திங்கள், 11 ஏப்ரல், 2011

பேஸ் புக்! நண்பனா! எதிரியா!.. ஒரு பார்வை

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க!...
உலகத்தில் முன்றாவது மக்கள் தொகை கொண்ட  நாடு பேஸ்புக் தான்! ஏற குறையே 65 கோடிகள் கொண்ட  ஒரே இணையதளம் பேஸ்புக் தான்! இன்று கூக்லேயே சீண்டி பார்க்கும் நிறுவனம் இது தான்!...

வருவோம் விசயத்துக்கு!...

மொபைல் போன் இல்லாதவன் கூட பேஸ்புக் அக்கௌன்ட் வச்சுருக்கான் பா, அந்த அளவுக்கு அதிவேக வளர்ச்சி! இந்தியாவின் பெரு நகரங்களில் தன்னுடைய காளை பதித்துவிட்டது பேஸ்புக்!...

நண்பன் தான்! சொல்றாங்க பலபேரு! உலகத்துல எந்த முலைலே இருந்தாலும் நம்மை இணைக்கிற வலிமை உள்ளது அதனிடம்..
உறவுகள் விட்டு போகாமல் இருக்க பேஸ்புக் உதவுகிறது, பள்ளி, கல்லூரி நண்பர்களை இணைக்கவும், வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும்  , தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கும் ஒரு இணைப்பு பலமாக இருக்கிறது!....
இணையத்தில் படைப்புகளை வெளிக்கொணரவும் உதவியாய் இருக்கிறது !..


என் வாழ்க்கை- ஐ பிரித்த எதிரி பேஸ்புக் என்று சில ஆண்களும், பெண்களும் கூறியுள்ளனர்! ஆமாங்க சிலர் தாம்பத்திய உறவுகளிலே ஆப்பு  வைத்திருக்கிறது... அமெரிக்காவில் சிலர் விவாகரத்து பெறுவதற்கு காரணம் பேஸ்புக் தானாம் ! பேஸ்புக்- ஐ ஒரு முறை உபயோகித்தால் மீண்டும் உபயோகிக்க வைக்கிறது  பேஸ்பூக்கின் வசீகரம்! அதனால் சில கணவன் மனைவி -களுக்கு பேஸ்புக் எதிரியாகவே உள்ளது !


அது மட்டும் இல்லிங்கோ! பேஸ்புக் சிறுவர்களையும் இளைஞர்களையும் அதிமாக கவர்ந்துள்ளது!  அதனால் படிப்பு ஆர்வம் குறைந்து வருவதாக பெற்றோர்கள் கூறிகின்றனர்!

பெண்கள் சிலர், பேஸ்புக்கில் உறுபினர்களாக உள்ளனர், அவர்கள் தன்களுடையே புகைப்படத்தை அதில் வெளியிடுகிறார்கள், சில வலை பயங்கரவாதிகள் அந்த புகைப்படங்களை, மார்பிங் செய்து ஆபாச புகைப்படமாக இணையத்தில் உலவ விடுகின்றனர்!... பொதுவாக பேஸ்புக்கில் புகைப்படங்களை பெண்கள் தவிர்ப்பது நல்லது!...

எது எப்படியோ!...
வளர்ச்சியை முறையாக பயன்படுத்தினால் நல்லது !
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தான்!...
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP