என்னங்க சொல்றிங்க,
அமாங்க,
என்னைக்கு விஜய் அரசியல் வர்றேன் சொன்னாரோ! அப்பே லே இருந்து பிரச்னை தான் விஜய்க்கு!
அதற்க்கு முன்னோட்டமாக தனது மன்றங்களை! இயக்கமாக மாற்றினார், பின்னர் தன்னுடைய தந்தை -யை இயக்கத்தின் தலைவராக்கினார். பின்னர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவும் அளித்தனர்...
என்னைக்கு அதரவு அளித்தரோ! ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு ஊரிலும் இயக்கம் கலைக்க பட்டுத்தான் இருக்கிறது..
நடிகர் விஜய்யின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அழகாபுரம் பெரியபுதூர் காளியம்மன் கோவில் தெருவில் இளைய தளபதி விஜய் போக்கிரி மக்கள் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த ரசிகர் மன்றத்தினர் சுமார் 25 பேர் 28.03.2011 அன்று மன்றம் முன்பு கூடினார்கள். அவர்கள் மன்றத்தின் பிளக்ஸ் பெயர் பலகையையும் கிழித்து எறிந்தனர். எதிர்ப்பு கோஷமிட்டபடி தங்கள் உறுப்பினர் கார்டையும் தீவைத்து எரித்தனர். அதனால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவிடைமருதூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அவரது பேனரை எரித்தனர்.இது குறித்து திருவிடைமருதூர் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்நத பாலகுரு கூறும்போது, விஜய் ரசிகர்மன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு நடிகராகத்தான் அவரை பார்த்தோம். இந்த நிலையில் விஜய் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடை எடுத்து உள்ளார். ரசிகர்களை கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவு எடுத்தது வருத்தம் அளிக்கிறது. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ரசிகர் மன்றங்களை கலைக்குமாறு நாங்கள் வலியுறுத்துவோம் என்றனர்
மவனே நம்மல கவுதிருவான்களோ!
அய்யோ டென்ஷன்! 'தல' வலிக்குதே!
இனி தான் ஆரம்பம்!
நடிக்கறேவன்-லாம் நாடால நினைச்சா!....
அதோகதிதான்..........................
இக்கோபம் ஒவ்வொறு தமிழனின் மனதிலும் எழ வேண்டுமுங்களது பதிவை சில முன்னனி வலைப்பூக்களில் மறுமொழியாக வெட்டி ஒட்டியிருக்கிறேன். முடிந்தவரை உஙகளது இக்கறுத்தை எல்லா பதிவிகளிலும் உங்களது முகவரியுடன் பரப்புகிறேன்.
பதிலளிநீக்கு