என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
இன்று மாலை, உயர்நீதி மன்ற தீர்ப்பு தமிழக அரசை "டர் ஆகி" இருக்கிறது...
நீதி பதிகள்: இக்பால், சிவம் அடங்கிய பெஞ்சு பர பரப்பு தீர்ப்பு...
தீர்ப்பின் விவரம்:
நடப்பு ஆண்டிலும் தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டமே தொடர வேண்டும்.
> 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடைமுறைப்படுத்த வேண்டும்.
>சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாக அரசு கருதினால் குழு அமைத்து 3 மாதங்களுக்குள் அதைக் களைய நடவடிக்கை எடுக்கலாம்.
>சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒத்திவைக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படுகிறது.
>தமிழகத்தில் பழையப் பாடத் திட்டத்தை செய்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
இதனால் ஜெ-விற்க்கு முதல் அடி.. (இடி)
இப்புடி தீர்ப்பு கொடுத்தாலும்,
அதை தாங்கமுடியாத ஜெ, வழக்கை இழு தடிக்க ஜெ உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளார்...
இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என்று தெரிவித்தார்.
எது எப்புடியோ!
இந்த வருசம் " ஸ்கூல்" நடந்தா சேரி!...
இந்த சமச்சீர் கல்வி மாணவர்களை பாடாய் படுத்துது நன்பா...Students are affected most.
பதிலளிநீக்குwww.vijayandurai.blogspot.com