வியாழன், 24 மார்ச், 2011

தமிழன் என்றால் இழிச்சவாயங்கள!!!...

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க, 

கொள்கை ஒன்று ! செய்வது வேறு!
சொல்வது ஒன்று ! செய்வது ஒன்று !

அரசியல் கட்சிகள் பத்தி சொல்றேன், 

அண்ணா சொல்வார்:
                கொள்கை என்பது உடுத்திருக்கும் வேட்டி போன்றது!
                பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போன்றது!

பதவிக்காக கொள்கை துறப்பவன்! கட்டியிருக்கும் வேட்டியை துறப்பவனுக்கு சமம்!...

ஆனால், இங்கும் அதேகதி தான்! நம்ம கட்சிகள் நிலை!

நம்முடைய அரசியல்வாதிகள், நம் தமிழ் இனத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள் என்பதை நொடிக்கு ஒருமுறை நிருப்பிபார்கள்....

நம்ம மீனவனை சுட்டா கடிதம்!
கூட்டணியில் கூட  சீட் கேட்டா ஆதரவு வாபஸ்!! 
பாத்திங்களா மக்களே!
உயிரை விட இவர்களுக்கு சீட் தான் முக்கியம்... நம்மை அழிக்க நினைக்கும் கூட்டத்துடன் கூட்டணி..???..

திராவிட இயக்கங்கள் தொடங்கப்பட்டதே ! 
பார்பனையும்,  பார்பன சக்தியையும் அழிக்க தான்..
ஆனால் இன்றோ  ஒரு திராவிட இயக்கத்துக்கு தலைவரே  பார்பான் தான்!..

இப்படி நேர் - எதிராக இருக்கிறது, என்ன கொடுமை சார் இது !!!!


இவர்கள் எல்லாம் தமிழன் என்று வாய்கிலியே பேசுவாங்க! ஆனா ஒன்னும் நடக்காது...

இந்தியாவில் நடந்த கொடுமை என்ன தெரியுமா:
                       மும்பையில் நடந்த தாக்குதல் நடத்தப்பட்டதில் 200 பேர் இறந்தார்கள், ஆதலால் ஒரு நாட்டின் மீது படை எடுக்க துணிந்த அரசாங்கம்..

நம்முடைய 650  மேற்ப்பட்ட  சகோதரர்களை கொன்று குவித்த நாட்டுடன் கொஞ்சி குலாவுகிறது!..

மும்பை-காரனுக்கு ஒரு நியாயம்!
நமக்கு ஒரு நியாயமா!

அப்ப தமிழன்னா இழிச்சவாயங்கதானா!!!

தமிழனே உணருங்கள், உன்னுடைய நேரம் இது !
உணர்!...


1 கருத்து:

  1. அதிலென்ன சந்தேகம்.. தமிழன் நிச்சயமாக இழிச்சவாயன் தான் .........

    பதிலளிநீக்கு

IP