வெள்ளி, 6 மே, 2011

எங்கேயும் காதல்!.... என்னாச்சு! விமர்சனம் இல்லிங்கோ!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

இன்று வெளியான சன் பிக்ச்சர்ஸ் படம்.... போச்சாம் லே!...



ரஜினியின் எந்திரனுக்குப் பின் சன் பிக்ஸர்ஸ் வெளியிட்ட இரு படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளன.

ஒரு தொலைக்காட்சி நிறுவனமாக பெரும் வெற்றியைப் பெற்றுள்ள சன் குழுமம், திரைப்படத் தயாரிப்பைப் பொறுத்தவரை தரமான படங்களைத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அல்லது தயாரித்த படங்களில் நல்ல வெற்றிப் படங்கள் என்றால் அவை இரண்டுதான். ஒன்று ரஜினியின் எந்திரன், இரண்டாவது கேவி ஆனந்தின் அயன்.

மற்றவை வெறும் விளம்பரங்களில் மட்டுமே வெற்றியாக சித்தரிக்கப்பட்டன என்பது விமர்சகர்களின் கருத்து.

இந்த நிலையில் எந்திரன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு, மாப்பிள்ளை மற்றும் எங்கேயும் காதல் என இரு படங்களை அடுத்தடுத்து வெளியிட்டது சன்.

இரண்டு படங்களுமே மோசமான விமர்சனங்களைச் சந்தித்துள்ளன. பாக்ஸ் ஆபீஸிலும் தோல்வியைத் தழுவியுள்ளன. இன்று வெளியான எங்கேயும் காதல் இரண்டாவது ஷோவிலேயே படுத்துவிட, 'உலகெங்கும் அரங்கு நிறைந்த காட்சிகள்' என விளம்பரப்படுத்தி வருகிறது சன் பிக்ஸர்ஸ்..............


ஏன்னா தெனாவெட்டு பாத்திங்களா!....

கொஞ்சம் பணமும்!.. மீடியா இருந்த போதும் இவுங்க சொல்றது தான் மெய்!....


தியேட்டருக்கு  போய் ஏமாரதிங்கோ!....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IP