செவ்வாய், 5 ஏப்ரல், 2011

ஒரே மேடையில் குடிமகணும்! குடிமகளும்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க!...

ஒரே மேடைல குத்தாட்டம்!... ப்ளாக்கும்! வொய்ட்டும்!



கோவை: கூட்டணி அமைத்தாலும் இதுவரை ஒரே மேடையில் ஏறி பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தேமுதிக தலைவர் விஜய்காந்தும் நாளை கோவையில் ஒரே இடத்தில் கூட்டாக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.


அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது தொகுதிப் பங்கீடு, இடங்கள் தேர்வு ஆகியவை தொடர்பாக ஜெயலலிதாவும் விஜய்காந்தும் நேரில் சந்தித்துப் பேசவே இல்லை. இரு கட்சிகளின் தேர்தல் குழுவினர் தான் பேசி 41 தொகுதிகள் என்று முடிவு செய்தனர்.

இதையடுத்து ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் வந்து 20 நிமிடங்கள் மட்டுமே சந்தித்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு உடனே வெளியேறிவிட்டார் விஜயகாந்த் .
இந் நிலையில் இடையே ஏற்பட்ட கலாட்டாவில் இடதுசாரிகளை சேர்த்துக் கொண்டு மூன்றாவது அணி அமைக்கப் போவதாக ஜெயலலிதாவை விஜய்காந்த் மிரட்டினார்.

இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் தனது பிரச்சாரத் திட்டத்தை அறிவித்துவிட்டு பயணத்தையும் ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா. மேடையில் தனக்கு சமமாக விஜய்காந்துக்கு இடம் தர ஜெயலலிதா விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

அதே போல மரியாதை தரத் தெரியாத ஜெயலலிதாவுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்ய விஜய்காந்தும் விரும்பவில்லை.

இந் நிலையில் பிரச்சாரத்தின்போது அதிமுக கொடிகளைப் பிடிக்கக் கூடாது என்று அதிமுக தொண்டர்களை திட்டி, அந்தக் கட்சியினரின் விமர்சனத்துக்கும் ஆளானார் விஜய்காந்த்.

இதற்கிடையே ஜெயலலிதாவும், விஜய்காந்தும், இடதுசாரித் தலைவர்களும் ஒரே மேடையில் ஏறி பிரச்சாரம் செய்ய முடியுமா என திமுக தரப்பு கேள்வி எழுப்பி வருவதோடு, ஜெயலலிதாவுக்கும் விஜய்காந்துக்கும் பிரச்சனைகள் நிலவுவதை ஹை-லைட் செய்து வருகிறது.

இந் நிலையில் ஜெயலலிதாவை சமீபத்தில் ஓடிப் போய் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், விஜய்காந்தும் நீங்களும் நாங்களும் சேர்ந்த ஒரு கூட்டம் நடத்துவதே மக்களிடம் நல்ல பெயர் வாங்க உதவும் என்று கூற, எனக்கு டூர் இருக்கே, நேரம் இல்லையே என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார் என்கிறார்கள்.

ஒற்றுமையில்லாத இந்தத் தலைவர்களின் செயல்பாடுகள் மக்களிடத்திலும் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்ற அச்சம் அந்த அதிபுத்திசாலி பத்திரிக்கையாளருக்கும் ஏற்பட்டுள்ளது. அவரது கடுமையான முயற்சியாலும் இடதுசாரி தேசியத் தலைவர்கள் சிலரது தலையீட்டினாலும், வற்புறுத்தலாலும் விஜய்காந்துடன் ஜெயலலிதா ஒரே மேடையில் தோன்ற இப்போது ஒப்புக் கொண்டுள்ளார்.

இதன்படி கோவையில் நாளை நடக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதிமுக தலைமைக் கழகம் இதை அறிவித்துள்ளது.

கோவை சிதம்பரம்  பூங்காவில் நாளை மாலை நடக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் , விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் பரதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கு பெறுகின்றனர்.

விஜயகாந்த் பிரச்சார பயண பட்டியலின் படி நாளை தஞ்சாவூரில் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால் ஜெயலலிதாவின் இந்த திடீர் முடிவால் விஜயகாந்த் தஞ்சாவூர் பிரச்சாரத்தை தள்ளிவைத்துவிட்டு நாளை கோவை செல்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் ஜெயலலிதா ஒரே மேடை ஏறி, அதில் வைகோ பெயரை ஜெயலலிதா கூறியதும் மக்கள் கூட்டம் ஆராவாரம் செய்ய, ஜெயலலிதாவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது நினைவுகூறத்தக்கது.

கூட்டத்தில் அதிகமான மதிமுக கொடிகள் இருந்ததற்காக அதிமுக நி்ர்வாகிகளைக் கூப்பிட்டு ஜெயலலிதா கடிந்து கொண்டதாக செய்திகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது...

பாப்போம்!...

1 கருத்து:

  1. விசயகாந்திடம் மாமியும், கம்யுனிஸ்ட் தோழர்களும் அடி வாங்காமல் இருந்தால் சரி.

    பதிலளிநீக்கு

IP