சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரத்தை எதிர்கொள்ளப் பயந்த காங்கிரஸ்வேட்பாளர் ஜோதிமணி, "அண்ணே தயவு செய்து என்னுடைய தொகுதிக்கு மட்டும் பிரச்சாரத்துக்கு வந்துடாதீங்க" என்று வேண்டி கடிதம் எழுதியுள்ளார்
நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரத்தில் குதித்துள்ளார் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான்.
தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளில் மட்டும் அவர் அக்கட்சியைத் தோற்கடிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் வைத்து வருகிறார். அவர் செல்லுமிடங்களிலெல்லாம் பெண்களும் ஆண்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வருகிறார்கள்.
அவரது பிரச்சாரத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல ஊர்களில் சீமான் அடுத்து எந்த இடத்தில் பேசப்போகிறார் என்று கேட்டு, அவர் செல்லும் முன்பே போய் மக்கள் காத்திருக்கின்றனர்.
"ஈழத் தமிழரின் உயிரைக் குடித்த காங்கிரஸை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவதே, நமது தமிழ் சொந்தங்களுக்கு இந்தத் தேர்தலில் நாம் தரும் ஆறுதல். அடுத்த தலைமுறைத் தமிழனுக்கு காங்கிரஸ் கட்சி என்றால் என்னவென்றே தெரியாத நிலை ஏற்பட வேண்டும்" என்று அவர் பேசுவதை மிகுந்த உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் மக்கள்.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில், எதிரணி வேட்பாளர் யாராக இருந்தாலும் கட்சி பார்க்காமல் அவர்களுக்கு வாக்களிக்குமாறு சீமான் கேட்டுக் கொள்கிறார்.
அவரது பிரச்சாரத்துக்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து மிரண்டுபோய்க் கிடக்கிறார்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள்.
சமீபத்தில் கரூர் தொகுதியில் அவர் பிரச்சாரத்துக்கு செல்லத் திட்டமிட்டிருந்தார். அப்போது, அவருக்கு கரூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஜோதிமணி ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
"அண்ணே, என்னோட தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்ய வந்துடாதீங்க" என்று அதில் கேட்டுக் கொண்டிருந்தாராம்.
ஆனால் சீமான் தனது திட்டத்தை மாற்றவில்லை. திட்டமிட்டபடி கரூருக்குச் சென்றார். அவர் பேச்சைக்கேட்க எக்கச்சக்க கூட்டம் .
கூட்டத்தில் பேசிய அவர், "காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தங்கை ஜோதிமணி என்னை பிரச்சாரத்துக்கு வரவேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கொண்டிருந்தார். என்ன செய்வது... என்னால் அப்படி இருக்க முடியாது தங்கையே.
உன்னுடைய, என்னுடைய தமிழ் உறவுகளை படுகொலை செய்த மகா பாதகர்கள் காங்கிரஸ்காரர்கள். அந்தக் கட்சியில் இருப்பது உன்னுடைய தவறு. இந்த நிமிடம் அந்தக் கட்சியை விட்டு நீ விலகி வந்தாலும், உன்னை நான் வெற்றிபெறச் செய்வேன்.
காங்கிரஸ் என்ற கட்சிதான் தமிழர்களின் முதல் எதிரி. இதனை ஜோதிமணி போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்," என்று அனல் பறக்க பேசிமுடித்தார்.
நன்றி: தட்ஸ் தமிழ்
அருமை..காங்கிரசை தோற்கடிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை..அதுவே இறந்த ஈழத தமிழனுக்கு நாம் செய்யும் பெருமை!
பதிலளிநீக்கு