சனி, 19 பிப்ரவரி, 2011

பிரபாகரனின் அம்மா மரணம்!.!.!.!.


பிரபாகரனின் தாயார் மரணம்:

 தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதிப்பிள்ளை (பார்வதியம்மா) அவர்கள் இன்று காலை காலமானார் என்பதை மிகமன வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்.
கடந்த பத்து வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். தனது மேல் சிகிச்சைக்காக இந்தியா வந்த அவரை இந்திய அரசு சிகிச்சைக்கு அனுமதி மறுத்து அவர் வந்த விமானத்திலேயே மலேசியாவிற்கே திருப்பியனுப்பியது.
இதனால், பார்வதி அம்மாள்,  அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்குச் அழைத்து செல்லப்பட்டு யாழ்.வல்வெட்டித்துறை மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு சற்று உடல் நலம் தேறிய அவர் கடந்த சில வாரங்களாக சுய நினைவை இழந்து அவதியுற்றார்.
இந்நிலையில் இலங்கை நேரப்படி இன்று காலை மணி 06.20க்கு வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இயற்கை எய்தியுள்ளார்.
ஈழத்தாய் பார்வதி அம்மாளின் பூதவுடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அளவில் தமிழீழ மக்களின் அஞ்சலிக்குப் பின்னர் விதைக்கப்படலாம் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 
நன்றி: தமிழ் ஈழம் - செய்திகள் .....

1 கருத்து:

IP