என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
வாய வச்சுகிட்டு சும்மா இருக்கணும்! இல்லேன்னா இப்படித்தான்!...
மதுரையில் மல்லுகட்டி கொண்டிருந்த வடிவேலு மடக்கு-நு ஒரு அறிக்கை என்னனு தெரியுமா!...
எதோ தெரியுமா உலறிடேன் அதுக்கு ஏன் இந்த கொலை வெறி?... என்னை பகச்சிங்கன்னா நானும் அரசியல் குதிச்சு நாசமபோயடுவேன்!...
அப்புறம் எனக்கு தெரியாது!.. வருத்தப்பட்டு போரஜனமில்ல!...
அறிக்கையின் விவரம் :
தேமுதிகவினர் தொடர்ந்து தனது வீடுகளுக்கு முன்பு நின்று கண்டபடி அசிங்கமாக பேசி வருவதால, இந்த நிலை தொடர்ந்தால் பேசாமல் திமுகவில் சேர்ந்து கட்சி ரீதியாக அவர்களை ஒரு கை பார்ப்பது என்ற முடிவுக்கு வைகைப் புயல் வடிவேலு வந்துள்ளதாக தெரிகிறது.
வாயால் கெடுவது என்பதற்கு வடிவேலுதான் சரியான உதாரணம். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தன் மீதும், தனது நடிப்பு மீதும் வைத்திருந்த, வைத்துள்ள நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ளாமல், அதைப் பற்றிக் கவலைப்படாமல் தேர்தல் பிரசாரத்தின்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சரமாரியாக வாய்க்கு வந்தபடி பேசி பிரசாரம் செய்து வீண் வம்பில் மாட்டிக் கொண்டு விட்டார்.
இப்போது தேர்தல் முடிவு பாதகமாக வந்து விட்டதால் என்ன செய்வது என்று புரியாமல் தற்போது வீட்டோடு முடங்கியுள்ளார்.
மறுபக்கம் தேமுதிகவினரோ பிரச்சினையை இத்துடன் முடிக்காமல் வளர்த்துக் கொண்டே போகின்றனராம். வடிவேலு வீட்டுக்கு முன்பு திடீர் திடீரென கூடுவது, இருக்கிற கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி ஏசுவது, தாறுமாறாக திட்டுவது என்று பொழுதைக் கழித்து வருகிறார்கள்.
வடிவேலுதான் நொந்து நூடூல்ஸாகிப் போய் விட்டாரே என்று விடாமல் தொடர்ந்து அவர்கள் அநாகரீகமாக நடந்து வருவதால் வடிவேலு கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
இதுகுறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்நது புலம்பியபடி வருகிறாராம் வடிவேலு. என்னைத்தான் வீட்டோடு முடக்கி விட்டார்களே, பிறகு எதற்கு தொடர்ந்து அசிங்கமாக பேசி வருகிறார்கள். இப்படியே இவர்கள் தொடர்ந்து வந்தால் நானும் பேசாமல் திமுகவில் சேர்ந்து கட்சி ரீதியாக இவர்களை ஒரு கை பார்க்க வேண்டியதுதான், வேறென்னத்த செய்ய என்று கூறுகிறாராம் வடிவேலு.

அடக்கி வாசிக்கணும்!
இல்லேன்னா ஆப்புதான்!...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக