சனி, 20 ஆகஸ்ட், 2011

இஸ்ரேலுடன் போருக்கு தயார் ஹாமாஸ் அறிவிப்பு!

என்னங்க சொல்றிங்க,
 ஆமாங்க...






இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இதையடுத்து பாலஸ்தீனத்திலும் இஸ்ரேலிலும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

கடந்த வியாழக்கிழமை தெற்கு இஸ்ரேலில் நடந்த கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 8 பேர் பலியாயினர். காஸா பகுதியைச் சேர்ந்த பாபுலர் ரெசிஸ்டன்ஸ் கமிட்டி தான் கார் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து காஸா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் 12 முறை நடத்திய பயங்கர தாக்குதல்களில் 14 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்தது.

இந் நிலையில் இனியும் இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிப்பதில் அர்த்தமில்லை என்று ஹமாஸ் ராணுவப் பிரிவான இஸ் அல்-தின் அல் காசிம் பிரிகேட் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் விமானத் தாக்குதலையடுத்து அந் நாட்டின் மீது காஸா பகுதியிலிருந்து ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து ராக்கெட்களை வானிலேயே தடுத்து வெடிக்கச் செய்ய ராக்கெட் எதிர்ப்பு ஏவுகணைளை இஸ்ரேல் நிலை நிறுத்தியுள்ளது....



  போருக்கு தயாராக உள்ளதாக ஹாமாஸ் அறிவித்திருப்பதால் பதற்றம் நிலவுகிறது!


 போருக்கு வீரர்களை உற்சாகபடுத்தும் ஹாமாஸ் வீரர்:



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP