சனி, 1 அக்டோபர், 2011

உள்ளாட்சி தேர்தல் கலாட்டா- வாரி இரைக்கும் கட்சிகள், பண மழையில் நனையும் மக்கள்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

அடுத்த தேர்தலுக்கு தயாராகிவிட்டது தமிழகம், இதுல அனைத்து கட்சிகளும் தனியாக களம் இறங்குவதால், மக்களுக்கு சந்தோசம் தாங்கலப்பா ஏனா அனைத்து கட்சிகளும் தங்களுடைய வெற்றிக்காக பணத்தை இரைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது....



இதனால் மக்கள் பண மழையில் நனைய ஆரம்பித்துள்ளார்கள், இது தீபாவளி சமயம் வேற இது மக்களுக்கு " டபுள் தாமாகக "-னு சொல்லுங்க...

ஒரு ஓட்டுக்கு, நூறுல இருந்து ஐநூறு வரைக்கும் கொடுக்குராங்கப்பா!  


அரசியல் கட்சிகள் இதுக்கு ஒரு புதிய கதையை சொல்லுகின்றனர், அது என்னன்னா...

வரும் பாராளமன்ற தேர்தலுக்கு ஒரு ஒத்திகை என்று சொல்லுகின்றனர்.. 

புரியிராப்ள சொல்றேன்,

                             கட்சிகள் பெரும் வாக்குகளின் அடிப்டையில் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாம்...

அதிமுக பெரும் திட்டத்தோடு இந்த தேர்தலில் தனியாக போட்டியிடுகிறது, ஜெ-க்கு  மீண்டும்  வந்து விட்டது பிரதமர் ஆசை, அதுக்காக இப்பவே ரெடியாகிவிட்டார். பிஜேபி உடன்  கூட்டணி அமைத்து போட்டியிடுவது தான் திட்டம்....

அதாவது, துணைபிரதமர் பதவி....


இதற்க்கு  அதிமுக-வின் தற்போதைய மூலவர் "சோ" கிரீன் சிக்னல் காட்டியுள்ளதாக  கூறப்படுகிறது...

திமுகாவோ கனிமொழி விடுதலையானால் காங்கிரஸ்-உடன் கூட்டணி, இல்லையேன்றால் இடதுசாரிகளுடன்  கூட்டணி...



காங்கிரசோ, அதிமுக மற்றும் தேமுதிகவுடன் தனி தனியாக பேசி வருகிறது...  

மற்ற கொசுறுகள் வழக்கம்  போல் தனிமரம்   தான்!..



பொறுத்து இருந்து பாப்போம்... அரசியல் கலாட்டவை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP