறார், அஞ்சலி இரு நிமிடம் தான், அண்ட்ரியா சும்மா தான்!....

  மொத்தத்தில் படம் முழுக்க அஜித் ஆக்சன் தான்!...( ரசிகர்களுக்கு மட்டும் )


 பிரேம்ஜி வந்தால் ஓவர் மொக்க! எரிச்சல் ஒரே கஷ்டம் பா !...



இசை, பாடலிலும் பின்னணியிலும்  பலம்!... 
ஒளிப்பதிவு நல்ல முயற்சி!...  
படத்தொகுப்பு பாராட்டுக்குரியது!...
 இயக்குனர்  ஒரு அளவுக்கு  வேலை வாகியிருக்கார்...

  படத்தை தியேட்டர்ல பாக்கலாம் புயல் வேகம்!...

  படத்தின்( +)  அஜித், யுவன் 
  படத்தின்(-) பிரேம்ஜி மொக்க...

  ஆங்கில படமான "ஒசென்ஸ் 11 " தழுவல் இல்லை... 
அந்த படத்தின் தாக்கம் இருக்கிறது ....

அன்னா ஹாசரே- பூச்சாண்டி தனம்! (பின்னால் காவி தனம்)

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

   இரு நாட்களாக, இந்தியா முழுவதும் பேசப்பட்ட குரல் அன்னா ஹாசரே சொல்றாங்க....

 அப்புடிலாம் ஒன்னு இல்ல, இவரு தன்னுடைய சுய லாபத்துக்கும், சில காவி  அமைப்புகளின் துண்டுதலின் பேரில் தான் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்...

ஏன்?..

  ஊழல்!                                                    ஊழல்!                                               ஊழல்!

 அனைத்து கட்சியினரும் ஊழல் என்ற அன்பளிப்பை பெறுவதுண்டு! அதற்க்கு எந்த கட்சியும் விதிவிலக்கல்ல...

   அன்னா ஹாசரே போராட்டத்திற்கு  இந்தியா முழுவதும் ஆதரவு இல்லை ஏன்?...

   குறிப்பாக பிஜேபி ஆளும் மாநிலங்களில் மட்டும் தான் ஆதரவு உள்ளது, அங்கு என்ன நடக்கிறது என்றால் பள்ளி செல்லும் மாணவர்களை பள்ளிக்கு போகவிடாமல் போராட்டத்திற்கு செல்லும் படி  அரசு நிர்பந்திக்கிறது!....

அதை பார்பன தொலைகாட்சிகள் (ஊடகங்கள் ) வேறு விதமாக சித்தரித்து உள்ளன....


  மக்களவை தேர்தல் வந்தால், பிஜேபி தனிபெரும்பான்மை பெறாது, அதே போல் பிஜேபி தலைமையில் ஆட்சியை மக்கள் விரும்புவது குறைவு...

   இதனை கருத்தில் கொண்டு, பிஜேபி அன்னா ஹாசரே- பகடைக்காயை பயன்படுத்துகிறது....

 இதற்கிடையில் நேற்றேயே  தினம், ஹாசரே-வை , ரவிசங்கரும் பில்டப் ராம்தேவும் சந்தித்து உள்ளனர்...


யார் இவர்கள் ?

இருவரும் கருப்பு  பண மன்னர்கள்... 


  ரவிசங்கருக்கு 30 ஆயிரம் கோடி சொத்தும், ராம்தேவுக்கு 15ஆயிரம்கோடி சொத்திருக்கு பா!

 சொல்ல போனால், காவியாளர்கள் ஹாசரே போர்வையில் நடத்தும் அரசியல் நாடகமே!

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

அனிதா கைது!.. அடுத்து யார்?.. பக் பக் திருப்பங்கள் !

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,


 அடுத்து கைதாவார்கள் என்று திமுக உ. பி கள், கலங்கி இருகின்றனர்... இந்நிலையில்  நேற்றேயே  தினம் கைதானார் அனிதா...




முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை. இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள காவல் நிலையங்களுக்கு அவரது குடும்பத்தினர் அலைந்து வருகின்றனர்.

அதிமுகவில் தீவிரமாக செயல்பட்ட முக்கியஸ்தர் அனிதா. தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர். திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவாகவும் இருந்தார்.

இந்த நிலையில் திமுக பக்கம் அனிதா சாய்வதாக வந்த தகவலைத் தொடர்ந்து அனிதாவை கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. இதையடுத்து முறைப்படி திமுகவில் போய்ச் சேர்ந்தார். திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றார்.

இந்த நிலையில் தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் சீக்கிரமே போலீஸ் வளையத்தில் சிக்குவார் என அதிமுக தரப்பில் கூறி வந்தனர்.

இந்தப் பின்னணியில் இன்று திடீரென அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடியில் உள்ள காந்தி காலனியில் உள்ள வீட்டுக்கு வந்த போலீஸார் அவரைக் கைது செய்து கொண்டு சென்றனர்.

எந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார், என்ன புகார் வந்தது என்பது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அனிதாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.

அனிதாவை எந்தக் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர் என்பதை அறிவதற்காக ஒவ்வொரு காவல் நிலையமாக உறவினர்களும், திமுகவினரும் தேடி வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்றார் என்பது நினைவிருக்கலாம்.


 அடுத்த  கைது சேகர் பாபுவா? இல்ல முத்து சாமியா?... 

புதன், 3 ஆகஸ்ட், 2011

ஐடியாவின்! ஐடியா பேக்!... விரைவில் முதல் இடம்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

இப்ப-லாம், மொபைல் புரட்சி இந்தியாவை ஆட்டி படைத்து வருகிறது, சொல்ல போனா இன்னும் பத்து ஆண்டுகளில்  இந்தியாவின்  மக்கள் தொகையை -விட மொபைல் போன் இணைப்பு வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்துவிடும்  அந்த அளவுக்கு இணைப்புகள் வந்த வண்ணம் உள்ளனர்....

இதில், பலே போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இந்திய அரசு நிறுவனமான bsnl இறங்கு முகத்தில் இருந்தாலும், தனியார் தொலைபேசி நிறுவனங்கள் சிங்க நடை போடுகின்றன!...

வாடிக்கை-யாளர்களை  இழுக்க நிறுவனங்கள் போட்டி போடுகின்றன, இந்தியாவில் நெட்வொர்க் மாறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின், நிறையே bsnl  வாடிக்கையாளர்களே  மாறியுள்ளனர்...

இப்போது அனைவரும் விரும்பும் நெட்வொர்க்-க்காக "ஐடியா" மாறியுள்ளது, இவர்களின் புதிய பிளான் கவரும் வண்ணம் உள்ளது...



ரூ 53 ரீச்சர்ஜ் செய்தால் தமிழக முழுவதும், அணைத்து நெட்வொர்க்-ம் 30  பைசா, இதனால் புதியதாக மொபைல் இணைப்பு பெற விரும்புவோர் ஐடியா-வயே தேர்தடுகின்றனர்...

வேறு நெட்வொர்க், இருப்பவர்களும் ஐடியா செல்வதாக ஆய்வு தகவல்கள் தெரிவிகின்றன...

இதனை ,மொபைல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைக்க, இலவச திட்டங்களை தரவேண்டிய நிலையுள்ளது...  

இதனால் மொபைல் நிறுவனங்களுக்கு ஐடியா தலைவலியாக உள்ளது!...


திங்கள், 1 ஆகஸ்ட், 2011

கைதாகிறார் அழகிரி, அரசு தீவிரம்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

 நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக, விரைவில மத்திய அமைச்சர் அழகிரி கைதாக வாய்புகள் பிரகாசம் அடைந்துள்ளன....

குறிப்பாக, அழகிரி வலது, இடது ஏற குறையே எல்லா சாககளும் ஜெயிலில் இருப்பதால்...

கொசுறுகள் மட்டும் பாக்கி!

அண்ணனும் அங்கே தான் போக போகிறார், கூடிய விரைவில்...



எஸ்ஸார் கோபி, பொட்டு சுரேஷ். அட்டாக் பாண்டி, தளபதி ஆகியோரிடம்   விசாரணை நடந்து வருகிறது இதில் முக்கிய தகவல் சிக்கி இருப்பதாகவும், அனைவரும் அழகிரி பெயரை சொல்கிறார்களாம்!...

அது போக,  பொட்டு சுரேஷ் அழகிரிக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் செயல்ப்படுவதால்...

அழகிரி தரப்பு அச்சம் அடைந்துள்ளது...

அழகிரி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிகின்றன...

இது சமந்தமாக முக்கிய ஆவணங்கள் பிரதமர்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ....

ஜெ- வின் பார்வை அழகிரி மேல்பட்டுவிட்டதுனு சொல்லுங்கோ!...
IP