கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது. அவரது தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளது. இது தொடர்பாக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியதாவது:
மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்தனர். சில அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். இதை விஜய் ஏற்றுக் கொண்டார். அ.தி.மு.க.வுடன் எங்களது சுமூகமான உறவு உள்ளது. எனவே உள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமாறு ரசிகர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிதட்டு மக்களும் சேவை செய்வதற்காக மக்கள் இய்ககம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. டெல்லியில் நடந்த அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்...

விஜயின் அரசியல் அதிரடி ஆரம்பம்!...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக