வியாழன், 2 ஜூன், 2011

உடையும் திமுக!... உருகும் உடன்பிறப்புகள்!..

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க...

முற்பகல் செய்யும் வினை, பிற்பகல் விளையும்னு சொல்வாங்க அதேபோல இப்ப நடந்திருக்கு.... திமுக கடந்த கால ஆட்சியில் செய்த உழல்கள், அடக்கு முறைகளுக்கு  பதில் சொல்ல வேண்டிய நிலையுள்ளது...

பொதுவாக ஆட்சி மாற்றம் நடைபெற்றால், பழிவாங்கும் படலம் தொடரும்... இந்த முறை அதற்க்கு வாய்ப்பு அதிகம் இருந்தாலும் ஜெ! மெதுவாகவே தான் காய் நகர்த்துகிறார்....


திமுகவில் குடும்ப ஆதிக்கமே என்பது அனைவரும் அறிந்ததே!.. அது இல்ல மேட்டர்... திமுகவில் நான்கு பெரிய கோஷ்டிகள் உள்ளன.
அவை :
1 . ஸ்டாலின் 
2 . கனிமொழி 
3 . தயாநிதி 
4 . அழகிரி 






மற்ற சில கோஷ்டிகள் இவர்களின் வழி தோன்றலே!...

ஸ்டாலின் - க்கு பொதுவாக அதரவு உள்ளது... அழகிரிக்கு மதுரை மற்றும் தேனியில் ஆதரவாளர்கள் உள்ளன.. கனிமொழிக்கு ராசாவின் உதவியால் 6 - 7  மாவட்ட செல்வாக்கு உள்ளது, தயாநிதிக்கு கொஞ்சம் அதரவு இருக்கு..

இந்த பட்டியலில், கணிமொழியும், தயாநிதியும் ஸ்பெக்ட்ரம் உழலில் தொடர்பு இருப்பதால் அவர்கள் சிறைக்கு செல்வது உறுதி!.. கனிமொழி சிறையில் இருப்பது குறிப்பிட தக்கது ...

தமிழக அரசு  பதவி ஏற்ற-வுடன், மதுரையில் கடந்த 5 ஆண்டுகளாக குற்றங்கள் - ன் வழக்குகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது, இதனால் அழகிரி பெருத்த இடயுருகளை சந்திக்க நேரிடும்...

திமுகவின் 3 தூண்கள்  சரிந்து கிடப்பதால்... உடன்பிறப்புகள் சோகத்தில் உள்ளனர் சில உடன்பிறப்புகள், மாற்று கட்சிகளுக்கு தாவும் நிலையில் உள்ளனர்...


சில மாவட்ட செயலாளர்களும், ஒன்றிய செயலாளர்களும்.. மாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது....


இதனால் திமுக உடையும் நிலைக்கு தள்ளப்படும்....


அழகிரி மீது நடவடிக்கை முடிந்த பிறகு, ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதி!...

நல்லது நடந்தா  சேரி!....



2 கருத்துகள்:

  1. இதுவரை ஸ்டாலின் மீது எந்த புகாரும் இல்லை.தவிர,ஜெயலலிதாவை தாக்கும் விதமாக எதுவும் பேசுவது அவருடைய பாணி அல்ல.ஜெ.விற்கு ஸ்டாலின் மீது ஒரு மரியாதை உண்டு.ஆகவே அவர் மீது நடவடிக்கை இருக்காது.

    பதிலளிநீக்கு
  2. துர்கா சண்டைக்கு வந்துடம்யா!தமிழன் அவர்களே!

    பதிலளிநீக்கு

IP