புதன், 8 ஜூன், 2011

அவன் இவனை அவிழ்த்துவிட்டு! வேங்கை விரட்டி பிடித்த சன்....

என்னங்க சொல்றிங்க.
ஆமாங்க..

சன் பிக்ச்சர் வெளியிட இருந்த அவன் இவன், தற்பொழுது அரசியல் சூழ்நிலைகளால் மீண்டும் தயரிப்பாளரிடமே கொடுத்து படத்தை வெளியிட சொல்லி இருக்கிறது...

படத்தின் சேட்டிலைட் உரிமையை மட்டும்  வாங்கி கொண்டது சன்!...

அரசியல் நெருக்கடியில் அகப்பட்ட சன் தற்பொழுது!... 
தனுஷின் வேங்கை விரட்டி வாங்கியதாக கூறபடுகிறது ( நம்ப தகுந்த வட்டாரங்கள் சொல்கிறது)...



சன் பிக்சர்ஸ் கடைசியாக வெளியிட்ட தனுஷ் படம் மாப்பிள்ளை. பாக்ஸ் ஆபீஸில் படு தோல்வியைச் சந்தித்தது இந்தப் படம்.

ஆனால் இதற்கு முன் தனுஷ் நடிக்க, சன் பிக்ஸர்ஸ் வெளியிட்ட படிக்காதவன், ஆடுகளம் போன்ற படங்கள் நல்ல லாபம் பார்த்தன. அந்த நம்பிக்கையில், இப்போது வேங்கை படத்தை வாங்கி வெளியிடுகிறது சன்.

ஹரி இயக்கியுள்ள இந்த வேங்கையில், தனுஷுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்ஷன் - ரொமான்டிக் மசாலா இந்த வேங்கை.

தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீடு வரும் 10-ம் தேதி அதாவது நாளை மறுதினம் சென்னையில் நடக்கிறது....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP