என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,...
வழக்குகள், கைதுகள், தயாரிப்பாளர்களின் புகார்கள் என ஒரு பக்கம் சிக்கல்களைச் சந்தித்தாலும் மீண்டும் புதிய வேகத்தோடு திரைப்படத் துறையில் களமிறங்குகிறது சன் பிக்சர்ஸ்.
இந்த இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்த எடுப்பிலேயே மங்காத்தா என்ற பெரிய படத்தை வெளியிடுகிறது இந்த நிறுவனம்.
தயாநிதி அழகிரியின் தயாரிப்பான இந்தப் படம், சமீபத்தில் ஞானவேல் ராஜாவுக்கு விற்கப்பட்டது. உடனே அவர் படம் தொடர்பான விளம்பரங்களில் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி மற்றும் அவரது க்ளவுட் நைன் நிறுவன பெயரை முற்றாக நீக்கிவிட்டார். மேலும் ஜெயா டிவிக்கு படத்தின் ஒளிபரப்பு உரிமையைத் தர முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், படத்தை ஞானவேலிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார் தயாநிதி அழகிரி.
மங்காத்தாவின் தொலைக்காட்சி உரிமம் மட்டுமல்லாமல், நெகடிவ் உரிமையையும் சன் குழுமத்துக்கே அவர் கொடுத்துவிட்டார்.
வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி சன் பிக்சர்ஸ் பேனரில் மங்காத்தா வெளியாகிறது. எங்கேயும் காதலுக்குப் பிறகு, தான் வாங்கிய அவன் இவன் உள்ளிட்ட படங்களைக் கூட திரும்பக் கொடுத்து வந்த சன் பிக்சர்ஸ், இப்போது மீண்டும் அதிரடியாக மங்காத்தாவை வெளியிடுகிறது....
இத்தகவலை தயாநிதி அழகிரியும் உறுதிபடுத்தியுள்ளார்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக