என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
இந்த தேர்தல் கலைகட்டிருச்சு!
சில இடங்களில், இரு பிரிவினரின் வி.வி.ஐ.பி கள் ஒரே இடத்தில மோதுவதால் பட்டய கிளபிருச்சு தேர்தல்!
சொல்றேன் கேளுங்க!
கருணாநிதியின் மகனும், துணை முதல்வர் -மான ஸ்டாலின்-ஐ, எதிர்த்து அதிமுக மனிதநேய அறகட்டளை நிறுவனர் துரைசாமி-ஐ நிறுத்தியுள்ளது, துரைசாமிக்கும் மக்கள் மனதில் நல்ல மதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது, இதனால் திமுகவினர் சற்று கலகத்துடன் வேலை செய்து வருகின்றனர்...
திமுகவின் பேச்சாளர்! அமைச்சர் பொன்முடி-ஐ, எதிர்த்து அதிமுக சி.வி,சண்முகத்தை இறக்கியுள்ளது.. இதனால் இரு தரப்புமே கலக்கத்துடனே வேலை செய்கின்றன!...
இது மட்டுமா, தென் தமிழகத்தில் சிவகங்கை திருப்பத்தூரில் அமைச்சர் பெரியகருப்பனை எதிர்த்து பலமிகுந்த ராஜகண்ணப்பன் இறங்கியுள்ளார், சிதம்பரத்தேயே அலறவைத்தவர்!..
இதேபோல :
தென்காசி தொகுதி-> நடிகர் சரத்குமார் vs கருப்பசாமி பாண்டியன்,
ஆயிரம் விளக்கு தொகுதி->
ஸ்டாலின் கைகளில் ஒருவரான அசன் அலி ஜின்னா vs வளர்மதி,
இன்னும் சிலரும் இப்பட்டியலில் உள்ளனர்
இதனால் இத்தேர்தலில் இரு கட்சிகளின் வி.வி.ஐ.பி களும் கடுமையாக போராடுகின்றனர் !
தமிழக மக்களுக்கு மாற்றே இல்லை .. ஒரு பக்கம் வெறிநாய்க் கூட்டம் - இன்னொருப் பக்கம் சொறிநாய்க் கூட்டம்.. இரண்டும் அடித்துக் கொள்ளும் இலைகளில் மிஞ்சியவைகளைப் பொறுக்க காத்திருக்கும் தமிழன் படும் பெரும் போராட்டம் .. என்னக் கொடுமை சார் !!!
பதிலளிநீக்கு