ஆமாங்க,
கட்சிகள் தீவிரமா அரசியல்-லே குதிச்ட்டாங்க....
இப்போதைய நிலவரப்படி பாத்தா:
" முந்தும் அதிமுக "
" முக்கும் திமுக"
பஸ்ட் அதிமுக -வ பத்தி சொல்றேன் ...
4 வருசமா தூங்கிகிடந்த நம்ம "அம்மா"(ஜெய) , இப்ப முழிச்டாங்க, அது மட்டும் இல்லே இந்த ரேஸ்-லே யும் அவுங்க தான் முதல்ல இருக்காங்க ...
தேமுதிக -ஓட தொகுதி பங்கீடு ஏற குறைய முடிஞ்சுருச்சு ....
கேப்டன் ஓகே சொன்னதாக தகவல் கிடைச்சிருச்சு...
அதுனால நம்ம மேடம் ... கொஞ்சம் ப்ரீ தான் ...
மத்த காட்சிகளு கிட்டே ஏற குறைய பேரம் முடிச்சாச்சு ...
தேர்தலுக்கு தயார் - ஆகிவிட்டது அதிமுக கூட்டணி !!!.....
இப்ப வாறேன் திமுக விசயத்துக்கு :
பாமக -க்கு மட்டும் முடிச்சாச்சு தொகுதி பங்கீடு....
மத்தவங்க- லோட, மல்லுகட்டுது திமுக .....
காங்கிரஸ் கேக்குது எம்பது (80)...
கொடுக்க இருப்பது ஐம்பது (50 )....
என்ன செய்ய ....
கலைஞர் அமைதி காப்பது ( புலி பதுங்குவது பாயத்தானே )... சந்தேகமாக உள்ளது ....
ஏன் அமைதியா இருக்காரு ?
உடன்பிறப்புகள் கொடுத்த ஊக்கம் தான்!...
என்ன சொல்ர... ஆமாங்க, உடன்பிறப்புகள் சிலர் கலைஞர் -ஐ சந்திச்சு, காங்கிரஸ் நம்ம- லோட வேணாம் , அவுங்களுக்கு மக்கள் -ட்ட செல்வாக்கு இல்ல... போன தடவையோட கம்மி-யா தொகுதி ஒதுக்கணும்னு சொல்லிருக்காங்க ..
அப்படி அவுங்க ஒத்துவரலேன்னா நம்ம கூட்டணிக்கு அவுங்க வேணாம் ....
உடன்பிறப்புகளின் ஊகத்தினால தலைவர் ரொம்ப சிந்தனைல இருக்காரு!.....
இதுனால திமுக, பின்தங்கியே இருக்கு......
பாப்போம் நல்லது நடந்த சரி!!!!..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக