என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
வந்து விட்டது சட்டமன்றத்தேர்தல்.. கட்சிகள் எல்லாம் களப்பணியை, ஆரம்பிச்சுட்டாங்க...
இரு அணிகள் நேருக்கு நேர் மோதும் சரியான போட்டி இது!....
மற்ற அணிகள் கொசுறு- ஆகவே கருதப்படுகின்றன....
வருவோம் நம் கதைக்கு:
பலம் :
தமிழக மேம்பாட்டு திட்டங்கள், மருத்துவ திட்டங்கள், சிறுபான்மை மற்றும் அருந்ததிய இடஒதுக்கீடு, புதிய கல்லூரிகள், 108 ஆம்புலன்ஸ் திட்டம்...
கூட்டணி பலம்:
வட தமிழகத்தில், எலியும் பூனையுமாய் இருந்த பாமக வும் விசியும் ஒரு அணியில் இருப்பது, வட தமிழகத்தில் ஜொலிக்கலாம்...
கொங்கு நாடு முன்னேற்ற கழக கூட்டணி கொங்கு பகுதியில் சரிந்த வாக்கினை மீட்டு தரும்...
தென்தமிழகத்தை பொறுத்தவரை அழகிரி, பணத்தை இறைக்க தயாராக இருக்கிறார்...
பலவீனம் :
* ஸ்பெக்ட்ரம் ஊழல், திமுகவின் இமேஜை பாதித்துள்ளது, விண்ணை முட்டும் விலைவாசி, சட்டஒழுங்கு முறைகேடுகள் அதிகமாக உள்ளது, குடும்ப அரசியல், சினிமாத்துறை முழுவதையும் குடும்ப உறுபினர்களுக்கு தாரைவாத்திருப்பது.....
கூட்டணி பலவீனம் :
தமிழகத்தில் காங்கிரஸ் வலுவிழந்து இருக்கிறது, அக்கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கிருப்பது.. மீனவர்கள் மத்தியில் பெருத்த எதிர்ப்பு உள்ளது, சீமான் போன்றவர்களின் பேச்சுகளால் காங்கிரஸ் மேலும் வலுவிழக்க கூடும், அவர்களின் கோஷ்டி மோதலும் இத்தேர்தலில் எதிரொலிக்கும் ....
பலம் :
தேமுதிக, அணியில் இணைந்திருப்பது.. பத்துக்கு மேற்ப்பட்ட கட்சிகளுடன் கூட்டணி... இடதுசாரி கட்சிகள் தொழிலாளர்களின் வோட்டுகளை பெற்று தரும். மற்ற கட்சிகள் சிதறிய வோட்டுகளை மீட்டு தரும்....
மக்கள் மாற்று ஆட்சியை வேண்டுகிறார்கள்...
சினமா துறையினர் முழுக்க முழுக்க அதிமுக அணிக்கே அதரவு அளிக்கைருக்கிரார்கள்...
ஸ்பெக்ட்ரம் ஊழலை உலகுக்கு கொண்டுவந்ததில் பெரு பங்கு!...
சில மாதங்களுக்கு முன்பு நடத்திய பொது கூட்டங்களில் திரண்ட மக்கள் வெள்ளம்!!...
கட்சியில் புதிய அமைப்புகளை தொடங்கி, தலைவர்களுக்கு பதவி தந்தது...
பலவீனம்:
4 .5 ஆண்டுகள் கொடநாட்டில் ஓய்வு, கூட்டணி கட்சிகளை மதிக்க தெரியாத குணம், கட்சியின் பழைய தலைவர்களுக்கு வாய்பளிக்க மறுப்பது, வேட்பாளர் தேர்வில் கோளறு பிடி....
சொத்து குவிப்பு வழக்கில் அவ பெயர்..
இவர் ஆட்சிக்கு வந்தால், அரசு தேர்வாணையம்(tnpsc ) நடத்தும் தேர்வு நடக்காது .. என்று பலரும் அச்சத்தில் உள்ளனர், இதனால் இளைஞர்கள் வோட்டு நழுவும்...
யாரையும் மதிக்க மாட்டாள் என்ற எண்ணம் உள்ளது, தன்மான விரும்பிகள் இவருக்கு வோட்டு போடுவது கடினம்...
இத்தேர்தல், தமிழகத்தில் கணிக்கமுடியாத தேர்தலாக அமையும்....
தொங்கு சட்டபேரவை வந்தால் ஆச்சிரியபடுவதற்க்கில்லை.... என்பதே நிதர்சனம்!.....
இரு அணிகளும் பலத்தாலும், பலவீனத்தாலும் ஒன்று படுகின்றன ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக