செவ்வாய், 31 மே, 2011

விஜய்க்கு - ஜெ வைச்ச செக்

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,....


நம்ம விசய் இருக்கார்ல, அவர் நடந்து முடிந்த தேர்தலில் அம்மா கட்சிக்கு தன்னுடைய ரசிகர்களை  ஓட்டு போட சொன்னார்..... ஜெ-வும் முதல்வர் ஆனார்....


இதனால் நம்ம விசய், ரொம்ப சந்தோசப்பட்டார்... அவருக்கு என்ன ஆசை-னா... அவர் அடுத்த படமான வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜெ தலைமையில் நடத்துறதுன்னு....


இந்த நிலையில்... ஜெ!  தற்பொழுது எனக்கு மக்கள் அலுவல் பணிகள் இருப்பதால் திரையுலக நிகழ்ச்சிக்கு வரமுடியாதுன்னு சொல்லிட்டார்....


நம்ம விசய் தரப்பு, ஜெ-வின் மீது அதிருப்தியில் இருக்குதாம்!...........






இது மட்டும் காரணம் இல்ல, விசய்  சமிபத்தில் நடத்திய   ரசிகர்மன்றங்களின் பொது தான் அரசியலுக்கு வருவதற்கு பச்சை கோடி காட்டியதும் தானாம்....


இது ஜெ தரப்புக்கு பிடிக்கவில்லையாம்.... சொல்றாங்க.......


ஜெ தனது சித்து விளையாட்டை ஆரம்பித்துவிட்டார்..........

புதன், 25 மே, 2011

தமிழக இளைஞர்களை கெடுக்க, படை எடுக்கும் காம படங்கள் எச்சரிக்கை!...

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,


தமிழ் படங்களுக்கு தமிழ்-ல பெயர் வச்சா வரி விளக்கு சொன்னாரு.. மாஜி முதல்வர் குலைஞர்!.... என்னமோ தெரியேல வருசையா வருது காம உணர்ச்சியை தூண்டும் திரைப்படங்கள்!....

வஞ்சம், தப்பு, தாரம்... இப்புடி அடுக்கி கிட்டே போகலாம்... நியூஸ் பேப்பர் ல  பாதி பக்கம் இந்த மாதிரி படங்கள் தான் இருக்குது...




காசு-க்கு ஆசை பட்டு இந்த மாதிரி படங்களை விளம்பரம் செய்யும் பத்திரிக்கை நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!...

இந்த மாதிரி படங்கள் வருவதினால், இளைஞர்கள் மனதில் பல தவறான எண்ணங்கள் எற்பட வாய்புள்ளது.. அவர்கள் தவறான வழியில் இறங்குவதற்கு  இதுவும் காரணமாகிறது.................

அரசு தலையிட்டு, இந்த மாதிரி படங்கள் வெளிவருவதை தடைவிதிக்க வேண்டும்!....

வெள்ளி, 20 மே, 2011

என் மகளை காப்பாத்துங்க!... முக்கும் மு.க!

என்னங்க சொல்றிங்க 





2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அதே போல கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டார்.

இதனால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த திமுகவும் அதன் தலைவர் கருணாநிதி குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுச் சதியாளராக அவரது பெயரை குற்றப் பத்திரிக்கையில் சிபிஐ சேர்த்துள்ளது. முறைகேடாக ஸ்பெக்டரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டிபி ரியாலிட்டியின் (இதன் இயக்குனர் ஷாகித் உசேன் பல்வா) இன்னொரு நிறுவனமான சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி பணம் வந்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழிக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இது கனிமொழிக்குத் தரப்பட்ட லஞ்சம் தான் என்று சிபிஐ கூறியுள்ளது. கனிமொழி தவிர கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கனிமொழி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து மே 6ம் தேதி கனிமொழியும், சரத்குமாரும் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

கனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, எல்லாத் தவறுக்கும் ராசாதான் காரணம், கனிமொழிக்குத் தொடர்பில்லை. அவர் ஒரு பெண், குழந்தைக்குத் தாய், எங்கும் ஓடி விட மாட்டார். எனவே முன் ஜாமீன் தர வேண்டும் என்று வாதிட்டார்.

அடுத்த நாளும் விசாரணை நடந்தது.அதன் பின்னர் மே 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அன்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக மே 20ம் தேதியான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சிபிஐ கோர்ட்டுக்கு வந்திருந்தார் கனிமொழி. அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நீதிபதி ஷைனியிடம் தெரிவிக்கப்பட்டது. தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கனிமொழி கூறவே அதை ஏற்ற நீதிபதி அவர் புறப்பட்டுச் செல்ல அனுமதித்தார். இதையடுத்து அவர் கிளம்பிச் சென்றார். ஓய்வுக்குப் பின்னர் மதியம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்த நிலையில் இன்று கனிமொழி முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஷைனி அறிவித்தார். இதற்காக இன்று காலை 10 மணிக்கு கனிமொழி நீதிமன்றம் வந்தார். அவருடன் கணவர் அரவிந்தனும் உடன் வந்திருந்தார்.

காலையில் நீதிபதி ஓ.பி.ஷைனி கூறுகையில், பிற்பகல் 1 மணிக்கு மேல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். இந் நிலையில் இந்தத் தீர்ப்பு 2.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்ட்டது.

அதன்படி பிற்பகல் இரண்டரை மணியளவில் நீதிபதி தனது உத்தரவைப் பிறப்பித்தார். அப்போது கனிமொழியின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார் நீதிபதி. மேலும் கனிமொழியை உடனடியாக கைது செய்து 15 நாட்கள் சிறையில் வைக்க சிபிஐக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து பாடியாலா நீதிமன்ற லாக்-அப்பில் கனிமொழி அடைக்கப்பட்டார். அங்கிருந்து மாலை 4.45 மணியளவில் அவர் அங்கிருந்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பெண்கள் பகுதி உள்ள 6வது வார்டில் அடைக்கப்படுகிறார்.

உளவாளி அறைக்கு அருகில் கனிமொழி:

கனிமொழி அடைக்கப்படவுள்ள அறைக்கு அருகில்தான் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் கைதான மாதுரி அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறையில் கனிமொழிக்கு டிவி, மின்விசிறி, கட்டில் ஆகிய வசதிகள் கிடைக்கும். மேலும் அந்த அறையிலேயே குளியலறையும் இணைக்கப்பட்டுள்ளது.

கனிமொழியைப் போலவே கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் முன்ஜாமீன் கோரியிருந்தார். அந்த மனுவையும் நீதிபதி ஷைனி நிராகரித்து விட்டார். இதனால் அவரும் கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு வார்ட் நம்பர் 4ல் அடைக்கப்பட்டார். இந்த வார்டில் தான் காமன்வெல்த் ஊழலில் கைதான காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கல்மாடி அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதே சிறையில் தான் திமுக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவும் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண் கலங்கிய கனிமொழி-ஆறுதல் கூறிய ராசாவின் மனைவி:

முன்னதாக நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியவுடன் கனிமொழி கண் கலங்கினார். தனது கணவர் அரவிந்தன் பக்கம் திரும்பிய அவரது கண்களில் நீர் வழிந்தது. அவருக்கு அரவிந்தன் சமாதானம் கூறினார். அதேபோல அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ராசாவின் மனைவி பரமேஸ்வரியும் கனிமொழிக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தன்னை கைது செய்ய உத்தரவிட்டவுடன், மூக்குக் கண்ணாடி, மருந்துகள், புத்தகங்களை கொண்டு செல்லவும் அனுமதிக்க வேண்டும் என கனிமொழி நீதிபதியிடம் கோரி்க்கை வைத்தார். அதை நீதிபதி அனுமதித்தார்.

முன்னதாக இன்று காலை கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பு ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பாதகமாக அமையுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த கனிமொழி, எந்த உத்தரவு வந்தாலும் அதை சந்தித்தாக வேண்டிய நிலையில் நான் உள்ளேன். உத்தரவுக்காக காத்திருக்கிறேன். நான் நன்றாகவே இருக்கிறேன், எந்தப் பதட்டமும் இல்லை என்றார் அவர்.

சிறையில் யார் யார்?:

இதுவரை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர் ஷாஹித் பல்வா, அதன் இயக்குநர் வினோத் கோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொலைத் தொடர்பு அதிகாரிகள் ஹரி நாயர், சுரேந்திரா பொபாரா, கெளதம் ஜோஷி, டிபி ரியாலிட்டியின் நிர்வாகியும் ஷாகித் உசேன் பல்வாவின் உறவினருமான ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோர் இணைகின்றனர்.

உயர் நீதிமன்றத்தில் அப்பீல்?:
  
இந் நிலையில் கனிமொழிக்காக வாதாடி வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி கூறுகையில், இந்த விஷயத்தில் கைது நடவடிக்கைகையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கனிமொழி மனு தாக்கல் செய்யலாம் என்றார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடைபெற உள்ளதால் கனிமொழியை நாளை காலை 10 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி சைனி உத்தரவிட்டுள்ளார். இதனால் அவர் நாளை நீதிமன்றம் அழைத்து வரப்படவுள்ளார்.......






ஊரு காச திண்டா!...
ஜெயில்-தான் போடுவாங்க!....
வேற சாபாடா போடுவாங்க!.............

வெள்ளி, 13 மே, 2011

மண்ணை கவ்விய மதுரைக்காரன்!

என்னங்க சொல்றிங்க,
ஆமங்க....

தேர்தல் நடந்து  முடிஞ்சிருச்சு, கணிப்புகள் பொய்யானது....
குறிப்பாக நக்கீரன் கணிப்பு நாரிபோச்சு.... வாயே வச்சுகிட்டு சும்மா இருக்கணும்... இல்லேன்னா இப்படி தான்....

அது இல்ல நம்ம மேட்டர்.....

கருணாநிதியின் மகனும், மத்திய அமைச்சருமான அழகிரி.. . என்ன சொன்னாரு திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும்னு சொன்னாரு , ஆனா என்னாச்சு 20 தொகுதி வெற்றிபெர்ரதுக்கு நாக்கு தல்லிபோச்சு!.....

மதுரை கோட்டை சொன்னவரு..... அங்க தான்  பெரிய ஓட்டை !..... அணைத்து தொகுதியுமே அவுட்!......... சொல்லபோன மதுரையே வாஷ் அவுட்!..........



பணத்தை குடுத்தா, ஓட்டு போட்ட்ருவாங்க நினைச்சாங்க ஆனா பணத்த வாங்கிட்டு ஆப்பு வச்சுட்டாங்க!...
மதுரைக்காரன் மூஞ்சில மன்ன புசிட்டாங்க....

இன்னொரு ஆளு சினிமாவுல இவரு காமெடி பீஸ், ஆனா இன்னைக்கு உண்மையிலேயே காமெடி பீஸ் ஆயிட்டாரு....

பயந்துக்கிட்டு மதுரைல தஞ்சம் புகுந்துட்டாறு!... 
தனி மனித தாக்குதல் எந்த ஒரு தேர்தலையும் தீர்மானிக்காது.... பொறுமைகாத்த விஜயகாந்த் இன்று எதிர் கட்சி தலைவர்........



செவ்வாய், 10 மே, 2011

ஓட்டு பதிவுக்கு பின்- எடுத்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளீயிடு!

என்னங்க சொல்றிங்க, 
ஆமாங்க...



ஏப்ரல் 13 - எல்லாரும் ஓட்டு போட்ட பிறகு எடுக்க பட்ட கணிப்பு என்று பிரபல பத்திரிக்கைகளும் .. கருத்து கணிப்பு நிறுவனங்களும் வெளியிட்ட விவரங்கள்.....


இந்தியா டுடே!.. அவுட் லுக்!...  இந்து!... மற்றும் மும்பை & டெல்லி சேர்ந்த தனியார் நிறுவனங்கள்  மேற்கொண்ண்டுள்ளன!...

அதன் படி:

அதிமுக கூட்டணி ஏற குறையே 140  இடங்கள் வெற்றி பெறுமாம்....
திமுக கூட்டணி 93  இடங்கள் வெற்றி பெறுமாம்!...

மற்ற சில நிறுவனங்கள் நடத்தியே கணிப்பில்...

திமுக கூட்டணி 135  இடங்களும் ...
அதிமுக 99 இடங்களும் பெறுமாம்.....


என்னமோ எதோ தெரியேல......


ஆனா ஒன்னு! சொல்றேன் 
கடந்த மக்களவை தேர்தலில் இதே மாதிரி  கணிப்புகள்.. அதிமுக அணியே அதிகமான இடங்களை வெற்றி பெரும் என்றனர்....
ஆனால் நடந்தது என்ன, திமுக கூட்டணி அதிகமான இடங்களை கைப்பற்றியது  நினைவிருக்கட்டும் ....


இத்தேர்தலில் இரு கட்சிகளும் சம பலத்தில் உள்ளன... என்பதே உண்மை...


உண்மையா சொல்ல போனா....


அதிமுக ஓட்டு-களை பிஜேபி 20 தொகதிகளுக்கு மேல் பிரித்துள்ளது என்று  சொல்றாங்க...உண்மை நிலவரம் தெரியேல......


அதே போல் சிறுபான்மை ஓட்டுக்கள் அதிமுக கூட்டணிக்கு விழுந்துள்ளதாக தென்படுகிறது.....


இம்முறை அழகிரி கோட்டை மதுரை... மாறப்போதாம்!,

இதே நினைச்சு! கவலை படாதிங்க...

பொறுத்துருங்க மே 13  வரை.... நண்பகல் 12  மணிக்கு முடிவுகள் தெரிந்துவிடும்...




திங்கள், 9 மே, 2011

இலங்கை மீது போர் தொடுக்குமா!... இந்தியா?.....................

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,...

கடந்த வாரம் ஒசாமாவை படுகொலை செய்தது, அமெரிக்கா கூட்டு படையினர்........ 
படுகொலைக்கு காரணம் என்ன? 3500 மக்களை கொன்றுகுவித்தாகவும், இரட்டை கோபுரம்   தரைமட்டம்! என்று காரணம் கூறியுள்ளனர்.....................


அதுக்கு என்ன தண்டனை!... அந்நாட்டின் மீது போர்!.. அவனை சுட்டு வீழ்த்துதல்................


ஆனா இங்க ஒருத்தன், ஒரு லட்சத்திற்கு அதிகமான பேரை கொலை  செய்துருக்கிறான் ... பல கோடி மதிப்புள்ள தமிழ் மக்களின் சொத்துக்களை சூரையாடிருக்கிறான், அது மட்டும் இல்லை பல தமிழ் பெண்களை நிர்வாணமாக கொன்று குவித்துருக்கிறான்.............


இவனுக்கு என்ன தண்டனை!....... கொடுக்க போறாங்க!...............






பாகிஸ்தான் மீது போர் தொடுக்க சொல்லும் பிஜேபி....... இலங்கையின் மீது ஏன் போர் தொடுக்க  கூறவில்லை?.............

இலங்கை மீது போர் தொடுக்குமா?இந்தியா ................ தொடுக்காது ,....

ஏனென்றால் தமிழர்கள் எல்லாம் இழிச்ச வாய்ங்க!............ ம்ம்ம்ம்

இந்த விசயத்தில் உலக நாடுகள் எல்லாம், கொலை கார நாடு இலங்கை என்கிறது.........
ஆனால் இந்தியா  மட்டும்  இன்முகத்தோடு உபசிரிக்கிறது.........

கண்டம் விட்டு கண்டம் உள்ள.. கனடா நாட்டுக்காரன் சொல்றான்...
பக்கத்துவீட்டு காரன் நம்ம வாயே மூடிகிட்டு  நிக்கிறோம்............


என்ன கொடுமை!..........
பாத்திங்களா............... 
இதற்கு காரணம் நம்முடையே இனத்துரோகிகள்............... 


இந்தியா அரசாங்கம்  தமிழகம் என்றாலே சற்று தள்ளிதான் வைத்திருக்கிறது போல !.....................


உணருங்கள் நண்பர்களே!.............................
நாம் அனைவரும் இனத்தால் ஒருவரே!........................



இதுலாம் ஒரு தீர்ப்பாய!- அயோத்தி விவகாரம்! - உச்சநீதி மன்றம் கேள்வி ?

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,


 அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடமும், இன்னொரு பகுதியை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்றும், இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.



கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி இந்தத் தீர்ப்பை வழங்கியது அலகபாத் உயர் நீதிமன்றம். இந்தத் தீர்ப்புக்கு இன்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் வினோதமாகவும், விந்தையாகவும் இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

லக்னெள நீதிமன்றத்தின் நீதிபதிகள் தரம்வீர் சிங் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளித்தபோது ஒருமி்த்த தீர்ப்பை வழங்கவில்லை.

ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனியே வெவ்வேறு தீர்ப்பை வழங்கினர்:

நீதிபதி தரம் வீர் சர்மா, முழு நிலத்தையும் இந்துக்களுக்கே ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். நீதிபதிகளில் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால் ஆகியோர் அயோத்தி நிலத்தை 3 ஆகப் பிரித்து ஒரு பங்கை சன்னி மத்திய வக்பு வாரியத்திற்கும், இன்னொரு பங்கை நிர்மோகி அகாராவுக்கும், மூன்றாவது பகுதியை ராம் லல்லா அமைப்புக்கு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

மொத்தத்தில் அவர்கள் அளித்த தீர்ப்பின்படி நிலத்தை 3 மாதத்துக்குள் மூன்றாகப் பிரித்து கோவில் கட்டிக் கொள்ள ராமஜென்ம பூமி அறக்கட்டளையிடமும் (ராம் லல்லா அமைப்பு), இன்னொரு பகுதியை அங்கு ஏற்கனவே கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் (சன்னி மத்திய வக்பு வாரியம் சார்ந்த கமிட்டி) வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

அதே நேத்தில் மொத்த நிலத்தையும் தங்களிடம் தர வேண்டும் என்ற சன்னி முஸ்லீம் வக்பு வாரியத்தின் கோரிக்கையை 3 நீதிபதிகளும் ஒட்டு மொத்தமாக நிராகரித்தனர்.

அதன் மூலம் பாபர் மசூதி இருந்த இடமான 2,400 சதுர அடி நிலம் மூன்றாகப் பிரித்து மூன்று தரப்பினரிடமும் வழங்கும் வரை இப்போது இருக்கும் நிலையே, அதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே நிலம் இருக்க வேண்டும் என்றும், அந்த இடத்திலிருந்து ராமர் சிலை அகற்றக் கூடாது என்றும் தீர்ப்பளித்தனர்.

இதில் மசூதியின் மையப் பகுதி அமைந்திருந்த இடத்துக்குக் கீழே உள்ள இடம் ராமர் பிறந்த இடம் என்பதால், அந்த இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், (இந்த நிலத்துக்கு உரிமை கோரும் இந்து அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அறக்கட்டளை அமைத்து இந்த நிலத்தைப் பெற்று கோவில் கட்டிக் கொள்ளலாம்)

மீதமுள்ள இடத்தை அங்கு ஏற்கனவே சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், பாபர் மசூதி கமிட்டியிடமும் பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில், இந்த மசூதி கட்டப்பட்ட இடத்தில் கோவில் இருந்துள்ளது என்பதை இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு நிரூபித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதை இஸ்லாம் மதமே தவறு என்கிறது என்றார்.

நீதிபதி சிப்கத் உல்லா கான் தனது தீர்ப்பில், கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. அந்த இடத்தில் கோவில் இருந்து, அது நெடுங்காலமாக சிதிலமடைந்து கிடந்தது. கோவில் முழுவதும் சிதிலமடைந்த பி்ன்னரே அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது. இடிந்து கிடந்த கோவிலின் சில கட்டுமானப் பொருட்களும் மசூதி கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

இவ்வாறு தனித்தனியே நீதிபதிகள் கருத்துத் தெரிவி்த்தாலும் மூவரும் மொத்தத்தில் அளித்த தீர்ப்பின்படி, இந்த இடத்தில் 3ல் 2 பங்கை இந்துக்களிடமும் (ராமர் கோவில் கட்டவும், நிர்மோகி அகராவிடமும்), 1 பங்கு இடத்தை பாபர் மசூதி கமிட்டியிடமும் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

இந்த இடத்துக்கு உரிமை கோரி ராம ஜென்மபூமி நியாஸ், நிமோகி அகரா ஆகியவை 1950களில் வழக்குத் தொடர்ந்தன. 1961ம் ஆண்டில் சன்னி முஸ்லீம் வக்பு வாரியம் வழக்குத் தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு கடந்த 60 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பையொட்டி நாடே பெரும் பரபரப்பில் ஆழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து நிர்மோகி அகரா, அகில பாரத் இந்து மகாசபை, ராம் விரஜ்மான் உள்ளிட்ட இந்து அமைப்புகளும், ஜமாயத் உலமா இ ஹிந்த், சன்னி மத்திய வக்பு வாரியம் உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தன.

வக்பு வாரியமும், ஜமாயத் அமைப்பும் தங்களது மனுவில், இந்த தீர்ப்பு உரிய ஆதாரத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்படவில்லை. மாறாக மத நம்பிக்கையின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதை நிராகரிக்க வேண்டும். ராமர் பிறந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டதாக உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையில் அதை உறுதிப்படுத்தி பிறப்பிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு தவறானதாகும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்து மகாசபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த தீர்ப்பில் பாதியை நாங்கள் ஏற்கிறோம். அதேசமயம், ஒரு பங்கு இடத்தை முஸ்லீம்களுக்குத் தர வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்க்கிறோம். ஒட்டுமொத்த நிலத்தையும் இந்துக்களுக்கே ஒதுக்கி உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அப்தாப் ஆலம், நீதிபதி ஆர்.எம். லோதா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், இன்று அளித்த தீர்ப்பில் அலகாபாத் உயர் மன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

அப்போது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்து நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். நீதிபதிகள் கூறுகையில், நிலத்தைப் பிரிக்குமாறு மனுதாரர்கள் யாருமே கோரவில்லை. ஆனால், யாருமே கேட்காத நிவாரணத்தைக் கொடுத்துள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம். எவரும் கோராத வகையில், நிலத்தைப் பிரிக்குமாறு தீர்ப்பளித்திருப்பது வினோதமாகவும் உள்ளது, விந்தையாகவும் உள்ளது.

  
இது மிகவும் புதுமையான, புதிரான தீர்ப்பு. இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் தொடர வேண்டும்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக உரியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.....


இன்னும் எத்தன வருசம் தான் கடத்தபோறாங்களாம்... தெரியல பா! 

சனி, 7 மே, 2011

அவசர அவசரமாக வருகிறான் அவன் இவன்! - சன் பிக்ச்சர்ஸ் வேகம்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

எந்திரன் வெற்றிக்கு பிறகு , சன் பிச்ச்சர்ஸ் வெளியிட்ட படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளதால் வருத்தத்தில் உள்ளது சன் தரப்பு....



தற்போதேயே வெளியீடான எங்கேயும் காதல்!... எங்கேயோ போச்சு தியேட்டரை விட்டு!...  அதுனால இதனை சரி கட்ட பாலா-வின் இயக்கத்தில் ஆர்யா மற்றும் விஷால்  நடித்த "அவன் இவன்" படத்தை வெளியீட தீவிரமாக உள்ளது.....




பொதுவாக சன் பிச்ச்சர்ஸ் வழக்கம் என்னவென்றால், ஒரு ஒரு  படத்துக்கும் குறைந்தது 30 நாள் இடைவெளி, தொடர் தோல்விகாலால்     15  அல்லது  20 நாட்களுக்குள்ளேயே படத்தை வெளியீடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது  சன்.....................

ஓவர் பில்டப்! உடம்புக்கு ஆகாது!........... மச்சான்!......

மதுரை சாதி கலவரம்!... பக் பக் பதட்டம்!........



துரை திருமங்கலத்திற்கு அருகிலுள்ள டி. கல்லுப்பட்டி வட்டத்தை சார்ந்த வில்லூர் கிராமத்தில் ஆதிக்க சாதியான முக்குலத்தோரின் உட்பிரிவான அகமுடையார் சாதியைச் சார்ந்தவர்கள் அதிகம். சிறுபான்மையான தாழ்த்தப்பட்டவர்கள் சுமார் 300 குடும்பத்தினரும் இங்கு வசித்து வருகின்றனர்.



அகமுடையார்கள் வசிக்கும் மேலத்தெருவான காளியம்மன் கோவில் தெருவிற்குள் தாழ்த்தப்பட்டவர்கள் சைக்கிளிலோ அல்லது செருப்பு அணிந்தோ போக கூடாது என்பது இப்போது கூட எழுதப்படாத விதி. 

மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் கூட தேவர் சாதி மாணவர்களை ஐயா என்றுதான் உடன்பயிலும் தாழ்த்தப்பட்டவன் அழைக்க வேண்டுமாம். இது இந்து பாசிசம் கோலோச்சும் குஜராத்திலோ அல்லது வடக்கின் இந்தி பேசும் மாநிலங்களிலோ நடக்கவில்லை.

பெரியார் பிறந்த மண்ணில்தான் இந்தக் கொடுமை.
இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலுமா இப்படி என முகவாயை தேய்ப்பவர்களும், 2020- இல் எப்படியாவது வல்லரசாக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு வாளாவிருப்பவர்களும் அவசியம் போய் வர வேண்டிய இந்தியாவின் பல கிராமங்களில் ஒன்றுதான் வில்லூர்.

இந்த கிராமத்தில் வசிக்கும் குரு என்பவரின் இளைய மகன் தங்கபாண்டியன். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தாலும் பள்ளியில் கிடைத்த அவமானங்களையும் சகித்துக் கொண்டு ஆசிரியர் பயிற்சி வரைக்கும் படித்து விட்டு, தற்போது வேலை தேடிக் கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் அவர்களுக்கு 7 ஏக்கர் விவசாய நிலம் வாங்க முடிந்த காரணமே அக்குடும்பத்தினர் மீது தேவர் சாதியினர் கோபமடைய போதுமான காரணமாக இருக்கையில் தங்கபாண்டியனின் எதிர்கால வாத்தியார் வேலை என்பது அவர்களது கோபத் தீயில் எண்ணெய் ஊற்றுவதாகவே இருந்தது.


தந்தை வாங்கித் தந்த மோட்டார் சைக்கிளில் ஊரை வலம் வர விரும்பினார் அந்த இளைஞர். அப்படி வலம் வருகையில் காளியம்மன் கோவில் தெருவிற்குள்ளும் அவரது மோட்டார் சைக்கிள் போகவே, ஆத்திரமடைந்த அகமுடையார் சாதியினர் சுமார் ஐந்து பேர் ஒன்று சேர்ந்து அவரைத் தாக்கியுள்ளனர். 

27 வயது நிரம்பிய தங்கப்பாண்டியனை தாக்கிய அகமுடையார் சாதியைச் சேர்ந்த ஐவரில் மூவர் 24 வயது இளைஞர்கள். மற்ற இருவரும் நாற்பதுகளில் உள்ளவர்கள். இன்று யாரும் சாதி பார்ப்பதில்லை என்பதை பேசுபவர்கள் இதனைக் கவனிக்கவேண்டும். பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிளையும் பிடுங்கிக் கொண்டார்கள்.


இது குறித்து தங்கப்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் 5 பேரும், தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டனர். கடந்த சனியன்று இரவு நடந்த இச்சம்பவத்திற்கு மறுநாள் போலீசு கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் தலைமையில் அமைதி ஏற்படுத்த அமைதிக்குழு அமைக்கும் பணியை அரசுத் தரப்பு தொடங்கியது.


ஆனால் தங்களிடம் வந்து அபராதம் கட்டி, மன்னிப்புக் கேட்டு மோட்டார் சைக்கிளைத் திரும்ப பெறாமல் போலீசுக்குப் போனதால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர் எஸ்.பி மீதும் தாக்குதலை நடத்தினர். காவல்துறை இணை ஆணையாளரின் வாகனத்தையும் சேதப்படுத்தினர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், லத்தி சார்ஜீலும் பலர் காயமடைந்தனர். 53 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் முன்னிலையிலேயே தங்கப்பாண்டியனின் அண்ணன் முருகன் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தி உள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஒரு குடும்பம் முன்னேறுவதையே சகிக்க முடியாத அளவுக்கு சாதிவெறி கோலோச்சுகிறது.


தாழ்த்தப்பட்டவனுக்கு தேநீர்க்கடையில் தனிக்குவளையும், மேலத்தெருவில் செருப்புப் போடத் தடையும் உள்ள ஊருக்குள் தாழ்த்தப்பட்டவன் வாத்தியாருக்குப் படித்திருப்பதும், அவன் பேண்ட் சட்டை போடுவதும் அந்த ஊரில் அதுவும் மேலத்தெருவிலே புதுசாக வாங்கிய மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறான் என்றால் சாதிவெறியால் அதை ஜீரணிக்க முடியவில்லை. ஒரு வேளை தங்கபாண்டியனின் ஆசிரியர், பொருளாதாரத் தகுதி காரணமாக அகமுடையார் சமூகப் பெண்கள் அவனைக் காதலித்திருந்தால் என்ன நடக்கும்? கொலைதான் நடக்கும்.


மதுரை பகுதியைச் சேர்ந்தவர்கள் எவரும் அங்கே நிலவும் ஆதிக்க சாதிவெறியை நன்கு உணர்ந்திருப்பார்கள். பத்தாண்டுகள் அங்கே வாழ்ந்தவன்  என்ற முறையில் நானே இதை பார்த்திருக்கிறேன். அக்டோபர் 30- ஆம் தேதி பிறந்து, அதே தேதியில் மறைந்த முத்துராமலிங்கம் என்ற சாதிவெறியனை சாமியாக கும்பிடும் தேவர் சாதியினர், அந்த குருபூஜைக்கு சுயமரியாதை இயக்க அரசியல்வாதிகளை மாத்திரமின்றி, போலிக் கம்யூனிஸ்டுகளையும் வரவழைக்குமளவுக்கு செல்வாக்கான ஆதிக்க சாதியினர்.

பசும்பொன் கிராமத்திற்கு லாரி,  வேன்களில் நிரம்பி வழியும் தேவர் சாதி குடிமகன்கள் மதுரை மேலமாசி வீதி வழியே அம்பேத்கரையும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியையும் அர்ச்சிக்கும் வார்த்தைகளை காதால் கேட்கவே கூசும்.


பருத்தி வீரன் கார்த்திக் போல அம்மா மார் சிறுவாடு சேர்த்து வைத்த பணத்தில் குடித்துக் கூத்தடிப்பதும், அம்மா போனபிறகு வழியில்லாமல் பொறுக்கித் தின்ன ரவுடியாவதும் என இச்சாதியின் பெரும்பாலான ரவுடிகளால் மதுரை நிரம்பி வழிகிறது.
மச்சி, மாப்பிள்ளை என்று சக நண்பர்களைப் பதின்வயதில் கூப்பிட்டு மகிழ்ந்தவர்களுக்கு மதுரைப் பகுதியில் வழங்கிவரும் பங்காளி என்ற உறவுமுறை புரிவதற்கு சிரமமானதுதான். ஆதிக்க சாதிகள் தமக்குள் மாத்திரம் விளித்துக்கொள்ளப் பயன்படுத்தும் பிரத்யேக வார்த்தை அது என எனக்கு தெரியாது. அப்படித் தெரியாமல் விளித்து, அவர்களிடம் வாங்கியும் கட்டிக்கொண்டவன் நான். எல்லோரையும் உறவுமுறை வைத்துப் பேசினாலும் தாழ்த்தப்பட்டவர்களை மாத்திரம் அப்படி மறந்தும் கூப்பிட மாட்டார்கள்.


அப்போதுதான் பாரதி கண்ணம்மா திரைப்படம் வந்து போயிருந்தது. எனது அறையை கல்லூரி விடுதியில் பகிர்ந்து கொண்ட சக வகுப்பு மாணவனுக்கு நடிகை மீனாவைப் பிடிக்காது. ஏன் என கடைசி வரை அவன் சொல்லவே இல்லை. கல்லூரி இறுதி நாளில் அவனே சொன்னது இது. “பின்ன என்னடா ! எங்க தேவர் சாதில பொறந்துட்டு போயும் போயும் எஸ்சி தான் கெடச்சானா காதலிக்கிறதுக்கு.”



கஞ்சிக்கில்லை என்றாலும் இத்துப் போன சாதி கௌரவத்திற்காக இந்த தேவர் சாதி வெறியர்கள் நடத்தும் அயோக்கியத்தனங்கள் நிறைய உண்டு. வசதியான தொழில் நடத்தும் தேவர் சாதி பிரமுகர்கள்தான் ஏழை தேவர் சாதி மக்களை வைத்து இப்படி சாதிவெறியைக் கிளப்பிவிட்டு குளிர் காய்கின்றனர். இவர்களை பொது அரங்கில் அம்பலப்படுத்தி விரட்டும் போது மட்டும்தான் வில்லூர் போன்ற கிராமங்களில் இந்தக் கொடுமைகள் நடப்பது குறையும்.......

நன்றி : வினவு தளம்!..

+2 ரிசல்ட் எந்த வலைதளத்தில் பார்க்கலாம்!......

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,



வருகிற மே 9  தேதி,   +2  ரிசல்ட் வருது ... ஏற குறையே 7 லட்சம் பேர் எழுதிருக்காங்க..
பல்வேறு சிக்கலுக்கு பிறகு அமைச்சர் அறிவிச்சார்!.... 
நீங்க ரிசல்ட்  பாக்கும் பொது தளம் பிஸி-யாக இருக்கலாம், இதனை நீங்க தவிர்க்கலாம்,
எப்புடி... 
சொல்றேன்.. 
ஒரே தளத்தே எல்லாரும் பார்க்கும் பொது பிஸி-யாக தான் இருக்கும்.. அதுனால பல தளங்கள் முகவரி சொல்றேன் அதுலே எது ப்ரீ-யா இருக்கோ அத பாத்துக்குங்க....................

கீழ:

JMDTAMIL-1 

JMDTAMIL-2 

JMDTAMIL-3 

JMDTAMIL-4  

JMDTAMIL-5  


    
    

வெள்ளி, 6 மே, 2011

காவி பயங்கரவாதம்!.. சிம்புக்கு நெருக்கடியா!.....

என்னங்க சொல்றிங்க,

ஆமாங்க,

சிம்பு நடித்த "வானம்" படத்லே  காவி பயங்கரத்தால  வரும் கொடுமைகளை காம்முச்சங்க... அத பொறுக்க  முடியாத காவி அமைப்புகள் போர் கோடி தூக்கியுள்ளன!.................



 சிம்பு கட் அவுட்டுக்கு செருப்பு மாலை போட்ட பாஜக வினரைக் கண்டித்து, தி நகரில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் சிம்புவின் ரசிகர்கள். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சிம்பு நடித்து வெளியாகியுள்ள வானம் படத்தில் இந்து மதத்தை கேலி செய்யும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பாஜக ஆதரவாளர்கள் சிலர், தாம்பரம் எம்ஆர் தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த சிம்புவின் கட் அவுட்டுக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்தச் சம்பவம் சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை உண்டாக்கியது.

பாஜகவினரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று காலை 10 மணிக்கு சென்னை திநகரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு எதிரே ஏராளமான சிம்பு ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

சிம்புவின் படத்துக்கு செருப்பு மாலை போட்டதற்காக பாஜகவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிம்பு ரசிகர் மன்றம் சார்பில் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட ரசிகர்களை போலீசார் கைது செய்தனர்.......


உண்மையா  சொன்னா கோபம் வருதோ!............

எங்கேயும் காதல்!.... என்னாச்சு! விமர்சனம் இல்லிங்கோ!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

இன்று வெளியான சன் பிக்ச்சர்ஸ் படம்.... போச்சாம் லே!...



ரஜினியின் எந்திரனுக்குப் பின் சன் பிக்ஸர்ஸ் வெளியிட்ட இரு படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளன.

ஒரு தொலைக்காட்சி நிறுவனமாக பெரும் வெற்றியைப் பெற்றுள்ள சன் குழுமம், திரைப்படத் தயாரிப்பைப் பொறுத்தவரை தரமான படங்களைத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அல்லது தயாரித்த படங்களில் நல்ல வெற்றிப் படங்கள் என்றால் அவை இரண்டுதான். ஒன்று ரஜினியின் எந்திரன், இரண்டாவது கேவி ஆனந்தின் அயன்.

மற்றவை வெறும் விளம்பரங்களில் மட்டுமே வெற்றியாக சித்தரிக்கப்பட்டன என்பது விமர்சகர்களின் கருத்து.

இந்த நிலையில் எந்திரன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு, மாப்பிள்ளை மற்றும் எங்கேயும் காதல் என இரு படங்களை அடுத்தடுத்து வெளியிட்டது சன்.

இரண்டு படங்களுமே மோசமான விமர்சனங்களைச் சந்தித்துள்ளன. பாக்ஸ் ஆபீஸிலும் தோல்வியைத் தழுவியுள்ளன. இன்று வெளியான எங்கேயும் காதல் இரண்டாவது ஷோவிலேயே படுத்துவிட, 'உலகெங்கும் அரங்கு நிறைந்த காட்சிகள்' என விளம்பரப்படுத்தி வருகிறது சன் பிக்ஸர்ஸ்..............


ஏன்னா தெனாவெட்டு பாத்திங்களா!....

கொஞ்சம் பணமும்!.. மீடியா இருந்த போதும் இவுங்க சொல்றது தான் மெய்!....


தியேட்டருக்கு  போய் ஏமாரதிங்கோ!....

வியாழன், 5 மே, 2011

அஜித்தின் அதிரடி முடிவுக்கு காரணம்!.. பத்திரிகையின் பதில்கள்!

என்னங்க சொல்றிங்க,

ஆமாங்க,

அதிரடி அஜித்!..  

திடிர்னு மன்றங்கள் களைப்பு காரணம் என்ன!...

பல பத்திரிகைகளின் பளிச் பதில்கள் இதோ:

y ajith decision?

விஜயின் பொன்னியின் செல்வன் ட்ராப்?.... விக்ரம் நடிக்கிறாரா!..........

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,

பர பர பரப்பாக பேசப்பட்ட படம்.. ட்ராப்  ஆனதா!.... காரணம் ஆளுங்கட்சியா!............


விக்ரம்க்கு வாய்ப்பா!............






கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை சினிமா படமாக எடுக்க மணிரத்னம் திட்டமிட்டார். இதில் விஜய் நாயகனாக நடிப்பதாக இருந்தது. அனுஷ்கா, ஆர்யா, சத்யராஜ், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு போன்றோரும் முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்தனர். பலருக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்க இருந்தனர்.


ஆனால் திடீரென்று அப்படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது நிறைய சரித்திர படங்கள் வந்துள்ளன. ரூ.100 கோடி செலவிட்டால் படம் லாபம் ஈட்டித் தருமா? என தயாரிப்பாளர்கள் பலர் யோசித்தனர்.
பெரிய பட நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்க யோசித்தனர். இதையடுத்து பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது....




புதன், 4 மே, 2011

"தல" மங்காத்தாவின் பாடலை "டோனி" வெளியிடுகிறார்?!...........

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,....

நம்ம "தல" 50 வது  படம் " மங்காத்தா ", அனைவரின் மத்தியில் பெரியே எதிர்பார்ப்பை ஏற்படுதியுள்ளது.....
 இந்த படத்தை "மே" வெளியிட முயற்சித்தார்கள்! ஆனால் முடியவில்லை, படம் ஜூன் வெளியாகும் என தெரிகிறது, 



படத்தின் பாடல் வெளீயிட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளனர், படத்தின் தயாரிப்பளாரும், சோனி bmg  நிறுவனமும்...

அதற்காக " கிரிக்கெட்டின் "தல" டோனியை அழைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்..... 



இந்த செய்திதான் இப்ப கோலிவுட்டின் ஹாட் நியூஸ்!.............



 

திங்கள், 2 மே, 2011

ஒசாமா மரணமும்! அமெரிக்கா பொய்மையும்!

என்னங்க சொல்றிங்க,
ஆமாங்க,
நேற்று-யே தினம், உலகம் முழுவதும் வலம் வந்த செய்தி மாவீரன் ஒசாமா மரணம் என்று!...
ஆனால் இன்னும் சந்தேகம் நீடிக்கிறது, நேற்றேயே  செய்தி உண்மைதானா என்று!..
அமெரிக்கா உளவு அமைப்பு சொன்ன விசயங்களும் நம்ப முடியாதாக இல்லை.... 
கடந்த வருடம், ஆகஸ்ட் மாதத்தில் இடத்தை உறுதிபடுத்தியே பின்! ஏன்? 10  மாதங்களுக்கு பிறகு சுட வேண்டும்!...
ஏன் காலதாமதம்?...
ஏப்ரல் 29  ஆணை பிறப்பிக்க வேண்டும் ?
இடம் தெரிந்த உங்களுக்கு, உயிருடன் பிடிக்க  வழியில்லையா?...

அதாவது மாவீரன் ஒசாமாவை, ஒற்றன் ( மா மா )  வேலை பார்த்து பிடித்தது வேசி மகனான அமெரிக்கா!... ஏப்ரல் 28  ஒசாமாவிற்கு மயக்க மருந்தை கலக்க செய்து குடிக்க செய்து நியபாகத்தை இழக்க செய்து அதன் பின் சுட தொடங்கிருக்கிறது  அமெரிக்கா, அதன் பின் யாருக்கும் தெரியகூடாது என்பதற்காக அந்த கட்டிடத்தை தீ- யிட்டு உள்ளனர்....

உண்மை தெரிந்துவிடும்  என்பதற்காக மரபணு சோதனை கூட பன்னாமால் உடலை கடலில் தூக்கிஎரிந்துள்ளது!... 
ஏன் ? உலக வல்லரசு  பயப்படுகிறது, இறந்த உடலுக்கு!....

அமெரிக்கா வை  எதிர்த்தால் உலக பயங்கரவாதியா !..... 
தன் இனத்தை அழிக்க நினைத்தவனை! எதிர்த்தான்!.... மாவீரன் ஒசாமா !...

இந்த நிலைக்கு அமெரிக்கா பதில் சொல்லியே ஆக வேண்டும் !....

அமெரிக்கா - வின் அழிவு! மிக நெருக்கத்தில்! 

வானம்,கோ படங்கள் இணையத்தில் வெளீயிடு!.....

புதிதாக வெளியான, 
வானம் மற்றும் கோ படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.....



நீங்களும் பதிவிறக்க வேண்டுமா:

நான் சொல்ல மாட்டேன்....

அழுவாதிங்க :

ஞாயிறு, 1 மே, 2011

அருணாச்சல முதல்வர் மாயமா? மரணமா?.....

அருணாச்சல் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டூவுடன் சென்ற ஹெலிகாப்டர் என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை. கிட்டத்தட்ட 30 மணி நேரம் தாண்டி விட்ட நிலையில் ஹெலிகாப்டரும் அதில் பயணித்த அருணாச்சல் பிரதேச முதல்வர் உள்பட 5 பேரின் கதியும் என்ன என்பது தெரியவில்லை.



டோர்ஜியும், மேலும் நான்கு பேரும் ஹெலிகாப்டர் ஒன்றில் நேற்று காலை தவாங் நகரிலிருந்து கிளம்பினர். தலைநகர் இடா நகரை இந்த ஹெலிகாப்டர் 11.30 மணியளவில் வந்தடைந்திருக்க வேண்டும்.

ஆனால், இடையிலேயே அந்த ஹெலிகாப்டருனான தொடர்பு அறுந்து போனது. இதனால் அது விபத்துக்குள்ளானதாக அஞ்சப்பட்டு அதை தேடும் பணியில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுதப்பட்டன.

இந் நிலையில் வானிலை மோசமானதால் ஹெலிகாப்டர் பூடானில் டபோர்ஜிஜோ பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளதாக முதல்வரின் செயலாளர் முன்னதாக தெரிவித்தார். ஆனால் அது பின்னர் மறுக்கப்பட்டு விட்டது.

முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் எங்கு போனது என்பது தெரியவில்லை. அது விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நூற்றுக்கணக்கானோர் தேடுகிறார்கள்

தவாங் மற்றும் டெங்கா ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 300 ராணுவத்தினர், இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்பு    ப் படையினர், போலீஸார் உள்பட நூற்றுக்கணக்கானோர் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பூட்டான் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் பூட்டான் பாதுகாப்புப் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய விமானப்படை விமானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இஸ்ரோவும் செயற்கைக் கோள் மூலம் படங்களை எடுத்து அனுப்பி உதவி வருகிறது.

ஹெலிகாப்டரில் காண்டூ தவிர ஹெலிகாப்டர் கேப்டன் ஜே.எஸ்.ஜப்பார், கேப்டன் கே.எஸ்.மாலிக், பாதுகாப்பு அதிகாரி யேஷி சோட்டாக், தவாங்          எம் எல் ஏ   ஷேவாங் டோண்டுப்பின் சகோதரி யேஷி லாமு ஆகியோரும் உடன் இருந்தனர்.

தேடுதல் பணிகளைக் கண்காணித்து முடுக்கி விடுவதற்காக நாராயணசாமி உள்ளிட்ட 2 மத்திய அமைச்சர்கள் இடா நகர் விரைந்துள்ளனர்.

கவலையில் குடும்பத்தினர்

டோர்ஜீ குறித்த தகவல் ஏதும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகமடைந்துள்ளனர். அனைவரும் குவஹாத்தி விரைந்து அங்குள்ள விமான நிலையத்தில் காத்துள்ளனர்.

டோர்ஜீயின் மனைவி மற்றும் மகனைத் தொடர்பு கொண்ட  காங்கிரஸ்               தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கும் கவலை தெரிவித்துள்ளார்.

தேடுதல் வேட்டையில் பாதிப்பு

தேடுதல் வேட்டை நடந்து வரும் பகுதியில் வானிலை மோசமாக இருப்பதால் தேடுதல் வேட்டையில் பெரும் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் மாலை நெருங்கி வருவதால் தேடுதல் படையினர் பெரும் கவலையடைந்துள்ளனர்.

ராணுவத்தில் பணியாற்றியவர் டோர்ஜீ

ராணுவத்தின் உளவுப் பிரிவில் பணியாற்றியவர் காண்டூ. வங்கதேசப் போரின்போது முக்கியப் பணியாற்றியவர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். சீனாவின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, தலாய் லாமாவை தவாங் பகுதிக்கு சில மாதங்களுக்கு முன்பு அழைத்து வந்தார் காண்டூ என்பது நினைவிருக்கலாம்.

2வது முறையாக முதல்வர் பதவியை வகித்து வரும் காண்டூ, அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் 6வது முதல்வர் ஆவார்.

முதல் முறையாக 2007ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். கெகாங் அபாங் ராஜினாமாவைத் தொடர்ந்து டோர்ஜி முதல்வரானார். பின்னர் 2009ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்டோபர்25ம் தேதி 2வது முறையாக முதல்வர் ஆனார்.

  
பழைய ஹெலிகாப்டரா?

டோர்ஜீ பயணம் செய்த ஹெலிகாப்டர் மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது. ஆனால் அதை பவன் ஹன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் நான்கு மாதங்களுக்கு முன்புதான் வாங்கப்பட்டது. வி.ஐ.பிக்களின் பயணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது
ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியும்... ஹெலிகாப்ட்டர்  விபத்தில் தான் மரணமடைந்துள்ளார் என்பது குறிபிடதக்கது...
அருணாச்சல முதல்வரின் ஹெலிகாப்ட்டர் மாயமாகி இருப்பதால், அரசியல்வாதிகளும் மக்களும் பீதியடைந்துள்ளனர்!
IP