வியாழன், 6 அக்டோபர், 2011

வெடி வெடிக்கவில்லை, சன்னுக்கு தொடர்ந்து நெருக்கடி தரும் அரசு கேபிள்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

ஆட்சி மாற்றத்திற்கு  பிறகு அடக்கி வாசித்த சன் பிக்சர்ஸ், மீண்டும் "தல"-யின் மங்காத்தா வை  வெளியிட்டு தனது  இரண்டாம் இன்னிங்க்சை ஆரம்பித்து
 கல்லாவையும் கட்டியது...

பின்னர் விஷால் நடிப்பில் "வெடி" யை வெளியிட்டது... வெடி வந்த வேகத்தில் வெடிக்காமல் புஸ்  ஆனது, படம் தியேட்டரை விட்டு ஓட ஆரம்பித்துவிட்டது...



இதனால் சன் தரப்பு கொஞ்சம் சொகமாகியுள்ளது,

இது போததைக்கு  அரசும், அரசு கேபிளை செயல்படுத்துவதை தீவிரமாக இறங்கியுள்ளது, கட்டணச் சேனலான சன் மிகவும் நெருக்கடிக்கு  தள்ளப்பட்டுள்ளது  

மக்களின் ஆதரவு சன் குழும சேனல்களுக்கு இருந்தாலும், அரசு கேபிள்களில் சன் சேனல்கள் வருவது  இல்லை...

ஏன் சன் சேனல்கள் அரசு கேபிள்களில் தெரிவதில்லை?

சன் குழும அங்கமான "சன் டைரக்ட்" நம்பி இருப்பதே சன் குழுமச் சேனல்களை,

இந்த சேனல்களை அரசு கேபிளுக்கு கொடுத்துவிட்டால், சன் டைரக்ட் -ஐ இழுத்து மூட தான் செய்யனும்...

இதனால் தான் சன் குழுமச்சேனல்கள் அரசு கேபிள்களில் தெரிவது இல்லை...

சன் குழுமச் சேனல்களின் இணைப்பு குறைவதாக இருப்பதால்  சந்தை மதிப்பு மற்றும்  விளம்பர கட்டணமும் குறையே தொடங்கியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP