என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
இது கல்வியாளர்களின் வசூல் நேரம்!.. மார்க் வேணாம் பணம் தான் வேண்டும்...
மாணவர்கள் தங்களது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிகளை தேடி அலைகிறார்கள்... எல்லாரும் மருத்துவர் ஆகணும், பொறியாளர் ஆகணும், டீச்சர் ஆகணும், விஞ்சானி ஆகணும் பலருக்கும் பல கனவு!... ஆனால் காசு உள்ளவர்களுக்கு மட்டுமே கல்லூரி என்றாகிவிட்டது இப்போது...
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கு மோகம் அதிகரித்துல்லாதால் கல்வி நிலையங்களும் கட்டண கொள்ளையை அதிக படுத்தியுள்ளது!..
இலவச படிப்பு, உதவி தொகை என்று அறிவித்துவிட்டு!.. கண்ணுக்கு தெரியாமல் காசை அமுக்கும் காலம் இது....
வாங்க வருசையா பாப்போம்:
முதலில் மருத்துவ கல்லூரிகள் :
தமிழகத்தில் ஏற குறைய 28 கல்லூரிகள் உள்ளன, அதில் 18 அரசிடமும் மற்றவை தனியார் வசம் உள்ளன..
3 தனியார் மருத்துவ பல்கலைகழகங்கள் உள்ளன....
மூன்றுமே சென்னையில் அருகாமையில் அமைந்துள்ளன, இந்த கல்லூரிகளில் படிப்பு கட்டணம் எவ்ளோ தெரியுமா...
வருட கல்விகட்டணம் 5 லட்சம், விடுதி, சாப்பாடு , தேர்வு கட்டணம் தனி.. அது மட்டுமா... நன்கொடை எவ்ளோ தெரியுமா 35-70 லட்சம் வரைக்கும்... வாய போலக்காதிங்க,
மற்ற தனியார் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் வருடத்திற்கு 3-4 லட்சம் , நன்கொடை 20-35 லட்சம் வரை... ஆள பொறுத்து!...
அரசு கல்லூரிகளில் 25000, உதவி தொகை வருவதால் கல்விக்கட்டணம் குறையும்...
பொறியியல் கல்லூரிகள்,:
தமிழகத்தை பொறுத்தவரை 400 மேற்ப்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன... 25 மேற்பட்ட பொறியியல் பல்கலைகழகங்கள் உள்ளன...
கல்லூரியின் தரத்திற்கு ஏற்றார் போல் நன்கொடை இருக்கும்...
50000-1200000 வரை நன்கொடைகளை வசுளிக்கின்றன... பொதுவாக சென்னை சுற்றியுள்ள பகுதுகளில் குறைந்தது லட்சம்....
இதே போல் ஆசிரியே கல்வி நிலையங்களும் லட்சம் லட்சமாக பணத்தை கரகின்றனர்...
அனைத்து கல்லூரிகளும் நன்கொடையே ஒரு வழக்கமாக்கியுள்ளது..
காரணம்:
நம்முடையே மோகமும்,
கல்வி வியாபரமானதும்,
அரசின் முறையற்ற தன்மையும் தான்!
தகவல் க்கு நன்றி
பதிலளிநீக்கு